Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 027  (Read 3882 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 027


இந்த களத்தின்

இந்த  நிழல் படம் vimal  அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


« Last Edit: October 11, 2018, 07:26:22 PM by MysteRy »
                    

Offline Tamil NenjaN

உன்தோள் சாய்ந்திருக்கிறேன் நான்

ஏகாந்தமான இரவில்
எங்கோ ஓர்
தனிமையில் நான்

ஓடிக்களைத்த
அலுப்புடன் சலித்துப்போன
என் வாழ்க்கை

இருண்டுகிடக்கும்
இரவைப் போன்று
துவண்டு கிடக்கும்
என் கனவுகள்

கடலில் எறியப்பட்ட
கல்லாய்
ஆழத்தில் அமிழ்ந்துபோன
மனதின் துயரங்கள்

எல்லாமாய் இருந்தும்
ஆறுதல் தர நீயிருக்கின்றாய்
எனக்கில்லை வாழ்வில்
ஒருபோதும் தோல்வி

சாய்ந்திருக்க மரமாய்
நான் சாயும் தோளாய்
ஆறுதல் தரும் அணைப்பாய்
அரவணைக்கும் கரமாய்
உன் அருகாமையில்
புதுப்பிக்கப்படும் என் கனவுகள்

நிலவும் வானும்
இருண்டே கிடந்தாலும்
நம் வாழ்க்கை மட்டும்
ஒளிவீசும் நாளை‍...
நீயருகிருந்தால் போதும்
என் காலடியில்
உலகம் இருக்கும்

தூரத்தே தெரியும்
கருக்கட்டிய மழைமேகமாய்
கனவுகள்
எனக்குள் காத்திருக்கும்
நாளைய பொழுதொன்றில்
நமக்காய் வசப்படும் வெற்றிகள்
முகையவிழ்க்க காத்திருக்கும்
நம்பிக்கைகளுடன்
உன்தோள் சாய்ந்திருக்கிறேன் நான்

Offline supernatural

உன்னை என்னில் சுமந்து...
உனக்காய் வாழ  துடித்தது..
என் இதயம் ....
காதலியாய் உன் வருகையை ....
மலர் தூவி  வரவேற்றது ....

உன்னை காணும் பொழுதுகளில்...
உன் பார்வை படும் நொடிகளில்...
நான் என்னை மறந்தேன் ....
எனக்கானதாய் இருந்த அனைத்தையும் வெறுத்தேன்...
என்னவள் உன் ஒருத்திக்காக ...

இப்படி நீ...உன் காதல்..உன் அன்பு ...
என நித்தமும் உன் நினைவுடன் ...
காதல் கனவில் ஆனந்தமாய் ...
உலா வந்தேன்...
அது வெறும் கனவு மட்டுமே...
என்னும் உண்மையை அறியாமல் போனேன் ..
காதலி   உன் ஏமாற்று .....
வித்தையை உணராமல் .....

காதல் ..காதல்..காதல்...
என முப்பொழுதும் காதல் போதையில்
வெறுமையாய்  போனதே .
வாழ்வில் வசந்தகாலமான . ..
என் இளமைக்காலம் ..

இன்று  அனைத்தும் தொலைத்து...
பட்டை மரம் ...
அதனை  துணை கொண்டு...
அதன் நிழலில் அமர்ந்து ....
உயிரற்று போன கடந்தகாலத்தை...
சிறிதாய்  எண்ணோட்டம்  விட்டு ...
கடந்து வந்த ஏமாற்ற்றத்தை எண்ணி ....
குமுறுகிறது மனம்...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உன்னோடு பேசாத பொழுதுகளில்
எத்தனை வேலை பளுவில் இருந்தாலும்
என் மனம் என்னவோ தனிமை தீவினில் .....

தனிமையிலே இனிமை காண முடியுமா??
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?

பாடலாசிரியர் கே .டி.சந்தானம்

ஆசிரியர், காதல் வயபட்டிருக்கமாட்டார் போலும் ??

