மனசு
நல்ல சினேகிதனை
தேடும்போது
கூடவே,
ஒரு முரட்டுக்குணம்...
அதிகம் பேசாதே என
சொல்லும்போது
எப்படி பேசவேண்டும் ..?
கேட்கத்துண்டுகிறது உள்மனம் ...
கடமையில் தடுமாறுகையில்
"நீ மண்ணா போயிடுவே"
என்ற சாபக்குரல்கள்!
திட்டிமுடிப்பதற்குள்
மடித்துப்போகிறது
மறுசிந்தனை...
கையில் இருப்பதைப் பற்றி
அசைபோட்டு பார்ப்பதற்குள்
விரிந்து போகிறது
உலகம் ...
மழையில் நனைந்தாலும்
மௌனத்தில்
குளித்தெழுந்தால் தான்
சிரிக்கமுடிகிறது ...
உருட்டுக்கட்டை வீரன்
எல்லைச்சாமியைக்
கண்டு பயமில்லை ...
ஆனாலும்,
பயந்து நடுங்குகிறேன்
உருவமில்லா
இந்த மனசிற்கு ...!