Author Topic: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~  (Read 2652 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #15 on: January 04, 2015, 02:27:31 PM »
பாசிப்பருப்பு  இஞ்சிக் கடைசல்



தேவையானவை:
பாசிப்பருப்பு  200 கிராம், துருவிய இளம் இஞ்சி  ஒரு டீஸ்பூன், நாட்டுப் பூண்டு  4 பல் (நசுக்கவும்), நாட்டுத்தக்காளி  4 (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை  சிறிதளவு, பச்சை மிளகாய்  4 (இடிக்கவும்), காய்ந்த மிளகாய்  2, கடுகு, மஞ்சள்தூள்  சிறிதளவு, எண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை அகலமான மண் சட்டியில் மலர வேகவிடவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மத்தால் நன்கு கடையவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளிக்கவும். நசுக்கிய பூண்டு, துருவிய இளம் இஞ்சி, நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, பருப்புக் கடைசலில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #16 on: January 04, 2015, 02:28:45 PM »
தினை தேன் புட்டு



தேவையானவை:
தினை மாவு (கடைகளில் ரெடிமேட் ஆகவும் கிடைக்கிறது)  200 கிராம், ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, நெய்  2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல்  கால் கப், தேன்  100 மில்லி, உப்பு  ஒரு சிட்டிகை.

செய்முறை:
தினை மாவில் உப்பு கலந்த சுடுநீர் தெளித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிட்டு எடுத்து, ஆறிய பின் உதிர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், தேன் விட்டு பிசிறி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #17 on: January 04, 2015, 02:30:08 PM »
சேனை பொரியல்



தேவையானவை:
சேனைக்கிழங்கு  கால் கிலோ, இஞ்சி  பூண்டு விழுது  அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன், சோம்பு  கால் டீஸ்பூன், புளி விழுது  ஒரு டீஸ்பூன், எண்ணெய்  100 கிராம், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
சேனைக்கிழங்கை தோல் சீவி, சதுரமாக நறுக்கி... உப்பு, புளி விழுது கலந்த நீரில் சேர்த்து, அரைவேக்காடு பதத்தில் வேகவிட்டு நீரை வடிக்கவும். இஞ்சி  பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்பு ஆகியவற்றை நன்கு குழைத்து, சேனைக்கிழங்கு சதுரங்களின் மீது மேலும் கீழும் பூசி, சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
மேலே மொறுமொறுப்பாக, உள்ளே மிருதுவாக அசத்தும் இந்தப் பொரியல்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #18 on: January 04, 2015, 02:31:24 PM »
இனிப்பு பால் பொங்கல்



தேவையானவை:
புதிய பச்சரிசி  200 கிராம், பால்  600 மில்லி, சர்க்கரை  300 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை  சிறிதளவு, நெய்  100 கிராம், ஏலக்காய்த்தூள்  சிறிதளவு.

செய்முறை:
அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அடிகனமான, பெரிய  பாத்திரத்தில் பாலை நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரிசியைச் சேர்த்து பாதி குழைந்தபின் சர்க்கரை, நெய் சேர்க்கவும். அடிபிடிக்காமல் கவனமாக கிளறவும். பால்  அரிசி கலவை நன்கு சுண்டி வருகையில் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #19 on: January 04, 2015, 02:32:49 PM »
அவரைக்காய்  வேர்க்கடலை கூட்டு



தேவையானவை:
அவரைக்காய்  250 கிராம், பச்சை வேர்க்கடலை  100 கிராம் (உப்பு சேர்த்து வேகவிடவும்), தேங்காய்  ஒரு மூடி, சோம்பு  அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  8, தக்காளி  2, பூண்டு  2 பல், கடுகு  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு  சிறிதளவு.

