Author Topic: மழையின் மடியில்!!  (Read 304 times)

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 70
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
மழையின் மடியில்!!
« on: June 28, 2026, 08:10:05 AM »
சிந்தலாய் பெய்யும் தூறலைக் கண்டதும்,
சிறுபிள்ளையாய் மாறி துள்ளிக் குதித்தது மனது!
முழுமையாய் நனைந்து அதில் திளைத்திடவே ஆசை!!

​மேலே பார்த்தால் அந்த கறுத்த மேகங்கள்,
ஒன்றோடு ஒன்று விளையாடி மகிழ்வது போல்!
பூமிக்கு குடை பிடிக்க மெல்ல நகர்ந்து வர,
பச்சைப்பசேல் என்ற புல்வெளியில்,
வண்ண பட்டாம்பூச்சியாய் நான் படுத்து,
இயற்கையின் மடியில் என்னை நானே தொலைத்தேன்!!

​சிறு தூறல் சாரலோடு என்னை தீண்டி,
என்னை வருடிச் செல்வது போல் ஒரு சுகம்!
அம்மாடியோவ்!! அந்த மண் வாசனை தரும் நிறைவு!
மனதில் இருந்த அத்தனை பாரங்களும்,
அந்த மழைத்துளியோடு கரைந்து காணாமல் போனதே!!!

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1295
  • Total likes: 4493
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: மழையின் மடியில்!!
« Reply #1 on: June 30, 2026, 10:50:26 PM »
முதல் மழை துளிகள்
மண்ணை முத்தமிடுகையில்
புறப்படும் மண்வாசனை
அலாதி மகிழ்ச்சி தான்

"அந்த மண் வாசனை தரும் நிறைவு!
மனதில் இருந்த அத்தனை பாரங்களும்,
அந்த மழைத்துளியோடு கரைந்து காணாமல் போனதே!!"

தொடர்ந்து எழுதுங்கள் சகோ  :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "