Author Topic: அன்னையர்தின சிறப்பு கவிதை  (Read 4045 times)

Offline Global Angel



அன்னையர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதள வானொலி மூலம் உங்கள் அன்னையர்க்கு உங்கள் கவிதை மூலமான வாழ்த்துக்களை தெரிவிக்க உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன் கிழமைக்குள் பதிவு செய்து கொள்ளுங்கள் ...

உங்கள் கவிதைகளை உங்கள் வானொலிமூலம் உங்கள் அன்னையரை சேர இன்றே உங்கள் கவிதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
                    

Offline Jawa

அம்மா

அன்னை என்றொரு ஆலயம்
அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .
காணிக்கை கேட்க்காத கடவுள் அவள்
காணியில் காணக்கிடைக்கும் அவளின் அருள் .
பத்து திங்கள் கருவிருந்தேன்
அவள் பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் இவளை கொண்டிடவே !
பாசம் புரளும் வங்கி அவள்
வட்டி வசமின்றி முழுதும் தந்திடுவாள் .
பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்
பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .
எத்தனை பிறவி கொண்டாலும்
உன் மகனாய் வாழும் வரம்வேண்டும் .

Offline Yousuf

தாய்மை!

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!


ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!


ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?


இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!


வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!


குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!


கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!


நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!


வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் - ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் - ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே...!


தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட
இறைவனின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று...!

Offline AnAnYa

மீண்டும் ஒரு முறை வேண்டும்
அம்மா உன் கருவறை!

என்றும் நான் மழலை
அம்மா நீ வாழும் வரை!

இரவிலும் பகலிலும்
எனக்கென துடித்தாய்!

கனவிலும் நான் அழுதால்
திடுக்கிட்டு விழித்தாய்!

எந்த தவமும் நான் செய்யவில்லை
உன்னை பெறுவதற்கு!

இனி எந்த வரமும் தேவை இல்லை
போதும் நீ எனக்கு!

கடவுள் கொடுத்த கருணை யாவும்
உன் கண்ணில் ஒழிக்கிறது!

இந்த உலகம் மறந்த பாசம் நேசம்
உன்னால் வாழ்கிறது!

உன் தியாகம் சொல்ல மொழிகள் இல்லை!

தெய்வம் தந்த அருட்கொடை
நீ எனக்கு!

என்னை பத்து மாதம்
உன்னுள் வைத்தாய்...
உன் உயிரை பிடித்து
அழைப்பு விடுத்தாய்!

மீண்டும் ஒரு முறை வேண்டும்
அம்மா உன் கருவறை!!!


நெஞ்சம் எரியுது தனலாய்...
நெருஞ்சி முள்ளின் கீறலாய்..

அன்பைத் தேடி ஏங்கி வழிந்த என் உள்ளம்
சென்ற பாதையெல்லாம் வெறுமை வடிந்த பள்ளம்

அன்னை அன்னையென அன்பை மட்டும் எழுதுவதில்
உடன்பாடில்லை எனக்கு...

அனுதினமும் அன்புக்கு ஏங்கி அடுத்த வேலை
உணவுக்காய் எச்சில் காக்கைகளோடு இடமில்லாமல்
படுத்துக்கிடந்த எனக்கு...
தாலாட்டுப்பாட்டுக்கு கேடில்லை

தாயானவள் தரம்தப்பி என்னை
தவிக்க விட்டுப் போனபோது
ஐயிரண்டு வயது எனக்கு

அடித்து துவைத்த அப்பன் வளர்ப்பில்
அடிவயற்றுக்கும் கஞ்சியில்லை.

பெருநகரத்தின் வீதியில்
பிச்சையெடுக்க கைகள் உயர
தன்மானம் தடை சொன்னதால்

கையேந்தி உணவகத்தின் அர்த்தஜாம நேரத்தில்
பத்துப்பாத்திரம் கழுவி காத்திருந்து
பசி நீர்த்தேன்...

