Author Topic: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~  (Read 2653 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #30 on: January 04, 2015, 02:48:10 PM »
நீராகாரம்



தேவையானவை:
 சாதம் வடித்த கஞ்சி  ஒரு கப், சிலுப்பிய தயிர்   அரை கப், முதல் நாள் இரவு வடித்த சாதத்தின் மீது ஊற்றிய நீர்  ஒரு கப் (சாதத்தை நன்கு கிளறி அது மூழ்கும் வரை நீர் விடவும்), உப்பு  தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம்  ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை (வெங்காயம் தவிர) நன்கு கலந்து விளாவி, வெங்காயம் தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், பச்சை மிளகாயை கடித்துக்கொண்டு நீராகத்தை பருகலாம். இது கிராமத்தினர் பலரின் வழக்கம்.