Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 351  (Read 4011 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 351

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


[/color][/b]

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
வானமதை முட்டி திறந்து
அண்டமதில் எங்கும் நிறைந்து
எங்கள் குரல் ஓங்கி ஒலிக்க
என்றும் துணை என்றே இருக்கும்

சங்கம் கண்டு தானாய் வளர்ந்து
அங்கம் என நம்மில் கலந்து
மங்கை என் நளினம் பொதிந்து
மங்கிடா புகழில் சிறக்கும்

தப்பிலா இலக்கணம் கொண்டே
ஒப்பில்லா ஒரு மொழியெனவே
சொற்பதம் சுவைகள் மிகுந்து
அற்புதம் மண்ணில் நிகழ்த்தும்

கற்பக விருட்சம் எனவே
கேட்பதை எல்லாம் கொடுக்கும்
சிங்கமாய் உருமும் தமிழும்
எங்களின் கடவுள் ஆகும்


அகரத்தில் தோன்றி நம் அகத்தில் கலந்து
"ழ"கரத்தினாலே சிகரத்தை எட்டி
பகரமில்லாத பெருமொழி என்றே
என் கரம் சேர்ந்த என் தமிழ் மொழியே
நீ வாழிய வாழியவே !!!
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline KS Saravanan

தமிழே தமிழே..!

பழமை ததும்பும் புதுப்பெண்ணாய்
பூமிக்கு வந்த புனிதமே..!
பள்ளியறை போதாது
உன்புகழ் பாடிட..!
இனிமை தரும் இலக்கணமோ 
என்றுமே நிலைத்திடுமே..!

எழில் கொஞ்சும் சொற்களால்
பெருமை பட வைக்கிறாய்..!
தாயின் பாசமோ
உன் மொழியில் இனித்திடுமே..!
தலைமுறைகள் கடந்தாலும்
மனிமுடியாய் இருக்கிறாய்..!

உன்னழகை பாடிட
பொன்முடியை படைத்தாயோ
புறநானூறு பாடல்கள்
தன் கடமைகளை செய்யுதே..!
பாரதியின் கவிதைகள்
புது வழியை காட்டுதே..!
நீ கடந்த பாதைகள்
காலம் கடந்தும் நிக்குதே..!

சங்கம் வைத்து வளர்த்தும்
உனது இலக்கியம் அறியாமல்
தலைமுறை மாறுதே..!
கலங்காதே தமிழே
ஆடில காத்தடிச்சா 
அம்மியும் நகருமே..!
அனால் நீ ஆலமரம்..!
இசை நிறைந்த தமிழே
நீயே என்றும் எங்கள் சந்நிதி..!
தாயாய் எண்ணியே
உன்னை என்றும் காத்திடுவோம்..!


« Last Edit: August 20, 2024, 10:03:14 PM by KS Saravanan »

Offline SweeTie

 
எம்மொழியும்  காணாத   ழகரம் 
தமிழ்   மொழிக்கு  அழகூட்டும் சிகரம்
அமிழ் தென்று  சொல்வேனா?  இல்லை
எழில் என்று சொல்வேனா?
எதுவென்று சொன்னாலும்
தமிழ் அழகுக்கு  நிகர்  ஏது  மொழி ? 

வடவேங்கடம் தொட்டு தென்குமரிவரை
மூவேந்தர்  மடியிலே   தவழ்ந்த தமிழ் 
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில்
சங்கம் வ;ளர்த்து   தரணியை ஆண்ட தமிழ்   
பாரத  மொழிக்கெல்லாம்  தாயான தமிழ்

உன்னை பேதை என்பேனா ?  இல்லை
 பெதும்பை என்றழைப்பேனா ?
மங்கை என்றழைப்பேனா ?  மடந்தை என்பேனா?   
அரிவை என்பேனா?   தெரிவை  என்பேனா?
என்றும் நீ  குமரியே!  தமிழே!!