அழுது அழுது கண்ணீரில் உப்பில்லை
ஏன் இப்படி பிறந்தேன்? என் மீது தப்பில்லை

பற்றி எரிகிறது தாயே...
பள்ளி செல்லும் பிள்ளைகள் -எல்லாம்
என்னை பக்கத்தில் தாண்டி
கடந்து போகும் போது...!

அன்னையர் தினமென
ஆங்கோர் விளம்பரநாளிதழில்
கண்டேன்...

அண்ணன்கள் பலரும்
அன்னையென்றாலே புனிதமென
மாண்பையே எழுதும் போது

என்னைப்போலான
இருட்டின் கரையில் வெம்பித்திரியும்
பேரின் கதைகேட்க ஆளில்லைபோல...

 என் கண்ணீரையெல்லாம்
திரட்டி உண்மை எழுதுகிறேன்...

நீ நல்லவளா கெட்டவளா தெரியாது
ஆனால் நல்ல தாயாய் நீ இல்லை என்று
மட்டும் எனக்குத் தெரியும்

உன்னை குற்றம் சொல்லப்போவதில்லை
நான் - எங்கிருந்தாலும் நல்லாயிரு..
ஆனால் நான் இங்கு நல்லாவேயில்லை...!

தயவுசெய்து
இனி என்போல் யாரையும்
உருவாக்கிவிட்டுப்போய்விடாதெ..!


கற்பனை & எழுத்து
-கவிதைக்காரன் 

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........

அன்பின் அவதாரம் அம்மா !
 பத்து மாதம் என்னை வயிற்றில்
சுமையென நினைக்காமல் சுகமாக நினைத்து
மரண வேதனையில் பெற்று எடுத்தாயே-அம்மா !
 
உடல் வலுவையும் இழந்து ரத்தத்தையும் பாலாக
 கொடுத்து வளர்த்தாயே- அம்மா !
 இரவு பகலாக நீ தூங்காமல்
 கண்விழித்தாயே -அம்மா !
 
எந்தன் அழுகுரல் கேட்டதும்
 துடித்தாயே-அம்மா !
 என்னை உன் மார்போடு
 சேர்த்து சீராட்டினாயே -அம்மா !
 
எவ்வளவு கஷ்டம் வந்தபோதும்
 என் சிரிப்பு சத்தம் கேட்டதும்
 உந்தன் கவலை மறந்து
 புன்னகை புரிவாயே -அம்மா !
 
முதல் வருடத்திலே
 கல்வி சொல்லி தந்து
 நடக்க பழகி தந்து
 சந்தோசம் அடைவாயே-அம்மா
 
ஐந்து வயதில் பள்ளிக்கு அனுப்ப
 உந்தன் வியர்வை சிந்தி
 உழைத்து பள்ளிக்கு அனுப்பி
 அழகு பார்த்தாயே -அம்மா !
 
படிப்பு முடிந்த வந்து அம்மா என்று கூப்பிட்டதும்
 ஓடி வந்து பாசத்தில்
 மார்போடு கட்டி அணைத்து
 முத்தம் தந்து அழகு பார்த்தாயே -அம்மா


 
சோர்வாகி நான் தேடும்
 தலையணை உன் மடி..
 என்னை தூங்கவைத்து-
 பின் தூங்கி முன் எழுவாயே-அம்மா
 
மகிழ்ச்சியை மட்டுமே எனதாக்கி
 செல்வம் இல்லாத போதும்
 செல்லமாக வளர்த்து
 
என் வாழ்வின் இறுதி வரை வருவாய் என

நினைத்திருக்கும் வேளையில்
 ஏழு வருடம் என்னோடு இருந்தது
 போதும் என்று எண்ணி தான்
 என்னை இவுலகில் தனியாக தவிக்க விட்டு சென்றாயோ..

 கடைசியாக என்னைவிட்டு பிரியும்
 தருவாயில் கூட
 "நல்லா இருக்கியா செல்லம்" என கொஞ்சியது
நீங்காத நினைவாய் என்னுள்
« Last Edit: May 06, 2012, 08:27:01 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline supernatural

பெண்மையை ...
பெண்மையின் தன்மையை....
முழு முழுதாய்....
அறிய செய்யும்..
புரிய செய்யும்....
பெரும் பெருமை....
தாய்மை....