நினைவில் உன்னை போல நீங்காத நினைவுகளின்
சொந்தக்காரி இருந்திடும் பொழுது

தனிமைகளுக்காக தவம் இருக்கலாம் எனும்
உணர்வுப்பூர்வ  உண்மையை உணரவும் இல்லை  போலும் ??
 
என்னத்தை தான் பேசுகின்றோம் மணிக்கணக்கில் ?
உள் மனசாட்சியின் கேள்வி இது ...

மனதை ஆட்சி புரியும் அவளோடு மனம் கலந்து
எங்கள் எண்ணத்தை பேசுகின்றோம் என

 நான்அளித்த பதிலை கேட்டு ,மனசாட்சியும்
மனசாட்சியின் மனசாட்சியும் மௌனம் ஆகிவிட்டது

உன் நினைவுகளுக்கு தான் எத்தனை வீரியமடி .....
« Last Edit: June 14, 2012, 04:36:36 PM by aasaiajiith »

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
என்னவளே !
கண்ணிலே உனை வைத்து
நெஞ்சிலே உனை சுமந்து
ஜென்மம் கடந்து வாழ நினைத்த
எனக்கு, நீ கொடுத்த நினைவுப் பரிசு
தனிமை ஒன்றே :( :( :(

வீட்டில் என் அறை சொன்னது 
ஒருமுறையாவது என்னை
தண்ணீரால் கழுவு,
நான் தினமும் உன்னால்
உப்புப் பூர்க்கிறேன் என்று,
அவ்வறைக்கு தெரிந்த எனது
கண்ணீர் உனக்கு தெரியவில்லையா  :'( :'( :'(

என் வீட்டு மொட்டை மாடி கூட
அழுதது வானிடம் கடன் வாங்கி,
நீ என் மீது நடந்து நான் தேய்ந்ததுதான்
மிச்சம் என்று,
மாடிக்கு தெரியாமல் போனது அது
என் கண்ணீர் என்று பெண்ணே
உனக்குமா ! :'( :'( :'(

நான் காணும் கனவு என்னிடம்
மண்டியிட்டது,
பலர் கனவிலும்,நினைவிலும்
சந்தோஷமாய் திரிந்த எனக்கு,
நீ கொடுத்த பரிசு கண்ணீர் என்று!
என் கனவே நீயுமா நான் தனிமையில்
தூங்குவதில்லை என்பதை அறியாமல், :'( :'( :'(

இரவுக்கும் நிலவுக்கும் தெரியும்!
உன் தனிமையில் தூக்கம் தொலைத்து,
உன் நினைவில் மட்டுமே பசியாறி,
திசையறியாமல் கடலில் திக்கு
முக்காடுகின்றேன் என்று!
அது வெறும் கடல் அல்ல
என் கண்ணீர் கடல்! :'( :'( :'(

என் உயிரையே தொலைத்த என்னிடம்,
நான் நீருற்றி வளர்த்த என் தோட்டம்,
எனக்கு நீருற்று,
உப்புநீரால் நான் உலர்ந்து விட்டேன்,
என் இலைகள் எனக்கு
உரமானபோதும் என்றது, :'( :'( :'(

என் இதயம் கேட்டது!
நான் எவ்வளவு அழுத்தம் தாங்குவேன்
அவள் போல் கல்லா, என்
இரத்த நாளம் கூட நான்காகி விடும்
உன் தனிமையின் தவிப்பால், :'( :'( :'(

அய்யோ!!! தனிமை
எவ்வளவு கொடுமை!
துன்பம் மட்டும் என் உறவாய்
என்னுள் துருத்து,
ஈடு இணையில்லா இன்பம்
எனை விடுத்து,
கண்ணீருக்கு கடன்பட்டவனாய்
காலத்தை தள்ளுகிறேன்
என் உடன் பிறப்புகளுக்காக
உயிரில்ல ஜடமாய்
இம்மண்ணில் மறையும் வரை!!! :'( :'( :'(
« Last Edit: June 16, 2012, 01:41:12 AM by vimal »

