இந்த பூமிக்கு அறிமுகமற்ற என்னையே
அறிமுகம் ஆக்கிட, பத்து திங்கள் சித்தம் வருத்தி
தவம் புரிந்து, முத்து வரமாய் ஈன்றெடுத்த அன்னையே !
ஓர் மெய் தேசபக்தன் தன் தாய் மண்ணையே
உண்மையாய் நேசிப்பதை காட்டிலும் உண்மையாய்
பன்மடங்கு உயிராய் நேசிக்கின்றேன் உன்னையே !
தன்னை காட்டிலும் விண்ணை அதிகமாய் நேசித்தமையால்
அந்நேசத்தின் உச்சத்தால் ஒருவள் (கல்பனா சாவ்லா) தன்
உயிரையும் துச்சமாய் கருதி சென்றடைந்தாள் நேசித்த விண்ணையே !
அதுபோல்
என்னைக்காட்டிலும் உன்னை அதிகம் நேசிக்கின்ற நான்
அந்நேசத்தின் உச்சத்தால் ஒருவேளை நீ பிரிய நேர்ந்தால், என்
உயிரையும் துச்சமாய் கருதி துண்டித்து கொள்வேன் என்னையே !
பெற்றோரை போற்றுகிறேன் பேர்வழி என்று மற்றவரை போல்
பெயரும் புகழும் பெறும் தன்னலத்திர்க்காக ,
மீண்டும் வரமாய் வெளி வரும் சுயநலத்திற்காக
உலக வலியை ஒன்றடக்கிய உடல் வலியினை, உயர் வலியினை
உயிர் வலியினை, மீண்டும் ஒரு முறை உனக்களிக்கமாட்டேன் அன்னையே !
மாறாக , முடிந்தால் இறைவனிடம் நேருக்கு நேராக
கெஞ்சி,கனன்று துடித்து ,அழுது,தொழுது ,
பெண்ணாய் பிறந்திட வரம் வேண்டி
பத்து திங்கள் உன்னை சுமந்து முத்து வரமாய் உன்னை
பெற்றெடுத்து உன் கடன் இணை செய்வேன் ,அன்னையே !
அற்புதத்தின் அற்புதத்தை மிக அற்புதமாய்
என் கற்பனை துணை கொண்டு,அற்பணித்துவிட்டேன் !
அப்படியே, அற்பன்(ஆசை) இவன் அற்ப ஆசை ஒன்றை
சமர்பிக்கின்றேன் ,சொற்பமாக கருதாமல்,சாதாரணமாய்
கருதி படியுங்கள் நுட்பமானோரே !
என் இதயத்தில் துடிப்பாய் துடிக்கும் என்னவளை
காணும் பாக்கியம் என் கண்களுக்கும்
அரவணைக்கும் பாக்கியம் என் கைகளுக்கும்
அவள் சாய்வை தாங்கும் பாக்கியம் என் தோள்களுக்கும்
அவளோடு வாழும் பாக்கியம் இந்த ஜென்மத்திற்க்கு இல்லாது போனால்....
மறு ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை எனக்கு ,
இருந்தால்
அவள் எனக்கு தாயாக வேண்டும் !
அந்த பாக்கியம் போதும் எனக்கு !