சும்மக்க சும்மக்க ...
சுகம் தரும்  ....
இனிய சுமை...
தாய்மை...

ஈன்ற பின்னும்...
மனதென்னும் பெரும் அறையில்...
சிறு  கருவறைபோல் ....
நாம் வாழும் நாள்வரை...
நம்மை பாதுக்காக்கும்....
அருமை தாய்மை...

தாய் அவள் தாலாட்டும்...
அன்பான அரவணைப்பும்...
ஈடில்லா  பெரும் இணைப்பு....
தியாகத்தின் பொருள் ...
அறிய செய்தது தாய்மையால்...
தாய் அவள் மேன்மையால்...

பொறுமையின் உருவம் தாய்மை...
நாம் செய்யும்...
பெரும் தவறையும்..
சிறு தவறாய் கூட கொள்ளாத..
பொறுமை மனம் தாய் மனம்...
 
பெருமைகள் பல கொண்ட...
 தாய்மையை என்றுன்றும் ...
 போற்றுவோம்....!!!
நம்மை ஈன்ற  தாயின்...
மனம் நெகிழ  வாழுவோம் ....!!!

அன்னையர் தின வாழ்த்துக்கள்..!!!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இந்த பூமிக்கு அறிமுகமற்ற   என்னையே
அறிமுகம் ஆக்கிட, பத்து திங்கள் சித்தம் வருத்தி
தவம் புரிந்து, முத்து வரமாய் ஈன்றெடுத்த அன்னையே !

ஓர் மெய் தேசபக்தன் தன் தாய் மண்ணையே
உண்மையாய் நேசிப்பதை காட்டிலும் உண்மையாய்
பன்மடங்கு உயிராய் நேசிக்கின்றேன் உன்னையே !

தன்னை காட்டிலும் விண்ணை அதிகமாய் நேசித்தமையால்
அந்நேசத்தின் உச்சத்தால் ஒருவள் (கல்பனா சாவ்லா) தன்
உயிரையும் துச்சமாய் கருதி சென்றடைந்தாள் நேசித்த விண்ணையே !

அதுபோல்

என்னைக்காட்டிலும்  உன்னை அதிகம் நேசிக்கின்ற நான்
அந்நேசத்தின் உச்சத்தால் ஒருவேளை நீ பிரிய நேர்ந்தால், என்
உயிரையும் துச்சமாய் கருதி  துண்டித்து கொள்வேன் என்னையே !

பெற்றோரை போற்றுகிறேன் பேர்வழி என்று மற்றவரை போல்
பெயரும்  புகழும் பெறும் தன்னலத்திர்க்காக ,
மீண்டும் வரமாய் வெளி வரும் சுயநலத்திற்காக
உலக வலியை ஒன்றடக்கிய உடல் வலியினை, உயர் வலியினை
உயிர் வலியினை, மீண்டும் ஒரு முறை உனக்களிக்கமாட்டேன் அன்னையே !

மாறாக , முடிந்தால் இறைவனிடம் நேருக்கு நேராக
கெஞ்சி,கனன்று  துடித்து ,அழுது,தொழுது ,
பெண்ணாய் பிறந்திட வரம் வேண்டி
பத்து திங்கள் உன்னை சுமந்து முத்து வரமாய்  உன்னை
பெற்றெடுத்து உன் கடன் இணை செய்வேன் ,அன்னையே !

அற்புதத்தின் அற்புதத்தை மிக அற்புதமாய்
என் கற்பனை துணை  கொண்டு,அற்பணித்துவிட்டேன் !
 
அப்படியே, அற்பன்(ஆசை) இவன் அற்ப ஆசை ஒன்றை
சமர்பிக்கின்றேன் ,சொற்பமாக கருதாமல்,சாதாரணமாய்
கருதி படியுங்கள் நுட்பமானோரே !
 
