Author Topic: மௌனம் பேசும் துணை  (Read 5 times)

Offline Luminous

மௌனம் பேசும் துணை
« on: December 25, 2025, 09:47:02 PM »
தனிமையே…
உன்னைச் சுமந்தே
என் சிரிப்பு வெளியே வருது,
உள்ளுக்குள்ள
மௌனம் மட்டும்
சத்தமா பேசுது.
யாரும் இல்லாத
இந்த இடைவெளியில்
என்னை நானே
மறுபடியும் சந்திக்கிறேன்.
உன்னால்தான் வலிக்கும்,
உன்னால்தான் புரியும்…
தனிமையே,
நீ தண்டனை இல்ல,
நீ ஒரு மௌனமான
பாடம்.
LUMINOUS 💜💛🧡💚😇
« Last Edit: December 25, 2025, 10:22:48 PM by Luminous »