குறிலோடு  நெடிலோடு சேர்ந்த,
உயிரோடு  மெய்  சேர்த்து உயிர்மெய்
என்றாகி,  ஆயுதம்  ஏந்திய  தமிழே  !!
ஈடாகுமா  உன் முன்பு வேற்றுமொழி ?

பாரதம் பிறந்த தமிழ் 
பாவலரும் பாமரனும் புகழ்ந்த தமிழ்
இன்று  பலநாடும்   வாழும் தமிழ்
போற்றுவோம்   வாழ்த்துவோம் 
மூச்சிலும்  பேச்சிலும்  தமிழ் ஒலிக்கட்டும்
என்றும் கொண்டாடுவோம்  தமிழ் மகளை !!
 
« Last Edit: August 21, 2024, 04:54:09 AM by SweeTie »

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 416
  • Total likes: 1931
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum



கல் தோன்றி மண் தோன்றா காலத்தே - வாளோடு
முன் தோன்றிய மூத்த குடியாம்..
ஜாதி மதம் வேற்றுமையின்றி - என்றும்
ஒற்றுமையாய் வாழும் எம் தமிழினமாம் ....

 தமிழுக்கு இணையான இனிமையும் முதுமையும் -எங்கள் தமிழில்  ழ கரத்துக்கு இணையான அழகும்...மார்தட்டிக் கூறுவேன்
யாம் அறிந்த மொழிகளில் மட்டுமல்ல
யார் அறிந்த எம்மொழியிலும் இல்லையென...

மழையால் மணக்கும் மண்ணின் வாசம் - எம்
வீடுகளில் என்றும் மணக்கும் சமையல் வாசம்....
மழையால் நிறையும் நீர் நிலைகள் - எம்
மகளிரால் மிளிரும் வாயிர்க்கோலங்கள்...

அறுசுவை உணவுடன் அன்பையும் வழங்கும்
விருந்தோம்பலில் மட்டுமல்ல -அனைத்து உறவுகளையும் ஒன்றாய் வளர்க்கும்
கூட்டுக் குடும்பங்களுக்கும் பெயர்போனது எங்கள் தமிழினம்...

தமிழினத்தின் முதுகெலும்பாம் விவசாயம்
மக்களின் பசியை போக்கும்....
எம்மக்களின் கல்லங்கபடமற்ற பாசம்
மனதின் வலியை போக்கும்...

எத்துணை உடைகள் வந்தாலும்
சேலையும் வேட்டியுமே தமிழரின் பண்பாடு
எத்துணை தேசம் சென்றாலும்  -  இதில்
மாறாது எங்கள் தமிழினம் என பண் பாடு...

கோல் வைத்து இசையுடன் ஆட கோலாட்டமும்
அதே கோலைக்கொண்டு எதிரியை வெல்ல சிலம்பாட்டமும்
புராணக்கதைகளை விளக்க நடக்கும் தெற்குக்கூத்தும்
கேட்போரையும் ஆட தூண்டும் பறையும் தப்பாட்டமும்....

மாந்தரின் நளினத்திற்கு பரதமும் - எங்கள்
காளையரின் வீரத்தை காட்ட ஜல்லிக்கட்டும் - என
ஆயா கலைகள் பலவின் பிறப்பிடமாம்
என்றும் எதிலும் உயர்ந்த எங்கள் தமிழ்நாடு....

சொல்ல சொல்ல திகட்டாது - தமிழின்
பெருமையை கூற இக்காலம் போதாது...
காலம் பல கடந்தாலும் மாறாது....
தேசம் பல பறந்தாலும் மாறாது...