என் இதயத்தில் துடிப்பாய் துடிக்கும் என்னவளை
காணும் பாக்கியம் என் கண்களுக்கும்
அரவணைக்கும் பாக்கியம் என் கைகளுக்கும்
அவள் சாய்வை தாங்கும் பாக்கியம் என் தோள்களுக்கும்
அவளோடு வாழும் பாக்கியம் இந்த ஜென்மத்திற்க்கு இல்லாது போனால்....

மறு ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை எனக்கு ,
இருந்தால்
அவள் எனக்கு தாயாக வேண்டும் !
அந்த பாக்கியம் போதும் எனக்கு !

Offline kanmani

அன்பையும் பாசத்தையும்
அள்ளி அள்ளி தந்தவளே...
தைரியம் என்ற வார்த்தையின்
அர்த்தம் புரிய வைத்தவளே

அனுதினமும் கண்ணுக்கு
மணியாக
உன் கண்மணியை போல
காத்தவளே...

என் கண்ணில் உன் கனவை பார்த்தவளே
உன்னால் நான் பெற்ற பாசத்திற்கு
இணையான பாசம்
இனி ஒரு ஜென்மம் எடுத்த போதும்
கிடைக்க பெறுமோ??

உயிர் தந்தாய் உடல் தந்தாய்
எனக்கு உயிரையும் தந்துவிட்டு
புகைபடத்தில் தெய்வமாய் நிற்கின்றாயே
உயிர் அளித்தாலும்
உன் பாசம் பரிவு இல்லாமல்
உயிர் இருந்தும்  நடைப்பிணமாக நான்..

உன்னோடு நான் கண்ட உலகம்
நீ இல்லாததால் என்னக்கு மட்டும்
சுழலாமல் நின்று போனதாய் ஒரு உணர்வு

சுழலும் கடிகாரமே
நாட்களை நகர்த்தும்
 நாட்காட்டியே
எனக்காக பின்னோக்கி
சென்று  என் பெற்றவளை
மீண்டும் என்னோடு சேர்த்து விடுங்கள்...

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னை உருக்கி
என்னை செதுக்கிய
சிற்பியே
என் உயிர் கண்ணை
திறந்தவளே..
உன்னை கொண்டாட ஒரு நாள்
போதுமா???


உன்னை வரிகளுக்குள்
அடக்க முடியாது
வானத்தோடு ஒப்பிட
முடியாது...
உன் பாசத்தை சொல்ல
வார்த்தைகள் ஏது??

சொல்ல சொல்ல
சலிக்காத வார்த்தை "அம்மா"
யாருக்கும் கிடைக்காத வரமாய்
இருவரின் பிறந்த நாளும்
ஒரே நாளில் அமைய
ஈடற்ற மகிழ்ச்சி என்னுள்

சோர்ந்திருக்கும் நேரத்தில்
நம்பிக்கை மொழி கூறி
ஆறுதலாய்  மடி சாய
பஞ்சு மெத்தையில் காணாத
சொர்க்கம் காண செய்பவள் நீ...

கவலைகளை மறைத்து
சிரிப்பை தந்து
சிரிக்க வைத்து பார்ப்பவள் நீ ..

பாசத்தை பிள்ளைகளுக்கு
பகிர்ந்தாலும்
நிறைவான  பாசத்தை
சமமாய் தரும்
வித்தை கற்றவள் நீ


என் அன்னையே
இனி ஒரு பிறவி
எனக்கு இருந்தால்
நீ என் மகளாய்
நான் உன் அன்னையாய் மாறும்
வரத்தை தந்துவிடு
தாயே
என் கருவில் மகளாய்
வந்து விடு.. ;) ;) ;)

Love U mommmmmmmmmm  :-* :-* :-*



 
« Last Edit: May 08, 2012, 10:15:56 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

அன்புக்கு உண்டோ
அடைக்கும் தாள்
அன்னைக்கும் வேண்டுமோ
அரிதாய் ஒரு நாள் ...
ஐ இரு திங்கள் சுமந்து
அரிதாக சுகம் கண்டு
அகிலத்துக்கு எனை அளித்தபோதே
இழந்த சுகம் அனைத்தும்
இமை வழி நுழைந்து
இவுலகின் அனைத்து சந்தோசத்தையும்
பார்வையுள் திரட்டி
பாசத்துடன் அணைத்த போதே
பாரினில் நான் பிறந்த பயனை எய்துவிட்டேன் அம்மா ...


