Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 017  (Read 4138 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 017


இந்த களத்தின்  நிழல் படத்தை குங்க்பு(F) மாஸ்டர்   வழங்கி உள்ளார் ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


« Last Edit: October 11, 2018, 07:01:34 PM by MysteRy »
                    

Offline thamilan

புயலில் சிக்குண்ட மரமாக‌
உதிர்ந்தது என் இளமைக் கனவுகள்

ப‌ல‌ப்ப‌ல‌ க‌ன‌வுக‌ளுட‌ன்
வித‌வித‌மான‌ க‌ற்ப‌னைக‌ளுட‌ன்
தூக்க‌த்தை ம‌ற‌ந்து உண‌வை துற‌ந்து
வெறியுட‌ன் ப‌டித்து நான் பெற்ற‌ ப‌ட்ட‌ம்
காற்றில் ப‌ற‌க்கும் ப‌ட்ட‌ங்க‌ளாக‌

ப‌ட்ட‌த்தால் ப‌த‌வி கிடைக்கும்
என‌ நினைத்தேன்
அந்த‌ ப‌த‌விக்கும் ஒரு தொகை
ரொக்க‌ம் கொடுத்தால் தான் கிடைக்கும்
என‌ ஒரு அவ‌ல‌நிலை

ப‌டித்தால் ப‌த‌வி கிடைக்கும்
ப‌த‌வியால் ப‌ண‌ம் கிடைக்கும்
என‌ நினைத்தேன்
ப‌ண‌ம் தேட‌த்தானே ப‌த‌வி
அந்த‌ ப‌த‌விக்கே ப‌ண‌ம் கேட்டால்.....

தொழிலின்றி ப‌ண‌மின்றி
தொலைந்து போன‌து என்
தூக்க‌மும் நிம்ம‌தியும்
இல்லை என்று வ‌ந்துவிட்டால்
சொந்த‌மும் இல்லை ப‌ந்த‌மும் இல்லை

சூனிய‌மான‌து என் வாழ்க்கை
ம‌ழை மேக‌மான‌து என் க‌ண்க‌ள்
இந்த‌ ப‌ட்ட‌ ம‌ர‌ம் கூட‌
ஒரு நாள் த‌ளிர்க்கும்
என் வாழ்க்கை த‌ளிர்க்குமா
சொல் இறைவா சொல்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தனிமை, வெறுமை,கொடுமை ,விரக்தி
விரக்தியின் வெளிப்பாடாய் எப்போதாவது
ஒன்றிரண்டு கிறுக்கல்கள்
(கவிதை ) எனும் அடைமொழியில் .

சமயத்தில், என் சமகால ஜீவன்களை
வேடிக்கையாய் வேடிக்கை பார்ப்பேன்
சமயத்தில் , ஆச்சரியமாய் அசந்தும் ,,,

இப்படிதான் இருந்து வந்தது
தனிமையாய்,வெறுமையாய்,விரக்தியாய்
வெறிச்சோடி போயிருந்த என் வாழ்கை

அலுவலக அலுவல்கள் அரை பொதி
குறைந்த ஓர் நாள் , அப்படியே காலாற
இல்லாவிட்டாலும்  மனதார
ஒரு அலசல் இணையத்தில் ...

இணையம் ஒரு கடல் என்பார்கள்
பல இடத்தில் இவ்வரிகளை படித்ததுண்டு
உண்மையில், அவ்வரிகள்  எத்துனை உண்மை  என்று
உள்ளத்தாள் உணர்ந்து உவந்தேன்   அன்று

ஆம், அன்றுதான் அந்த அதிசயம் அரங்கேற்றம்
இணையம் எனும் பெரும் கடலில்
நான் விரித்த அலசல் வலையில் வாய்த்தது
"FTC" எனும் விலைமதிப்பற்ற முத்து

முத்தாய் கிடைத்த முத்தான மன்றத்தில்தான்
எத்துனை எத்துனை இன்ப சொத்துக்கள்
அவ்வின்ப சொத்துக்களில் ஏதோ
என் சார்பாகவும் இது போன்ற
ஒரு சில ஓட்டை காலணாக்கள் !