தமிழதன் பெருமையும்... தமிழன் என்ற கர்வமும்



« Last Edit: August 21, 2024, 10:04:12 PM by VenMaThI »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1436
  • Total likes: 3009
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen

தேமதுர தமிழோசை உலகம் எல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
என்ற என் பாரதியின் கனவு பலித்தது

தொலை தேசத்தில்  வாழும்
ஒரு தமிழ் அறிந்த தமிழச்சியின்   
வாழ்த்து மடல் இது 💜


பண்பாடு பாரம்பரியம் இரண்டையும்
மூச்சென்று கொண்ட தேசம் இது
ஜல்லிக்கட்டு  என்று சீறி  உலகையே 
வியக்க வைத்த நாடு இது
எங்கள் பாரதியையும் வள்ளுவனையும்
பெற்றெடுத்த மண் இது
புலம் பெயர்ந்தாலும் எங்களின்
குடும்ப வேர் இது
நட்பையும்  கற்பென்று போற்றும்
 மாநிலம்  இது
என் அடையாளமாம்
என் தமிழ் மொழியின் பிறப்பிடம் இது 💐
 

கலைகளின் சிகரமாய்
 கோவில் சிற்பங்களும் உண்டு
அயலாரும் கண்டு வியக்கும்
 அரிய கீழடி  கல்வெட்டுகளும் உண்டு
கம்பிரமாய் வீற்றிருக்கும்
 கோவில் கோபுரங்களும் உண்டு
பாமரனுக்காய் நகர்ந்து
 இறைக்காட்சி தந்த எழில்மிகு
 நந்தியும் உண்டு
அறமே நெறியென அமைந்த இடம் இது 
 எங்கள் இறைவனும் வந்து
வாழ்ந்து சென்ற புண்ணிய நாடு அது  💐

 நடராஜன் நவிழ்ந்த பரதக் கலையும் 
அகத்தியர் அருளிய வர்மக்கலையும்
கன்னியாகுமாரி கண்ட அடிமுறை கலையும்
மதுரை மயக்கிய ஒயிலாட்டக் கலையும்
என கலைகளுக்கு மன்றம் வைத்து
தலைச்சங்கம் , இடைச்சங்கம் ,
கடைச்சங்கம் என என்  தமிழுக்கும்
 சங்கம் வைத்து  வளர்த்த நானிலம் இது
ஆய கலைகளை உலகுக்கு அளித்த
பொன்னான நாடு அது 💐

விவசாயமும் விருந்தோம்பலும்
விஞ்ஞான வீரர்களும்
எழில் மிகு கிராமங்களும்
எளிதாய் பழகும் மனிதர்களும்
ஒரு சேர அமைந்த தேசம் இது
வந்தோரை வாழ வைக்கும் தமிழ் நாடு அது

என்றும் வாழ்க வாழ்க பல்லாண்டு! 💐

நட்புடன்
வேதனிஷா


 
« Last Edit: August 23, 2024, 07:54:00 AM by Vethanisha »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 232
  • Total likes: 560
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.

உலகில் உண்டு, பேசும் மொழிகள் சில கோடி!
எனினும்!  "தமிழ்" மொழியே என்றும் என்களின் உயிர் நாடி!!

என்ன தவம் செய்தோனோ! பிறந்திட என் "தமிழ் நாட்டில்" !..
எதுவாகினும் செய்திடுவேன், என் நாட்டின் மேலான உடன்பாட்டில் !!

என் உறவுவுகள் அனைவரும் "அன்பு"எனும் நேர்கோட்டில்.!
பாடு பட்டும் பயனில்லை சிலர் பிரித்தாளும் படும் பாட்டில் 😁...

அளவுகோள் இல்லை, என் நாட்டு மக்களின் அன்பு அதனை அளவிட!.
முடிவு என்று இல்லை, என் நாட்டின் புகழ் பற்றி கவி பாட!!

கட்டிட கலையும், நெற்களஞ்சியமும் "தஞ்சையிலே"!
சிர்ப்பக்கலையும் சிலம்பாட்ட கலையும் "மதுரையிலே".!!

 கண்டதுண்டா? கலைக்கழஞ்சியம் வேறிடத்தில்.?
காண்பது அனைத்தும் கலைதானே  என் தாய் நாடான தமிழ் நாட்டில் !!.

உலகை ஆண்ட அலெக்சாண்டரும், ஆள முடியாத  தமிழ் மண்னடா!

அன்பு கொள்ள என் மக்களை போல், இம்மண்ணில் இருப்போர் வேறு யாரடா?