பகலெல்லாம் பார்வையால் காத்து
தூக்கத்திலும் போர்வையாய் இருந்து
ஆபத்தில் அணைத்து அருகமார்ந்து
தன் குருதியே என் உறுதியாக்கிய
ஒப்புவமை அற்ற ஜீவன் நீயாம்மா ...


நான் கலங்கும் போதெல்லம்
உள்ளுள் தான் கலங்கி
அதை காட்டாது
தனம்பிக்கை தனை
உரமேற்றிய தரணியில் உலவும்
தாயான தெய்வம் நீ ...


தாய்க்கு என்று தனியான ஒரு நாள்
தவறாக கொண்டாடுகின்றனரோ ..
இல்லை இல்லை எனக்கு இதில் உடன் பாடுதான்
என்றும் உன்னை தெய்வமாய் பார்க்க எனக்கு இஷ்டமில்லை
தெய்வம் கண்ணனுக்கு தெரிவதில்லை
தெய்வம் கூப்ட்டாலும் வருவதில்லை
தெய்வம் பேசி நான் பார்த்ததில்லை ..
தெய்வம் உனக்கு ஈடு இல்லை
இருந்தும் உயர் 
தெய்வமாய் உன்னை பார்க்க
இன்று ஒரு நாள் வேண்டும் எனக்கு
இது போதும் எனக்கு ...
மற்றைய நாள் எல்லாம்
எனக்கு ஆசானாய் நல்லதொரு தோழியாய்
நான் விரும்பும் அம்மாவாய் இருந்து விடு ...
அடுத்து வரும் பிறவியிலும்
நீயே எனக்கு தாயாய் வந்துவிடு ...


உன்னளவு பொறுமை இல்லை
உனக்கு தாயாகும் தகுதியும் எனக்கில்லை
அம்மா என்றழைத்து அருகமர்ந்து
அகிலத்து கதை பேச
என்றும் நீயே என் அன்னையாக வந்துவிடு

« Last Edit: May 09, 2012, 12:34:55 AM by Global Angel »
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
ஈரைந்து மாதங்கள் சுமந்து
ஈன்ற செல்வத்தை
ஈன்ற நாள் முதல்
இந்நாள் வரை போற்றி பாதுகாப்பவள்
மழலை பருவம் முதலே
அன்பை பொழிபவள்.

கனபோழுது கண்முன் இல்லையென்றாலும்
சினங்கொண்டு கண்டிப்பவள்
இவ்வுலகில் இப்படித்தான் வாழனுமென
அறிவுரை கூறியவள் 
வெளியில் சென்று களைத்து
வருபவனை அன்பாய்
அரவனைத்து அமுது படைப்பவள்

தோல்வியில் சோர்ந்திடும் போது
ஆதரவாய் பேசி ஊக்கமளிப்பவள்
களைத்து  வீடு திரும்பியவனை
மடி சாய்த்து தலைகோதி
விசாரிக்கையில் விக்னங்கள்
அத்தனையும்  மறக்க செய்பவள்...
நேராநேரத்திற்க்கு   தேவைபடும்
அத்தனையும் கேட்கும் முன்னே  செய்பவள்.....

அன்பு பாராட்டி சீராடும் பொது அன்னையாக
கண்டிக்கும் பொது தந்தையாக
அறிவுரை கூறும்  போது  ஆசானாக
தவறை சுட்டிக்காட்டும் சகோதரனாக
குடும்ப சகிதமாய் கூடிய அரட்டையில் சகோதரியாக
சுகதுக்கங்களில்  பங்குகொள்ளும்போது  நண்பனாக
இப்படி பலமுகம் கொண்டவள்...