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
உன்  வருகைக்காகவே  காத்திருந்த
தருணங்கள்  இனிமையானது
உன்னுடன்  பேசவே  பூமாலையாக
வார்த்தைகளை  தொடுத்து  காத்திருகிறேன்
நீயும்  வந்தாய் நீயே  என்  உலகம்  என்று
கொஞ்சலாய்  சொன்னாய்
நீயே  என்  மொத்த  உறவும்  என்றாய்
நானும்  பூரித்து  போனேன்
உயிர்  உள்ள  வரை  உன்  வாழ்க்கை
என்னோடு  என்றாய்
என்  உயிரிலே  உன்னை  கலந்தேன்
இன்றோ
கூண்டு  கிளியாய்   இருக்கிறேன்
சிறையில்  அடைபட்ட மானை
தவிக்கிறேன்
சிறகொடிந்த  பறவையாய i
நிற்கிறேன்
என்  உலகம்  சுழல  மறந்தே  போனது
பட்டு  போன  மரமும் 
சலனம்  இல்லாத  நீர்  ஓடையும்
ஆற்றங்கரை  மணலும்
தன்னையே  அழித்து (தேய்பிறை ) கொண்டு  இருக்கும்
நிலவும்
மட்டுமே  என்  உறவாக ...
என்  உயிரில் உன்னை  கலந்தேன்
என்  உயிரை  களவாடி  சென்றவள்  நீ
நானோ  நடை  பிணமாக ...
இன்னும்  எத்தனை யுகங்கள் 
இந்த  தனிமை  சிறை
எனக்கு
பல  யுகங்கள் உனக்காகவே
ஜென்மம்  எடுத்து காத்திருக்கிறேன்
எந்த  ஜென்மத்திலாவது
நீ  என்னை  தேடி  வருவாய்  என்று ......

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline supernatural

இன்னல்கள்  பல கடந்து ...
போட்டிகள்  பல வென்று  ....
வாழ்கையில்   முன்னேற ...
முயன்றேன்   ...
வெறித்தனமாய் ..

சாதிக்கும்  வெறியின் ...
நடுவே ...
என்னை  நாடி
என்னகாக வந்த ....
அன்பை......
நேசத்தை ....
ஓதிக்கினேன் ....
உதாசீனபடுதினேன்......

இன்று ...
வெற்றிகள்  பல வந்து ..
காலடியில்  விழுந்தாலும் ...
மனதில்  ஒரு வெறுமை...

அனைத்தும்  கிடைத்தும்.....
எதையோ  தொலைதவனாய்...
ஏக்கத்துடன் வாழ்கிறேன்.....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Bommi

எழு மனிதா  எழு..........
துக்கத்திலிருந்து விழிப்பது அல்ல
மனிதன் மாசு அகற்றி மாசில்லா
இதயத்தோடும் உறவாடுவதே எழுச்சி
எழு மனிதா  எழு.........

எழு மனிதா  எழு..........
உன்னில் உள்ள அகங்கார இருட்டிலிருந்தும்
பொறாமை எனும்  சுடுகாட்டிலிருந்து
உண்மை எனும் விளகேற்ற
எழு மனிதா  எழு.........

எழு மனிதா  எழு.........
சூரியன் எழுந்தது எனில் இருள் ஓடி விடும்
உன்னில் அறிவு ஒளி வந்ததெனில்
இருள் ஓடிவிடும்
எழு மனிதா  எழு.........

எழு மனிதா  எழு.........
எழுது இதயத்தை ஏடாக்கி  எழுது
துடிக்கும் இதயம் நின்றாலும்
வெடிக்கும் உன் வெற்றி  பயணம் தொடரும்
எழு மனிதா  எழு.........

எழு மனிதா  எழு.........
காலை  பொழுது மிகவும் ரம்யமானது
அதிகாலை பொழுது சூரியன் உதயமாய்
உலகிற்கு ஒளியாய் நீ ! என்றும் ஒளிர
எழு மனிதா  எழு.........