செய்முறை:
தேங்காய், சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். அவரைக்காயை பொடியாக நறுக்கி... மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் (அ) மண்சட்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்த வேர்க்கடலை, அவரைக்காய் சேர்த்து நன்கு கொதித்தபின் இறக்கவும்.
புளி சேர்க்காத இந்த கூட்டு, சுவையில் அசத்தும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #20 on: January 04, 2015, 02:34:06 PM »
பச்சைத் துவரை துவட்டல்



தேவையானவை:
பச்சைத் துவரை (உரித்தது)  200 கிராம், இஞ்சி  பூண்டு விழுது  ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் (நறுக்கியது)  கால் கப், பொட்டுக்கடலை மாவு  ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு  கால் டீஸ்பூன், நறுக்கிய புதினா  ஒரு கைப்பிடி அளவு, கடுகு  அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது  சிறிதளவு, எண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
பச்சைத் துவரையை உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சோம்பு தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி  பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து, வெந்த பச்சை துவரையையும் சேர்த்து வதக்கி, பொட்டுக்கடலை மாவு தூவி இறக்கவும்.
குறிப்பு: இந்த சீஸனில் பச்சை துவரைக் காய் நிறைய காய்கறி கடைகளில் கிடைக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #21 on: January 04, 2015, 02:35:28 PM »
பிஞ்சு மக்காச்சோள பிரட்டல்



தேவையானவை:
பிஞ்சு மக்காச்சோளம் (ஒரு இஞ்ச் அளவுக்கு நறுக்கியது)  20 துண்டுகள், இஞ்சி  பூண்டு  பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது  ஒரு டீஸ்பூன், சோம்பு  கால் டீஸ்பூன், எண்ணெய்  3 டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு  சிறிதளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்க வும். இஞ்சி  பூண்டு  பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளற வும். பிறகு, சோளப்பிஞ்சை சேர்த்து சிறிது நீர் தெளித்து வேக விடவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #22 on: January 04, 2015, 02:36:38 PM »
கல்கண்டு பொங்கல்



தேவையானவை:
சிறிய கல்கண்டு (டைமண்ட் கல்கண்டு)  200 கிராம், பச்சரிசி  100 கிராம், பாசிப்பருப்பு  ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை  சிறிதளவு, ஏலக்காய்த்தூள்  ஒரு சிட்டிகை, நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பை லேசாக வறுத்து, குழைய வேகவிடவும். இதில் கல்கண்டு சேர்க்கவும். சிறிது நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு, நெய் விட்டு நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி, ஆறியபின் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #23 on: January 04, 2015, 02:37:55 PM »
கேப்பை வெல்ல அல்வா



தேவையானவை:
கேப்பை (கேழ்வரகு) மாவு  100 கிராம், வெல்லம்  200 கிராம், நெய்  50 கிராம், எண்ணெய்  50 மில்லி, ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
கேப்பை மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். வெல்லத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். கடாயை அடுப்பில் ஏற்றி வெல்லக் கரைசலை சேர்த்து கொதி வருகையில் கரைத்த கேப்பை மாவை ஊற்றவும். கலவை கெட்டியாகும்போது நெய், எண்ணெய் சேர்த்துக் கிளறி, பளபளவென மாவு வெந்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து இறக்கவும்.
இதை அப்படியே பரிமாறலாம். வில்லை களாக்கியும் சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #24 on: January 04, 2015, 02:39:08 PM »
வெள்ளைச் சோள மாவு ரொட்டி



தேவையானவை:
வெள்ளைச் சோள மாவு  200 கிராம் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு  2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, வெங்காயம்  ஒன்று, உப்பு  சிறிதளவு, எண்ணெய்  50 கிராம்.