காவேரி ஆற்றின் கரைதனிலே! கல் போன்ற நெஞ்சும் கரைந்திடுமே!!

தாவி குதிக்கும் தாமிரபரணி, தமிழ் நாட்டு மக்களின் உயிரோட்டம் நீ..

என்ன வளம் இல்லை என் திருநாட்டில்?
இருந்தும் வாடுகிறேன் 😒 வெளி நாட்டில்.


என் மக்களும், என் மனமும் நாட்டினிலே!
நான் தனித்து வாடுகிறேன் இங்கு காட்டினிலே!!

சரிக்க நினைத்தாலும், சாதிக்கும் உள்ளமடா!

சத்தியத்தின் பாதையில், சங்க தமிழ் நாட்டின் பிள்ளையடா!!

MN-AHAMED ARRON.....
« Last Edit: August 23, 2024, 12:24:42 AM by Unique Heart »

Offline PreaM

தமிழ் !
தமிழர்களின் உயிர் மூச்சு

தமிழே! என் தாய் மொழியே
செம்மொழியான முதல் மொழியே
உயிரும் மெய்யும் இணைந்த தமிழ் மொழியே
ஓர் எழுத்தில் பொருள் தரும் ஒருமொழியே

ஐவகை இலக்கணம் உன்னிடமே அதில்
அணி இலக்கணம் அழகிய அணிகலனே
எதுகை மோனையில் சிறந்த உந்தன்
சந்தம் என்றும் உனது சொந்தம்

தமிழே! என் தாய் மொழியே
அகத்தியம் விளக்கிய முத்தமிழே
அச்சில் ஏறிய முதல் இந்திய மொழியே
புலவர் பலர் போற்றிய தமிழ் மொழியே

தனித்துவமானது என் தாய் மொழி
பிறமொழி கலப்படமில்லாத தமிழ்மொழி
என் உயிரினில் கலந்த மொழி
உள்ளத்தில் நிறைந்த தமிழ் மொழி

அன்று முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர்
இன்று இணையச் சங்கத்தில் தமிழ் வளர்ப்போம்
தமிழ் மொழி உயர வேண்டும் என்றால்
தமிழன் உயர வேண்டும்

வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

Offline Kavii

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி !வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு வன்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி  இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி ! எங்கள் தமிழ்மொழி ! என்றென்றும் வாழியவே!

சொல் கொண்டு புகழ் மாலை சூட்டிட இயலாது
எம் தமிழ் மொழிக்கு! எனினும்
தாய்மொழியைப் போற்றுதல் தரணிக்கே பெருமையன்றோ!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

என்னும் முழக்கம் தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், எப்போதும்
ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்!


தாயின் கருவறையிருலிருந்தே நாம் பயின்ற மொழி !
மக்கள் உணர்வோடு கலந்தது நம் தமிழ் மொழி!
மாந்த இனத்தின் முதல் மொழி! மண்ணில் வந்த முதல்மொழி!
ஆதியில் பிறந்த மொழி! தென் பொதிகையில் தவழ்ந்தமொழி!
கம்பன் கவி வடித்த கவிதை மொழி! பாரதி கர்ஜித்த மொழி!
தாய் தந்த அன்பு மொழி! தந்தை சொன்ன அறிவு மொழி!
அம்மம்மா எத்தனை இன்பம் இதை கேட்கும்போது !

தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது உன் சிறப்பு!,
அதை எல்லாம் விவரிக்க ஓராயிரம் கவிதை கூட போதாது!

பாரினில் தோன்றிய மொழிகள் ஆயிரம்! அதில் காணாமல்போனது ஏராளம்!
தமிழ் கவிகள் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆயிரம் ஆயிரம்!