என்றும் உங்கள்
   சனா sana

« Last Edit: March 22, 2012, 06:55:17 PM by Bommi »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
காத்திருப்பு

இனிய நண்பன் நம்
இணைய நண்பன்
இணைத்த புகைபடத்திற்கு
காதலுக்கான காத்திருப்பாய்
கூறினால் சுவைதான் - ஆனால்
காதல் தோல்வி
ஒருதலை காதலென
இருவேறு கவிதையில் கூறிவிட்டதால்
கவிபுனைவதெப்படி என
காத்திருந்த வேளையில்
கன நேரத்தில் வந்த காத்திருப்பு
விடியலுக்கான காத்திருப்பு...

தானாய் வந்த
தானே புயலால்
தன் வாழ்விழந்த
தன்னலமற்ற தந்தையை இழந்த
தமிழனின் காத்திருப்பு...

அந்த காத்திருப்பு
பணிக்கான காத்திருப்பு அல்ல
காதலுக்கான காத்திருப்பும் அல்ல
காலனுக்கான காத்திருப்பும் அல்ல ஏழை
விவசாய மைந்தனின்
விடியலுக்கான காத்திருப்பு

அவன் நன்றாக படித்தும்
பணிக்கு செல்லாமல்
இந்தியாவின் முதுகெலும்பான
விவசாயத்தில் புதுமை நிகழ்த்திட
தந்தை வழியில் விவசாயம் மேற்கொண்டான் .

ஆழ உழுதான்
அழகாக விதை விதைத்தான்
விதைக்கு நீர் இட்டான்
செடி வளர களை பறித்தான்
எல்லா இடமும் பசுமைஆக்கினான்

இயற்க்கைக்கு மதிபளித்து
இயற்க்கை உரமிட்டான் பயிர் வளர
அறுவடை தருணம் வரை
எல்லாவற்றுக்கும் கடன் பட்டான்

பயிர்களின் வளர்ச்சியை கண்டு
கடன் தீர்ந்திடும் என அகமகிழ்ந்தான்
எல்லாவற்றுக்கும் முட்டுகட்டையாய்
வந்தது இயற்கை சீற்றம் .

கருமேகங்கள் ஒன்றாய் திரண்டு
பெருமழை பெருவெள்ளம்
பெரும்புயல் வந்து
பசுமை மரங்கள் பட்டமரமாகிட
பயிர்கள் நீரில் மூழ்கிட...

அல்லும் பகலும்
அயராது உழைத்தும்
அறுவடை முடிக்காமல் போனோமென
அல்லலுற்றான் ..

நீர் வடிந்தால் அறுவடை நிகழ்திடலாமென
நீரை வடிகாலுக்கு வெட்டி விட்டான்
நீரும் வடியவில்லை
நித்தம் அவன் வாழ்வும் விடியவில்லை

ஆராய்ந்தான் நீர் வடியாத காரணத்தை
மேட்டுகுடிகள் வாய்க்காலை ஆக்கிரமித்ததன் விளைவு
சிந்தித்தான் திட்டம் தீட்டினான்
சந்தித்தான் அரசு அதிகாரியை
மனு கொடுத்தான் அரசுக்கு.

அதிகாரிகளும், அரசியலாளர்களும்
திட்டம் தாம்
தீட்டியதாய் பிதற்ற
திட்டம் தொடங்கியது

நூறு நாள் வேலை நாளொன்றுக்கு
நூறு ரூபாய் சம்பளம்
திட்டம் யார் தீட்டினால் என்ன நம்
திண்டாட்டம் குறைந்தால் சரி

அங்கும் வந்தது ஆபத்து
மேட்டுகுடிகள் தாங்களும் வேலையில்
ஈடுபடுவதாய் சொல்ல
நமக்கு வேலை நடந்தால் போதுமென நம்பினான்

வந்த மேட்டுகுடிகள் வேலை செய்யம்மல்
அதிகாரியோடும்
அரசியல்வாதியோடும் பேரம் முடிதிட்டார்கள்
எனக்கு 60 உனக்கு 40

அரசுக்கு தெரிவிப்பதெப்படி அதிகாரி பயந்தான்
அரசே நாங்கள்தான் என்றான்
அரசியல்வாதி அவன் அரசியல்வியாதி
அடி பணிந்தான் அதிகாரி

வெட்டாத வாய்க்காலை வெட்டிவிட்டதாய்
கோப்பு தயாரித்தான் அதிகாரி
பணக்கார மேட்டுக்குடி கையெழுத்திட
பாமரனுக்கு கைநாட்டை தவிர வேறு என்ன தெரியும்

பாமரன் எதற்கு கைநாட்டு என்றான்
பணபட்டுவாடா ரசீதென
பாங்காய் தெரிவித்தான் அதிகாரி
பாவப்பட்டவன் ஏதும் விளங்காமல் கைநாட்டிட்டான்.

