Author Topic: நம் காதல்  (Read 459 times)

Offline NavYa

நம் காதல்
« on: August 22, 2016, 05:48:59 PM »
கடற்கரையில் மணலாக நான் இருந்தேன்
என்னை தழுவி செல்லும் அலைகளாக
நீ இருந்தாய் .....

பேருந்து நிலையத்தில்
பயணியர் குடையாக  நான் இருந்தேன்
குடையின் கீழ் இருக்கையாக
நீ இருந்தாய் ....

பூங்காவில் வீசும் காற்றாக நான் இருந்தேன்
அசையும் மரமாக
நீ இருந்தாய்..

உணவு  அங்காடியில்
பிரியாணியாக  நான் இருந்தேன்
லெக் பீஸ் ஆக
நீ இருந்தாய் ....

தேநீர் அங்காடியில்
தேநீராக நான் இருந்தேன் ...
அதில் மிதக்கும் நுரையாக
நீ இருந்தாய்...

திரை அரங்கில் பாப் கார்ன்னாக
நான் இருந்தேன் ..
பெப்சியாக நீ இருந்தாய் .....

உன் கைபேசியில் இன்கமிங் அழைப்பாக
நான் இருந்தேன்..
என் கைபேசியில் மிஸ்ஸுடு அழைப்பாக
நீ இருந்தாய்..

இப்படி ஒவ்வொரு இடத்திலும்
நீயும் நானுமாக போய்க்கொண்டிருந்த
நம் காதல் கடைசியில்
ரயில் நிலையத்தில் தண்டவாளமாய்
நான் நிற்க - தொடர்வண்டியாக
நீ இன்னோருவனுடன்
போயிக்கொண்டிருக்கிறாய் ....

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: நம் காதல்
« Reply #1 on: August 22, 2016, 05:56:15 PM »
அட ...

கரும்பாய் ஒரு குறும்புக்கவிதை !!

தொடர்ந்து எழுதவும் !! 

Offline SweeTie

Re: நம் காதல்
« Reply #2 on: August 22, 2016, 07:12:06 PM »
என்ன குறும்பு  என்ன குறும்பு.    நவ்யா இப்பிடி பண்ணிடிங்களேமா ....
சூ .....ப்பர் .....வாழ்த்துக்கள்.

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: நம் காதல்
« Reply #3 on: August 24, 2016, 01:02:15 PM »
கண்கள் பார்த்து கவிதை படிக்க..
இறுக்கமான உதட்டில்
இனிய புன்னகை தோன்றுகிறது......
கவிதையில் நகைச்சுவை!
கருத்திற்கு  இன்சுவை !!.
இன்னும் பலகவிதை பாடுங்க !.
போஸ்டா அதையிங்கே போடுங்க !!..
.

Offline Karthi

Re: நம் காதல்
« Reply #4 on: August 27, 2016, 02:01:08 AM »
enamaa yosichirukinga :P
« Last Edit: August 27, 2016, 02:08:46 AM by Karthi »