Author Topic: விழைவு  (Read 1036 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
விழைவு
« on: October 14, 2012, 11:28:05 AM »
வருத்திக் கொண்டே இருக்கிறது
ஒரு விழைவு அவளை
 
அறுத்தெறியத்தான்
நினைக்கிறாள்
 
ஒவ்வொரு உணர்வும்
முக்கியமென்றொருவன் சொல்ல
தீவற்றதாகிறது விழைவின் வ‌ருத்த‌ல்
 
நுண்மீதமுமின்றி துறந்து
விடுபடலுக்கு முழுமுறறாய்
ஆயத்தமான ஒரு இடைவெளியில்
விடமுடியா ஒன்றவளை
உள்ளிழுத்து தாழிட்டது
விடமுடியதவைகளில்
 
மேலும் அவளை
வருத்த துவங்கிவிட்டது அவ்விழைவு
« Last Edit: October 14, 2012, 11:32:48 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: விழைவு
« Reply #1 on: October 15, 2012, 02:26:54 AM »
சில விஷயங்கள் இப்படிதான்... விலக நினைத்தாலும் விலக முடியாதவை தொடர நினைத்தாலும் தொடர முடியாதவை ... ...தங்களின் கவிதை சில நினைவுகளை மீள துயில் எழுப்பி விட்டு இருக்கிறது ஆதி நன்றிகள்
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: விழைவு
« Reply #2 on: October 15, 2012, 01:09:28 PM »
பின்னூட்டத்துக்கு நன்றிங்க‌

அன்புடன் ஆதி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: விழைவு
« Reply #3 on: October 16, 2012, 07:22:16 AM »
இந்த திரியை கண்டு பிடிச்சிட்டேன்...

நல்ல கவிதை ஆதி..


விடமுடியா ஒன்றவளை
உள்ளிழுத்து தாழிட்டது
விடமுடியதவைகளில்

அர்த்தமுள்ள வரிகள் :)








உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Aadava

  • Guest
Re: விழைவு
« Reply #4 on: October 16, 2012, 12:38:01 PM »
விழைவின் விளைவு அறியாதவளோ??
கவிதையில் ஏதோ பூடகமாக சொல்ல வருகிறீர்கள்.
அது புரிந்தால் கவிதை இன்னும் பலமாக இருக்கும் என்று அறிகிறேன்.

விழைவின் விளைச்சலை வெட்டியெறிந்தால் நல்ல மகசூல் கிடைக்குமோ என்னவோ??
நாற்று நட்டவர் வயலுக்கு இடங்கொடுத்தவர் மனது வைக்கணும்.

Offline ! SabriNa !

Re: விழைவு
« Reply #5 on: October 31, 2012, 04:40:07 PM »
vizhaiva..ivlo azhaga varnichirukel...aadhi nice one..!!


Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: விழைவு
« Reply #6 on: November 01, 2012, 07:46:46 PM »
aadhi aalama varigal arthamula karuthugalai kavithaiya punanchu eluthi irrukinga vaalthugal
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..