ஒவ்வொரு ஆண்டும் வாய்க்கால்
வெட்டுவதாய் திட்டம் நடக்கும்
தூர்ந்து போன வாய்க்காலை
தூர் வாருவதாய் ஆனால்

வாய்க்காலும் வெட்டியபாடில்லை நீரும்
வடிந்தபாடில்லை
வாய்க்கால் புதுபித்த்துவிட்டதாக
வருடா வருடம் அரங்கேறும் அரசின் கோப்புகளில்

பிரிந்து சென்ற காதலியின்
நினைவுகளை காதலன்
அசைபோடுவது போல்
கலங்கி காத்திருந்தான் கடன்பட்டவன்

விடியல் வெகுதொலைவில் இல்லை
விடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்
காத்திருந்தான்
விடியலை நோக்கி.

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
உடல் பட்ட காயத்தால் வரும் வலியை விட மனம் படும் காயத்தால் வரும் வலிகள் ரணமானவை. இன்பத்திலும் துன்பத்திலும் கைக்கோர்த்து நடைபோட்ட ஒரு நண்பன் திடீரென பிரிந்து போக, பிரிவின் முட்களில் சிக்கித்தவிக்கும் ஒரு மனதின் வலி நிறைந்த வரிகள் இங்கே கவிதை வடிவில்...


வலி

என்னோடு நீ இருந்த
முப்போழுதுகளும்
புன்னகையும் பூரிப்புமாய்
நடை போட்டன
கண்ணீரும் கவலைகளும்
மறந்தோடின!

கேலியும் கிண்டலுமாய்
எத்தனை எத்தனை
அரட்டைகள் செய்தோம்
எண்ணி எண்ணி
நகைக்கிறேன் அந்த
முத்தான நிகழ்வுகளை!

ஏதோ ஒரு புள்ளியில்
இனிமையாய் அறிமுகமாகி
அளவான வேகமெடுத்த
நம் நட்பெனும் பயணம்
நித்தமும் கடந்து வந்த
வேகத்தடைகள் பலப்பல!

எத்தனை தடைகள்
வந்தென்ன செய்யினும்
ஓடும் தண்ணீரில்
எதிர் நீச்சல் போடும்
மீன்களைப் போல
துள்ளித் திரிந்தோம்!

காற்றை எட்டிப்பிடித்து
கடிவாளங்கள் போடக்
கற்பித்தது உன் அன்பு
கடிவாளங்களை கூட
பூமாலை ஆக்கியது
உன் ஆழமான நட்பு!

தென்றலின் வீதியிலே
தெனவெட்டாய் நடைபோட்டு
நட்பெனும் வான்வெளியில்
சிறகு விரிக்க நினைக்கையிலே
நீ மட்டும் பறந்துபோனாய்
திசை அறியாமல்!

நித்தம் நித்தம்
இணைந்திருந்த கரங்கள்
திடீர் தனிமையால்
பனிமழையில் சிக்குண்ட
வலுவிழந்த மேனி போல
நடுங்கத் துவங்கின!

கண்ணீரின் சுவடுகள்
மறைந்துபோன என்
வறண்ட முகத்தில்
மீண்டும் கண்ணீரின் ஓட்டம்
துடைக்க உன் விரலின்றி
நிற்க மறுக்கிறது!

பாலைவன மணலில்
துவண்டு போன புழுபோல
நீ தந்த பிரிவென்னும்
தீப் பிழம்பினிலே
வலியோடு எரிகிறது
இறந்துபோன என் மனது!

கண்ணீரும் வற்றிப்போக
என் வறுமையின்
நிலையைக் கண்டு
என் பேனா முனையும்
கண்ணீர் விட்டழுதது
கவிதை வரிகளாய்!

