வருத்திக் கொண்டே இருக்கிறது
ஒரு விழைவு அவளை
அறுத்தெறியத்தான்
நினைக்கிறாள்
ஒவ்வொரு உணர்வும்
முக்கியமென்றொருவன் சொல்ல
தீவற்றதாகிறது விழைவின் வருத்தல்
நுண்மீதமுமின்றி துறந்து
விடுபடலுக்கு முழுமுறறாய்
ஆயத்தமான ஒரு இடைவெளியில்
விடமுடியா ஒன்றவளை
உள்ளிழுத்து தாழிட்டது
விடமுடியதவைகளில்
மேலும் அவளை
வருத்த துவங்கிவிட்டது அவ்விழைவு