கடற்கரையில் மணலாக நான் இருந்தேன்
என்னை தழுவி செல்லும் அலைகளாக
நீ இருந்தாய் .....
பேருந்து நிலையத்தில்
பயணியர் குடையாக நான் இருந்தேன்
குடையின் கீழ் இருக்கையாக
நீ இருந்தாய் ....
பூங்காவில் வீசும் காற்றாக நான் இருந்தேன்
அசையும் மரமாக
நீ இருந்தாய்..
உணவு அங்காடியில்
பிரியாணியாக நான் இருந்தேன்
லெக் பீஸ் ஆக
நீ இருந்தாய் ....
தேநீர் அங்காடியில்
தேநீராக நான் இருந்தேன் ...
அதில் மிதக்கும் நுரையாக
நீ இருந்தாய்...
திரை அரங்கில் பாப் கார்ன்னாக
நான் இருந்தேன் ..
பெப்சியாக நீ இருந்தாய் .....
உன் கைபேசியில் இன்கமிங் அழைப்பாக
நான் இருந்தேன்..
என் கைபேசியில் மிஸ்ஸுடு அழைப்பாக
நீ இருந்தாய்..
இப்படி ஒவ்வொரு இடத்திலும்
நீயும் நானுமாக போய்க்கொண்டிருந்த
நம் காதல் கடைசியில்
ரயில் நிலையத்தில் தண்டவாளமாய்
நான் நிற்க - தொடர்வண்டியாக
நீ இன்னோருவனுடன்
போயிக்கொண்டிருக்கிறாய் ....