உயிருள்ள மனமே
வலிதாங்காத பொழுது
உயிரற்ற பேனா மட்டும்
என்ன செய்ய கூடும்
பேனா மை தீர்ந்ததும்
படுத்துக்கொண்டது ஓரமாய்!

எப்படி சொல்லி அழ
என் வலியின் வாழ்கையை
கற்பனையில் வந்த
கவிதைகள் கூட
வலுவிழந்து போனது
வற்றிப்போன வார்த்தைகளால்!

பார்க்கும் திசை எல்லாம்
உன்னைத்  தேடி அலைகிறது
என் வெறிச்சோடிய விழிகள்
என் சுவாசங்கள் கூட
தேடித் திரிந்தன உன்
மூசுகாற்றை கண்டறிய!

தனிமையில் காத்திருக்கிறேன்
தொலைந்து போன
நம் நட்பைத் தேடி
விரைவாய் வந்துவிடு
கரைந்து கொண்டிருக்கும்
என் உயிர் பிரிவதற்குள்!
« Last Edit: March 25, 2012, 02:43:42 PM by KungfuMaster »

Offline Global Angel




எங்கோ தொலைவில்
நான் இருந்தாலும்
என்னுள் நான் வாளர்த்த காதல்
உன்னுள் விதையாகி
மரமாகி காய்த்து
கல கலவென பூத்து
சிரித்து மணம் வீசியது
எனக்கு மட்டும்
தெரியாமல் போகுமா ...??


தொலைவில் இருந்து
நான் நீட்டிய  காதல் கரத்திற்கு
மனதுள் காதலை வைத்து
நேசக் கரத்தை நீட்டிய
உன் கரங்களை
ஸ்பரிசித்த போதே
உன் கரங்களின் ஊடே
என்னால் களவாடபடட
இதயத்தியும் ஸ்பரிசித்து கொண்டேன் ...


சம்பிரதாயங்களுக்கு கட்டுபட்ட நீ
உன் சல சலக்கும் சலனங்களுடன்
சரி சமமாய் போராடும்
சமர் சத்தங்களும் எனக்கு கேட்கும் ...
உன் ஆசைகளை உதிரிகள் ஆக்கி
என் அன்பினை துளிராத பட்டமரமாக்கி
வழிந்தோடும் கண்ணீரை
கரை புரளும் நதியாக்கி
வாழ்வை தொலைத்தவன் போன்று
வான் பார்க்கும் உன் சிரசும்
தரை பார்க்கும் தருணத்தை தந்தேனோ ...?


இனியவனே ... உனக்கு
இனிமைகளை சொந்தமாக்கத்தன் நினைத்தேன்
நீ என் நினைவுகளை சொந்தமாக்கி ஊமையானதேன்
கனவுகளை சொந்தமாக்க நினைத்தேன்
கலங்கும் கண்களை சொந்தம் கொண்டதேன் ...


தென்றலை தூது அனுப்புகின்றேன்
என் சுவாசத்தை நீ சுவாசித்து கொள்....
என் நினைவுகளை பரிசாக கொடுத்தனுப்பு
உன்னை சுடும் என் நினைவுகள்
உன்னிடம் வேண்டாம் .....


நினைவுகளுடன் வாழ்வது
என்னோடு போகட்டும்
நீயாவது நிஜங்களோடு வாழ்ந்துவிடு ...
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 116
  • Total likes: 116
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என் இனிய தோழனே
நான் சோர்ந்து
இருக்கும் நேரத்தில்
துயர் துடைக்க மறந்ததில்லை
உன் கரங்கள் ...

நான் தவறிழைக்கும் நேரத்தில்
தண்டிக்கும்
தந்தையாய் நீ...
பாசத்தை தருகையில்
அன்னையும் ஆனாய்...

நட்பை கூட தப்பாக
கருதும் உலகில்
நட்பை நட்பாக தந்தவன் நீ ...

துயரமான நேரத்தில்
நான் தேடி அலைவது
உன்னை மட்டுமே...
உன்னோடு இருக்கையில்
துக்கத்தை தொலைந்து
மகிழ்ச்சியை மட்டுமே
அளவில்லாமல் தந்தாய்...

