Author Topic: களவாடிய காதல்..  (Read 1584 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
களவாடிய காதல்..
« on: May 13, 2025, 03:15:42 PM »
காலையில் விழிக்கையில்
மங்கிய வெளிச்சமும்
கதிரவன் விரிகையில்
பூத்திடும் அனிச்சமும்
சோலையை எழுப்பிடும்
பறவையின் எச்சமும்
சோர்வுடன் இருக்கையில்
சோம்பலின் மிச்சமும்

பச்சை போர்வையில்
மூடிய மலையும்
பாதம் நனைத்திட
கூடிடும் அலையும்
பசித்திருக்கையில்
கொதித்திடும் உலையும்
பக்தியின் கண்களில்
ஒளிர்ந்திடும் சிலையும்

நட்ட நடுநிசி
நகைத்திடும் விண்மீன்
வெட்ட வெளியினில்
மேய்ந்திடும் கலைமான்
வீட்டுக்கருகினில்
கட்டிடும் மலைதேன்
மதுரை ஆயிரங்கால்
மண்டபத்தின் தூண்

குருவிகள் கீச்சிட
உதித்திட்ட சோலை
மனல்வெளி திட்டிலே
கோலமிடும் பாலை
கிராமத்து பாதையில்
தோன்றிய ஆலை
எந்தன் தனிமையில்
என்தாயின் சேலை

இப்படி எனக்குமே
ரசனையை தூண்டிட
எத்தனை படைப்புகள்
உலகினில் வந்ததே
அத்தனை அழகையும்
விஞ்சிடும் ஒன்றென
தந்தான் இறைவனும்
உன்னையே எனக்குமே..
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline SweeTie

Re: களவாடிய காதல்..
« Reply #1 on: May 13, 2025, 06:54:47 PM »
எதுகையும்  மோனையும்
ஏற்றமும்  இறக்கமும்
ரசனையை  மிஞ்சிடும்
படைப்புக்கு  வாழ்த்துக்கள்
 

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 332
  • Total likes: 1370
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
Re: களவாடிய காதல்..
« Reply #2 on: May 13, 2025, 07:02:02 PM »
அருமையாக உள்ளது 💐💐💐 வாசிப்பவர்க்கு விருந்து தங்களின் பதிவு.☺️

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
Re: களவாடிய காதல்..
« Reply #3 on: May 13, 2025, 08:03:28 PM »
Ungalin melana rasanaiku enthan siram thaalntha nandrigal thozhi
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
Re: களவாடிய காதல்..
« Reply #4 on: May 13, 2025, 08:05:55 PM »
எதுகையும்  மோனையும்
ஏற்றமும்  இறக்கமும்
ரசனையை  மிஞ்சிடும்
படைப்புக்கு  வாழ்த்துக்கள்
 



Nandrigal pala jo
Ellam neengal thantha arivu than
intha post sutathu ila en manasai thottathu..... bean