பணம் படைத்த
சனங்களுக்கு மத்தியில்
குணம் படைத்த என் அன்னைக்கு
இப்பூவுலகில் எதுவுமே ஈடாகாது...!
 இப்பிறவியில்  என்னை வளர்க்க நீ பட்ட
கடனை ஏழேழு ஜென்மத்திலும் 
அடைத்திட முடியாதம்மா.....

இன்னும் எத்தனை பிறவி உண்டோ
அத்தனை பிறவியிலும் உனக்கே
மகனாக பிறந்து
இப்பிறவியில் மட்டுமல்லாது
இனி வரும் பிறவியிலும்  என்
அன்னையை  போற்றி பாது காக்கும்
வரத்தை அருள்வாய் இறைவா....


அன்னையர் தின வாழ்த்துக்கள் 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline !~Bharathy~!

அம்மா ' என்ற சொல்லில் தான் - எத்துனை
ஆயிரம் காந்த சக்தி உண்டு - இவ்
அகிலத்தில் எனக்கு அறிமுகமாகிய முதல் உறவு நீ
ஆண்டுகள் நூறு சென்றாலும் அழியாது உன்முகம்!


நடை  பழக்கினாய்
உடை உடுத்தி அழகு பார்த்தாய்
பேசக் கற்று கொடுத்தாய்
அன்பை உணர வைத்தாய்
பண்பை புகட்டினாய்
ஆற்றலை வளர்த்தாய்
அறியாமையை போக்கினாய்
அறிவுக்கு வழிகாட்டினாய்
சவால்களை எதிர்க்க வைத்தாய்
மொத்தத்தில் நீ ஒரு படைபாளி - உன்னை
பிரிந்து பெருந்  துயரை கொடுத்த  பாவி நான்!!


சாலை உணவு சலித்துவிட்டதம்மா - உன்
சமையலை சுவைக்க  நா ஏங்குகிறதம்மா!!

பத்து தலையணை வைத்து படுத்து பாக்கிறேன்
பத்து மாதம் சுமந்த உன் மடியின் சுகம் இல்லையம்மா!


கைநிறைய பணம் இருந்தாலும் - உனிடம்
கைவிசேடம் பெற கொடுத்துவைக்கவில்லையம்மா!

என் கோப தாபங்களை காட்ட நீ இல்லையம்மா !
நான் தினம் தினம் சொல்லும்  கதைகளை பொறுமையுடன்  கேட்க ஆளிலையம்மா!!
என் சோகங்களை சொல்லி அழ நீ இல்லையம்மா!
நான் பெறும் பாராட்டுகளை பார்த்து மகிழ நீ அருகில் இல்லையம்மா!
என் மனக்குறைகளை தீர்க்க நீ மட்டும் போதுமம்மா!!

தூரம் எனிடமிருந்து உன்னை
துன்பம் கொடுத்து பிரித்தாலும்
என்றும் என் நினைவில்  நீயும்
என்றும் உன் நினைவில்  நானும்!


என் வாழ்கை காவியத்தின் தலைவி நீ
நாயகி இன்றி காவியம் ஏது? - நீயின்றி
நான் எது?உனை வந்து சேரும்
நாளில்தான் உன் பிள்ளையின் உணர்வுகள் உயிர்பெறும்.


அம்மா என்ற அட்சய பாத்திரத்துக்கு பிச்சையா?
அம்மா உன்னிடம் பெற்ற கடனுக்கு ஈடு இல்லை -என்
உலகில் வைத்து போற்றுதற்குரிய அன்னைக்கு
உவமை சொல்ல அந்த கம்பனே முற்பட்டிருந்தால் கூட
தோற்று போய் இருப்பான் -என் அன்னைக்கு
நிகர்  என் அன்னை மட்டுமே!
நீடூழி வாழ்க நீ இவ் வையகம் உள்ளவரை!!

 
என்றும் உன்னை வந்து சேரும் நாளிற்காய்
சேர்த்து வைத்த பாசத்துடனும்,பல கதைகளுடனும்
சோராத இன்ப அன்புடன் காத்திருக்கும் உன் அன்பு 
                                                                              தீபு.