செய்முறை:
வெள்ளைச் சோள மாவு. மைதா மாவு, நறுக்கிய வெங்காயம்,  கொத்தமல்லித்தழை, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது சுடு நீர் தெளித்து  ரொட்டி (சப்பாத்தி) மாவு மாதிரி பிசையவும். கையில் எண்ணெய் தடவி சாத்துக்குடி அளவு மாவு எடுத்து உருட்டவும். இதை எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து ரொட்டியாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, ரொட்டியைப் போட்டு, எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
இதைச் சூடாக சாப்பிட வேண்டும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #25 on: January 04, 2015, 02:40:21 PM »
மக்காச்சோள சுண்டல்



தேவையானவை:
வேகவைத்து உதிர்த்த நாட்டு மக்காச்சோளம்  ஒரு கப்,  பூண்டு  2 பல் (நசுக்கவும்), காய்ந்த மிளகாய்  2, நறுக்கிய சின்ன வெங்காயம்  கால் கப், கடுகு, சோம்பு  தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, பூண்டு, காய்ந்த மிளகாயை தாளிக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி... உப்பு, உதிர்த்த சோளமணிகள் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #26 on: January 04, 2015, 02:42:03 PM »
பூண்டு  சீரகத் துவையல்



தேவையானவை:
நாட்டுப் பூண்டு (உரித்தது)  10 பல், சீரகம்  ஒரு டீஸ்பூன், தக்காளி  2, காய்ந்த மிளகாய்  6, துவரம்பருப்பு  ஒரு டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.

தாளிக்க:
சமையல் எண்ணெய்  ஒரு டீஸ்பூன், கடுகு  அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிறிதளவு.

செய்முறை:
சிறிதளவு எண்ணெயில் பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்துக் கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #27 on: January 04, 2015, 02:43:49 PM »
அவல் காரப்பொங்கல்



தேவையானவை:
அவல்   200 கிராம் (ஊறவைக்கவும்), வேகவைத்த பாசிப்பருப்பு  100 கிராம், கீறிய பச்சை மிளகாய்  4, சீரகம்  அரை டீஸ்பூன், மிளகு  சிறிதளவு, பெருங்காயம்  ஒரு சிறு கட்டி (தூளாக்கவும்), கறிவேப்பிலை  சிறிதளவு, நெய்  3 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் நெய் விட்டு சீரகம், பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய், மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வேகவைத்த பாசிப்பருப்பு, உப்பு, ஊறவைத்த அவல் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, அவல் சிதையா வண்ணம் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
சிவப்பு அவலிலும் செய்யலாம். ருசி மேலும் பிரமாதமாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #28 on: January 04, 2015, 02:45:23 PM »
கீரை  தக்காளி தாளிதம்



தேவையானவை:
ஏதேனும் ஒரு  கீரை  ஒரு கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), தக்காளி   ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு  2 டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய்   2, கடுகு, பெருங்காயம் (தூளாக்கவும்)  சிறிதளவு, பூண்டு  2 பல் (நசுக்கவும்), எண்ணெய்  ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு  சிறிதளவு.

செய்முறை:
மண்சட்டி (அ) கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், பூண்டு தாளிக்கவும். இத்துடன் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய கீரை, தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கீரை  தக்காளி பாதி வெந்தவுடன் பருப்பு சேர்த்து, மேலும் வேகவிட்டு இறக்கவும்.

குறிப்பு:
இது கெட்டியாகத்தான் இருக்க வேண்டும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை நாட்டுப்புற சமையல்! ~
« Reply #29 on: January 04, 2015, 02:46:59 PM »
மல்லி சாதம்



தேவையானவை:
 உதிர் உதிராக வடித்த சாதம்  2 கப் (நன்கு ஆறவிடவும்).

வறுத்துப் பொடிக்க:
மல்லி விதை (தனியா)  4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்  4, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து)  2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம்  ஒரு சிறு கட்டி, நல்லெண்ணெய்  50 கிராம், புளி  சிறிதளவு, உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
வறுக்க கொடுத்த பொருட்களை (புளி, உப்பு தவிர)  வெறும் கடாயில் சிவக்க வறுத்து, உப்பு, புளி சேர்த்து பொடியாக்கவும். நல்லெண்ணெயை நன்கு பொங்க காய்ச்சி, சாதத்தின் மேல் ஊற்றி, அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். சுட்ட அப்பளம் அல்லது பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.