Offline Dong லீ

கணினியின் கண் வாயிலா
சந்தித்தேன் ஒரு கன்னியை
 
இணைய தளம் அது எங்களை
இணைக்கும் தளமானது

காதல் எனும் கிணற்றில்
கால்கள் தள்ள பட்டவனாய் 
கண்கள் மூட பட்டவனாய்
கன்னா பின்னா வென
ஆழமாக மூழ்கினேன்

கடிவாளம் போட பட்ட குதிரையாய்
அக்கன்னியை மட்டுமே உலகமென 
உள்ளம் தொடர்ந்தது

கணினியில் கண்டெடுக்க பட்ட காதல்
நோகியாவில் நோக்காமலே தொடர
குறுஞ்செய்திகள் குறுக்கும் நெடுக்கும்
ஓடி திரிந்தது

புன்னகை மறந்து
பொய்யாக குறுஞ்செய்தியில்
பொம்மைகளாய் சிரித்தேன்

இப்படியாக படிப்படியாக
இதயம் எந்திரமாக 
இதோ என் கவிதையில்
இயந்திர வாசனை

இறுதியில் எந்திர காதல்
எளிதில் பழுது பெற
இதோ இங்கே தனிமையில்
நான்

ஆனால் எந்திரமாக
அல்ல
இயற்கையை சுவாசித்து
அதையே நேசிக்கும்
இந்திரனாய்

பேரழகியின் காதல் என
கணினியில் சிறை படாமல்

பேரழகான இயற்கையின் மடியில்
எனக்கே எனக்கென
வரப்போகும் பெண்ணிற்காக
இனிமையாக
நிலவுடன்  சேர்ந்து
நானும் தேய்கிறேன்

என் கவிதையும்
என்னை போல
எந்திர தன்மையை இழந்து
இந்த ஓவியம் போல உயிராகியதே

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
உடம்பு சரி இல்லைன்னு ஊருக்கு பக்கத்துக்கு
மருத்துவமனைக்கு நீ அழைக்க
மாமனுக்கு தலைக்கு மேல வேலைகிடக்கு
நான் சொல்ல வேதனையோடு தனிய போனியே!

என்வேலை முடிஞ்சு வீட்டுக்கு திரும்ப
கார்சப்தம் கேட்ட ஓடிவரும் நீகாணமல் போக
தவித்து போனேன் நான் என்ன ஆனலோ
ஏங்கிபோனேன் நான் !

தாகத்துக்கு தண்ணிதந்த தாயை நான் கேக்க
போன மகாலட்சுமி வீடுவந்து சேரலடா
தனியா போன பொண்ணு தவி தவிச்சு போயிருப்பா
என்னபன்னுறாலோ ஏங்கி போய் நிர்பாளேடா!

ஓடி போய் பாரேண்டா ஒத்தையடி பாதைல
மேகம் கருகுது மழைவர பாக்குது
வயசு பொண்ணு வழிதெரியாமல்  போயிருப்பா
வாழவந்த பொண்ண வருத்தப்பட வைக்காதேட !

ஓடிபோய் பார்த்தேன் மருத்துவமனையில
கதவு பூட்டிஇருக்க கண்கலங்கி போனேனே
ஒத்தையடி பாதையில ஒத்தமரத்து ஓரம் சாய்ந்து
கண்கலங்கி நிக்கிறேனே !

வானம் மூடுதடி கறுத்தமேகம் கூடுதடி
இடிசத்தம் மனதிற்குள் வேகமாய் கேட்குதடி
மின்னல் கண்ணுக்குள் வந்து மின்னி மின்னி செல்லுதடி
வான் மழையை எதிர்பார்த்த வாடிய பயிரை போல !

கறுத்த மேகம்  கொட்டி தீர்க்கும மழையை போல
மூடியவானம் தூறிடும் தூரலை போல
நான் செய்த  தவறை உணர்ந்து மன்னிப்பு கேக்க
தவி தவித்துபோய் நிற்கிறேனே !