                                                                               


 


« Last Edit: May 09, 2012, 11:26:05 PM by !~Bharathy~! »


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
அம்மா
அம்மா
இன்று நீ இல்லை!!
ஆனால்,
என்னுள் நிறைந்திருக்கிறாய்!
அம்மா
என் வாழ்வில்
இந்தச் சொல்லை
பல கோடி  முறை
உச்சரித்து கொண்டிருக்கிறேன் .
வெவ்வேறு உணர்வுகளில்


இன்பம், துன்பம்
எல்லா நிலைகளிலும்
உன்னை அழைக்கிறேன் .
ஒவ்வொரு அழைப்பிலும்
உன் ஜீவனின்
நிழல் பதிந்திருக்கும்..
இறைவனுக்கு எப்படி
இணையில்லையோ
உவமையில்லையோ
அப்படியே உனக்கும்!!!

என் வலிக்கு
என் சோகத்திற்கு
என் சோர்வுக்கு
என் கோவத்துக்கும்
நீதானம்மா
மருந்தாய் இருந்தாய்
என் சொந்தத்தின்
ஆதார முலவேர்
நீதானம்மா!!
நான் நிற்பதற்கும்
நிலைப்பதற்கும்
நினைப்பதற்கும்
நீதானம்மா
இறைவனிடம் மன்றாடினாய்

""சொர்க்கம்
உன் காலடியில்
ஒரு தாய் மடியில்
ஒரு தாய் வடிவில்
என்பதை ஒப்புக்கொள்கிறேன்!!

உன் உயிரிலிருந்து
ஒற்றி
எனக்கு உயிர்கொடுத்த
மூல உயிர் நீதானம்மா!!!
அம்மா!!!
இன்று நீ இல்லை,
எல்லாம் எனக்கிருக்கிறது.
ஆனாலும்
தாயில்லா
அனாதை நான்!!!

உன்னை நினைக்கும் போதெல்லாம்
இந்த உலகம்
கடுகைப் போல்
இளைத்து விடுகிறது!
அம்மா,
நீ ஆயிரம் இமயங்களைவிட
உயர்ந்தவள்!!!
உன் பாதங்களைக்தொட்டு
நான் கண்ணீர்விட்டு
அழவேண்டும்!
உன் கால்களை
கண்ணீரால்
கழுவ வேண்டும்
அம்மா!!! அம்மா

அன்பேன்றாலே அம்மா
உன்  அளவுக்கு  அன்பு
காட்டினோர்   யாரும்  இல்லை
இனி  அப்படி  ஒரு  அன்பை
தரவும்  யாரும்  இல்லை

இனி  எத்தனை முறை  அழுது
புரண்டாலும்
கோடி  கோடி கோடியாய் வாரி
இறைத்தாலும்   பணத்தை
இனி  உன்னை  போல்
தன்னல மற்ற  ஒரு
உறவு  கிடைக்காதம்மா
 
உன்  நலத்தை  மறந்து
என்  நலத்தை  மட்டுமே
சிந்தித்தவள்
உன்  பசி  மறந்து
என்  பசி  ஆற்றியவள்
 
சிறு   எறும்பு  என்னை
கடிக்க  வந்தாலும்
சூரா  சம்ஹார
செய்து விடுவாள்
தத்தி  நடக்கும்
பருவத்தில்  நான்
தடுக்கி  விழுந்தாலோ
பதறி  போய்
தரையை  அடித்து  விடுவாய்
 
நிலவான நீயே
உன்  அளவுக்கு  அழகில்லை
நிலவை  காட்டி  அன்னம்  ஊட்டுவாய்
இவை  அனைத்தும்  இனி  எனக்கு
கிடைகத்தே
 
நீ  இருக்கும்  காலம்  வரை
உன்  அருமை  பெருமைகளை
அறியாதவளாய் நான்
அறியாத   காலத்தில்  உடன்  இருந்தாய்
உன்னை  முற்றிலுமாக  அறிந்து   விட்டேன்
அம்மா  அம்மா
நீ  மண்ணுலகில்  இல்லை ....

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்