தனிமை கோலம்
உன்னகெதர்க்கு
தோல்வி கண்டு
கலங்கி  போனாயோ
தோள் கொடுக்கும்
தோழியாய் நான் இருக்க
கலக்கம் ஏன் உனக்கு....

சோகத்தில் துவண்டு விடாதே...
முயற்சியை கைவிட்டு
எதை நோக்கி உன் அமைதி
மூலையில் அமர்ந்து
எதனை தேடுகிறாய்....

இலையுதிர்ந்த மரம்
நிழல் தரும்
என நினைத்தாயோ...

அமைதியை விட்டு
தனிமையை மறந்து
வெற்றி தரும்
முயற்சியை நோக்கி
உன் பயணம் அமையட்டும்...

உன் துக்கத்தில் மட்டுமல்ல
உன் வெற்றியில்
மகிழ்ச்சியை பகிரும்
உறவாய் என்றும் உன் தோழியாக
நான் இருப்பேன்
என் வாழ்வின் இறுதி வரை...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

அழகான கடற்க்கரை
அமைதியான சூழல்
என் மனமோ...
அமைதியற்ற நிலையில்!

இதற்க்கு காரணம்
தொழில்நுட்ப வளர்ச்சி
நவீன மயமாக்கல் என்று...
கூடங்குளம் அணு உலையால்
எங்கள் வாழ்வாதாரத்தை
பறித்தது அரசாங்கம்!

கடலையும் அதன்
வளத்தையும் நம்பி வாழும்...
எங்களின் வாழ்க்கையை
கேள்விக் குறியாய்? மாற்றியது
இந்த அரசாங்கம்!

அணு உலையால் ஆபத்தில்லை...
என்று பொய் சாக்கு சொல்லும்
அரசாங்கமே!

போபால் விசவாயு
விபத்தை திரும்பிப்பார்...
அங்கு பலியானவர்களின் இழப்பிடோ
ரூபாய் இருபத்தைந்தாயிரம்...
ஒரு மனித உயிரின் விலை
இது தானா?

இன்னும் போபாலில்
ஊனமாக பிறக்கும்
பச்சிளம் குழந்தைகள்
அவர்கள் செய்த...
பாவம் தான் என்ன?

அவர்கள் இந்தயர்களாய்
பிறந்தது பாவமா? இல்லை
மனிதர்களாய் அதுவும்
போபாலில் பிறந்தது பாவமா?

ஆளும் வர்க்கத்திற்காகவும்
அதிகார வர்க்கத்தின்
இலாபத்திற்காகவும் அப்பாவி...
மக்களை பலிகடா
ஆக்கியதேன்?

இந்நிலையில் அணு உலை
பாதுகாப்பானதென்ற பொய்
பிரச்சாரத்தை எவ்வாறு...
நம்புவது நாங்கள்?

சுய நலம் பிடித்த
அரசாங்கமே!
அதிகார வர்க்கமே!
இவர்களுக்கு கோடி பிடிக்கும்
அறிவு கேட்ட மடையர்களே!

உங்கள் சுய நலத்திர்க்காய்
எங்களை ஏன்
பலிகடா ஆக்க
முனைகிறீர்கள்!

தொழில்நுட்பமும்
விஞ்ஞான வளர்ச்சியும்
மக்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்துவதாக இருந்தால்
அதுதான் விஞ்ஞான வளச்சி!

மக்களை அழிப்பதற்கு
பெயர் விஞ்ஞான வளச்சி அல்ல
அது விஞ்ஞான வீழ்ச்சி!

இதை தட்டி கேட்கும்
நாங்களெல்லாம் தேச துரோகிகள்
இது எங்களுக்கு கிடைத்த பட்டம்!

எல்லை கோடுகளை நேசிக்கும்
போலி தேச பக்தியாலனாய்
இருப்பதை விட...
மனிதர்களை நேசிக்கும்
தேச துரோகியாய்
இருப்பது மேல்!

இந்த அழகான கடலை
அமைதியான இரவை
மீண்டும் பார்ப்பேனா என்று...
எனக்கு தெரியாது!

என் வேதனையை
கவிதை வரிகளாய்
கொட்டுவதை தவிர...
வேறென்ன செய்திட
இயலும் என்னால்!