Author Topic: ~ படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி! ~  (Read 693 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226396
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி!



குழந்தைகளுக்கு  வரும்  காது வலி :

        காது வலி வர  முக்கியமான  காரணம்  சளி பிடிப்பதும் , பாட்டில்  பால் தருவதும் ஆகும் .  வலி  வந்தால்  குழந்தை விடாமல் அழுது  கொண்டே  இருக்கும் . காது மடலை  தொட்டால்  வலி அதிகமாகும் .


மூக்கை   சிந்துவதால்  காதின் உள்ளே  அழுத்தம்  அதிகரிப்பதால்  காது வலி  அதிகமாகும் . எனவே  சிந்தாமல்  துடைத்துவிட  வேண்டும் .


காதுக்கு  பட்ஸ்  போடவே  கூடாது . அப்படி செய்தால்  வெளியே உள்ள  அழுக்கு  உள்ளே தள்ள படுமே  தவிர  வெளியே  வராது. பஞ்சை  கொண்டு  விளக்கு திரி போல திரித்து  துடைத்து  எடுக்க வேண்டும் .








தாய்ப்பால் படுத்து கொண்டு   தரக்கூடாது , குழந்தையின்   தொண்டைக்கும்  நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian  tube ) வழியே பால் உள்ளே சென்று  சீழ்  பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும்  காதில்  சீழ்  பிடிக்கும் .





மூக்கு அடைப்பு  இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து  போட்டு கொள்ள வேண்டும் .
நன்றி டாக்டர்.ராஜ்மோகன்