தமிழரின் பண்பை பறைசாற்றும் விதமாக
காலம் கடந்த கோவில்கள்!
கற்சிலைக்கும் தசை படைத்து நரம்பு படைத்து,
எலும்பு படைத்து உயிரூட்டிய தமிழன்! 
நெல் விளையும் விவசாயம் ! மண் வாசனை மாறா கிராமம் !
அழியாத பண்பாடு ! அழகோடிணைந்த கலாச்சாரம்!
இயல் இசை நாட்டியம், நாட்டுபுற கலைகள்,
திருவிழா பண்டிகைகள், வீர விளையாட்டுக்கள் !
பண்பு மாறாத நடப்பியல்பு, மறையாத உறவு முறைகள்,
ருசியூட்டும் சமையல் வகைகள், கூட்டு குடும்பம், விருந்தோம்பல் !
அப்பப்பா எத்தனை பெருமைகள் !

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதானது எங்கும் காணோம்’! என்று

தமிழ் மொழியை பாரதி போல் நேசித்தவர் எவரும் இல்லை! பதினான்கு மொழிகளை கற்றுகொண்ட பாரதி
தமிழ் மொழியை உயிர் மூச்சாக கொண்டாட முட்டாளும் இல்லை!
அவர்தம் கவிதைகளே அதற்கு சாட்சி !


சங்கம் வளர்த்து பறை சாற்றிய தமிழ் நாட்டில் பிறந்தது பெருமை!
தமிழை தாய் மொழியாக கொண்டது பெருமை!
தமிழில் கவிதைகள் எழுதுவது பெருமை!
தமிழே கவிதையாக இருப்பது பெருமை!
தமிழ் மொழி கொள்கை நமது உரிமை!
தமிழ் மொழி காப்பது நாம் கடமை!

தமிழ் மொழி நாம் உயிரின் அடையாளம் !

உலகின் ஆறாயிரத்து எண்நூற்று ஒன்பது மொழிகளுக்கு மத்தியில் தாய் மொழியான தமிழ் மொழி பொது மொழியாக தான் இயல்பில் கடுகளவும் மாறாமல்  அத்தனை சிறப்பம்சங்களையும் தன்வசப்படுத்தியுள்ளமை பெருமைபடக்கூடிய விஷயமே!

தடுமாறி நிற்கும் கப்பலுக்கு வழிகாட்டிடும் கலங்கரை விளக்காக மனிதனுக்கு வழிகாட்டிடும் அரிய தத்துவங்களை ஆழமான சிந்தனைகளை சுருங்க சொல்லி கடலளவு வழிகாட்டிடும் வள்ளுவம் தந்த மொழி நம் தமிழ் மொழியாம்! அத்தகைய வள்ளுவத்தின் படி வாழ்ந்து காட்டுவோம்! உயர்ந்து காட்டுவோம் வாழ்வில் !

பார் போற்றும் இத்துணை சிறப்பம்சம் கொண்ட  என் தமிழன்னைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

வாழ்க தமிழ்! வளர்கள் எம் தமிழ் மக்கள் !




Offline BlueSea

  • Newbie
  • *
  • Posts: 25
  • Total likes: 66
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
 :-\



ஏதில்லை.... இத்திருநாட்டில், ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்....
என்று நம் பாரதி கூறியதோ உன்னையல்லவோ.... என் தாய் தமிழை பறைச்சாற்றி எங்களுக்கும் ஏனைய வெளி நாட்டவர்களுக்கும் ஓர் தாயாய் பாலூட்டி சீராட்டி எங்களையும் எங்கள் சுற்றதாரும் பயன் பெற உன் வளங்களோடு வளர்க்கும் என் அன்பு தாயே தமிழ் திருநாடே...!  ❤❤❤

மூவேந்தர்ரும், தலை சிறந்த புலவர்களும், ஞானிகளும், ரிஷிகளும், யோகிகளும், சித்தர்களும் படைத்த பண்டைய கால இதிகாசாங்களும், புராணங்களும், மருத்துவ குறிப்புகளும் அமைய கருவூலமாய் அமைந்துள்ள என் அன்பு கலந்த தாயே தமிழ் திருநாடே...!

ஒரு தாயாகபட்டவள் தன் குழந்தைகள் தனக்கு எவ்வளவு இம்சை கொடுத்தாலும் அதெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அன்பு எனும் அமுதத்தை பொழிகின்ற தாயே தமிழ் திருநாடே...!

