'ஷாக்’லெட்
பல்லில் ஒட்டிக்கொள்ளக் கூடிய கடினமான சாக்லெட்களில் உள்ள இனிப்பு நீண்ட நேரத்துக்கு நம் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பற்கள் பாதிக்கப்படுவதால், இவற்றை தவிர்ப்பது நல்லது.
உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பாப்கார்ன்: சிப்ஸ் துகள்கள் பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. பாப்கார்ன் கவரின் அடியில் பொரியாத சில சோள விதைகள் இருக்கும். மிகக் கடினமான இந்த விதைகளைக் கடிக்கும்போது, பல்லுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
உலர் பழங்கள்: திராட்சை, பேரீட்சை போன்ற உலர் பழங்களை சாப்பிட்டதும் பல்லின் இடுக்குகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை, சாப்பிட்டதும் பல்லைச் சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது.