Author Topic: சுதந்திர தினம்  (Read 671 times)

Arul

  • Guest
சுதந்திர தினம்
« on: August 15, 2013, 10:17:42 AM »
இன்று சுதந்திர தினமாம்

அந்நியனின் அடிமையாக இருந்ததை
இனிப்பு வழங்கி கொண்டாடி நாம்
அடிமையான கதையை உலகுக்கு
அறிவிக்கும் நாள்

வெட்கி தலைகுனிகிறேன் வேதனையோடு..

சுதந்திர நாட்டில் தன் நாட்டு
தேசிய கொடி ஏற்ற குண்டு
துளைக்காத வாகனத்தில் வந்து
நான்கு அடுக்கு பாதுகாப்பில்
சுதந்திர உரை

கொக்கரிக்கிரோம் சுதந்திரம் என்று
எதில் சுதந்திரம்
அரசே மதுபானத்தை தயாரித்து
ஊற்றி கொடுப்பதா சுதந்திரம்

தனி ஒரு பெண் நள்ளிரவிலும்
நடமாட முடியாத கயவர்கள்
வாழும் சுதந்திர நாடாம் எங்கள் நாடு

ஓட்டு பிழைப்புக்காக பிச்சை எடுத்து
மக்களின் வரிப்பணத்தில் திருடி
தின்னும் கயவர்களை கொண்ட
சுதந்திர நாடாம் எங்கள் நாடு

எல்லையில் எமைக் காக்க
உயிர் துரக்கின்றான் என் அருமை
இராணுவத் தோழன்
அவனை கொண்டாட ஆளில்லை
நடிகனுக்கு பாலாபிசேகம் செய்யும்
பாமரக் கூட்டங்கள் வாழும் எங்கள்நாடு

தன்மானத்தை இழந்து வாழும் நமக்கு சுதந்திரம் ஒரு கேடா????????

Offline gab

Re: சுதந்திர தினம்
« Reply #1 on: August 15, 2013, 01:13:14 PM »

சுதந்திர நாட்டில் தன் நாட்டு
தேசிய கொடி ஏற்ற குண்டு
துளைக்காத வாகனத்தில் வந்து
நான்கு அடுக்கு பாதுகாப்பில்
சுதந்திர உரை


எல்லையில் எமைக் காக்க
உயிர் துரக்கின்றான் என் அருமை
இராணுவத் தோழன்
அவனை கொண்டாட ஆளில்லை
நடிகனுக்கு பாலாபிசேகம் செய்யும்
பாமரக் கூட்டங்கள் வாழும் எங்கள்நாடு





உண்மையான சுதந்திரத்தை உணரும் வகையில் அனைவரின் செயலும் அமைய வேண்டும்.  நல்ல கவிதை வரிகள் அருள்.
« Last Edit: August 15, 2013, 01:14:58 PM by gab »

Arul

  • Guest
Re: சுதந்திர தினம்
« Reply #2 on: August 15, 2013, 02:11:09 PM »
மிக்க நன்றி Gab

Offline kanmani

Re: சுதந்திர தினம்
« Reply #3 on: August 24, 2013, 11:23:50 PM »
arul unmaiyana nilamaiyai apadiye padampidichi kaamikarapola iruku ungalodaiya varigal .. naanum வெட்கி தலைகுனிகிறேன் வேதனையோடு..

Offline DharShaN

Re: சுதந்திர தினம்
« Reply #4 on: August 25, 2013, 12:00:06 PM »
அருமையான வரிகள் உணர்ந்து வேதனையை கொட்டி தீர்ததுபோல் இருக்கிறது ஒரு படைப்பாளி படைப்புகளுக்கு உயிர் குடுப்பது மனதை துளைக்கும் வார்த்தைகள் வாழ்த்துக்கள் நண்பரே!

Arul

  • Guest
Re: சுதந்திர தினம்
« Reply #5 on: August 25, 2013, 05:19:49 PM »
மிக்க நன்றி KANMANI............

Arul

  • Guest
Re: சுதந்திர தினம்
« Reply #6 on: August 25, 2013, 05:22:48 PM »
மிக்க நன்றி DharShaN