உந்தன் புகழ் தனை பாட இவ்வொரு ஜென்மம் போதுமா.... ❤😍 ஆதலால், உனக்கு ஓர் நவரத்தின
பாமாலை இயற்ற உள்ளேன்...! ❤😍

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண்னே நின் பதம் பணிந்து என் சிரம் தாழ்த்தி இப்பாமலையை உமக்கு சூட்டுகிறேன்...!

நம் பாரத தேசத்தில், சனாதன தர்மத்தை இவ்வுலகிற்கே பறைசாற்றிய நாடே.... வைரம் போல் மின்னும் முத்து முத்தான கவிகளையும் கவிஞர்களையும், புலவர்களையும் ஏட்டு சுவடியில் மூலமாய், கல்வெட்டுகள் மூலமாய் உலகெங்கும் வியாப்பித்து இருக்கின்ற தெந்தமிழ் நாடே... ❤❤❤

உலகளில், எங்கு யாருக்கு எந்த ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் முதன் முதலில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற பைந்தமிழ் வைடூரியமே...!  ❤❤❤

ஆதி மொழியாம் தமிழை பண்டைய கற்காலங்களில் கூட கிரந்தம் எனும் மொழியிலே வளர்த்தி உலகலாவிய மொழிகளிலே தமிழ் மொழியை எல்லா மொழிகளுக்கும் தாயாய் உருவமைத்துக்கொடுத்த செந்தமிழ் முத்தே ❤❤❤

காதல் எனும் உன்னத உறவை மையமாய் வைத்து இயற்றிய பொக்கிஷ இதிகாசாங்கள் பலவும் கற்பனைக்கு அப்பாற்பட்டு யுக யுகங்களாய் அன்பெனும் சுவடுகளை தாங்கி கொண்டிருக்கும் மரகதமே... ❤❤❤

சுமுதாயம், கட்டிடக்கலை, விவசாயம், நீர்நிலை தேக்கங்கள், அணைகள் யாவும் அமையவும், நம் தாய் தமிழ் மண்ணின் அரவணைப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட வித்தாக விளங்கிய மஹா சாம்ராஜ்ஜியங்கள் அமைத்து கொடுத்த மாணிக்கமே.... ❤❤❤

மலைகள், காடுகள், இயற்கை எழில் சூழ் நிலையில் மக்கட் பெருஞ்செல்வத்தை வாழ வைத்து கேட்பவை யாவும் கேட்ட மாத்திரத்தில் தந்திட தனக்குள்ளே ஓர் அற்புத சக்தியை அமைத்து கொண்டிருக்கும் பவளமே.... ❤❤❤

உன் பிள்ளைகள் நாங்கள் உனது மார்பில் எட்டி  உதைத்தாலும் உம்மை உதாசீனம் செய்து எள்ளி நகைத்தாலும் பாராட்டிக்கொள்ளா அன்பு மனம் கொண்ட புட்பராகமே.... ❤❤❤

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்று கூறிய மகாகவி பாரதியை தன்னுள்ளே படைத்திட்ட கோமேதகமே.... ❤❤❤

ஆம்ராவதி, காவேரி, சிறுவாணி, பொய்கையாறு, தாமிரபரணி என்று கூறிக்கொண்டே போகும் அளவிற்கு நீல திருமேனியால் வளர்ந்து வங்கால விரிகுடா, இந்திய பெறுங்கடல்களால் ரக்ஷா பந்தனம் செய்து நம் பாரத்தை ஓர் வேலி போல் அமைந்து காத்துக்கொண்டிருக்கும் சீர்மிகு நாடே என் தாய் தமிழ் திருநாடே....!!!❤❤❤


செந்தமிழ் நாடு இது....!!! ❤❤❤ எங்கள், செந்தமிழ் நாடிது.... ❤❤❤ செந்தமிழ் நாடிது....!!! ❤❤❤😍

https://youtu.be/4VwoRbnojsY?si=B4CVesDpoAO6gGhW