என் மனம் புரியலையா ,என் அழுகுரல் கேக்கலையா
நான் விடும் கண்ணீர் மழையாய் உன்மேல பட்டதோ 
அதை பார்த்து ஓடி வரமாட்டயா! என்னை மன்னித்து
ஏற்றுகொள்ளமட்டயா ! என்கண்ணே !!!!!!!!!!
« Last Edit: June 14, 2012, 01:24:31 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline thamilan

திரவியம் தேடி...
உடல் மட்டும் சுமந்து
திரைகடல் தாண்டினேன்
உயிரை மட்டும்
உன்னிடத்தில் விட்டு விட்டு

மாலை வ‌ந்தால்
உல‌க‌த்தை இருள் சூழ்வ‌து போல‌
என் இத‌ய‌த்தை
உன் நினைவுக‌ள் சூழுதே
அங்கே துய‌ர‌ம் வ‌ந்தால்
த‌லை சாய்க்க‌ உன் தோள்க‌ள் இருக்கும்
இங்கே இந்த‌ ஒற்றை ம‌ரம்
தோள் சாய்க்க‌ என‌க்கு துணை

நான் ம‌னித‌னாக‌ பிற‌க்காம‌ல்
ஒரு மேக‌மாக‌ பிற‌ந்திருந்தால‌வ‌து
உன்னிட‌ம் தின‌மும்
த‌வ‌ழ்ந்து வ‌ந்திருப்பேன்
வீசும் காற்றாக‌ பிற‌ந்திருந்தால்
தின‌மும் வ‌ந்து உன்னை த‌ழுவியிருப்பேன்
என்ன‌ ப‌ண்ண‌
பாவ‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ஜென்ம‌மாக‌ பிற‌ந்து விட்டேனே

தொலை தூரம் வந்ததால்
தொலைந்து போனது
என் இனிய காலங்கள்

கடல் தாண்டி வந்ததால்
நான் அடைந்தது
வெறும் பணம் பணம்
நான் தொலைத்தது
அவள் அன்பு
அவள் அரவணைப்பு
மனதுக்கு இதம் தரும் அவள் இனிய வார்த்தைகள்
மன நிம்மதி

பாலையில் நான் இருந்தும்...
வெம்மை என்னை சுடுவதில்லை.
தனிமையில் நான் இருப்பதினால்....
உன் நினைவுகள் என்னை சுடுகிறது.

எட்டி உதைத்தாலும்
காலை சுற்றி வரும்
நாய் போல.... உன்
நினைவுகள் என்னை
சுற்றி வருகிறதே

உன் அருகில்
உன் மனதில்
ஆயுள் கைதியாக
வாழ்நாள் முழுவதும்
இருந்து விட சம்மதம்...இந்த
ஆண்டுகள் இரண்டு கழிய
ஆயுள்கால வேதனை.

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
பருவ வயதில் காதல்
அனைவர்  மனதிலும் வந்து செல்லகூடிய
ஒரு நிகழ்வுதான் என்றாலும்
அனைவரும் காதல் வசபடுவதில்லை
பலர் மனதில் பூட்டியே வைப்பதும்
சிலர் எளிதில் வீழ்ந்து விடுவதும்  பிறகு
ஏன் வீழ்ந்தோம் என தவிப்பதும்
இயற்கை யாகிபோனது...

இதுவரை காதல் கொண்டதில்லை
என்றாலும் சில பல
காதலை கண்டிருக்கிறேன்
நான் கண்ட காதலில்
சிலவற்றை தவிர
பல காதல் ஒற்றுமை இல்லாமல்
ஒட்டாமல் சென்றது அதிகம்
என்பதால் மணமான பின்
மனம்கவர இருக்கும்
கள்ளி  உனக்காகவே
காத்திருக்கிறேன் பெண்ணே..........!

மணமுடித்த பின் வரும் காதலுக்கு
பலம் அதிகம் என்பதாலும்
காத்திருந்து வரும் காதலுக்கு
சுகம் அதிகம் என்பதாலும் 
அந்த வலிமை மிகுந்த காதுலுக்கு
வலியோடு தனிமையில் காத்திருக்கிறேன்......!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Jawa

ஒருதலைக் காதல்

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை

ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்

பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்

நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை