Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 348  (Read 4076 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 348

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


[/color][/b]

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
செவ்வானில் சிறகடிக்கும்
சிறு பறவை யாவைக்கும்
கல்லாது வரும் சிறப்போ
கவலையின்றி பறப்பதுதான்

அவ்வாறு பறந்து வரும்
பறவைகளின் சிறகினை போல்
எந்நாளும் துணை எனவே
நமக்குமிங்கே நட்பிருக்கும்

பொல்லாரின் சூழ்ச்சிகளில்
சிக்கி நிற்கும் நிலைதனிலே
நட்பென்ற ஓர் உறவே
நமை காக்க கை கொடுக்கும்

சிகரமாய் உயர்ந்து நின்று
காலத்தில் உதவுகின்ற
நட்புக்கோ பகரமென
இவ்வுலகில் ஏதுமில்லை

அவ்வாறு ஆபத்திலே
கை கொடுக்கும் நட்பினையே
எந்நாளும் பொற்றிடுவோம்
நட்பினையே நாம் காப்போம்...

நட்புடன் திருவாளர் பீன்




« Last Edit: July 09, 2024, 02:00:53 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1837
  • Total likes: 5678
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

Self-esteem

நாள்தோறும்
தூசிக்கு பெறாத விஷயங்களை
யோசித்து, கவலைப்பட்டு கொண்டு
இருந்தால் எதுவும் இங்கே மாறாது

மனம் என்னும் திரையரங்கில்
குடும்ப பிரச்சனை
காதல் பிரச்சனை
தொழில் பிரச்சனை
கடன் பிரச்சனை என்று
தினம்தோறும் கவலைப்பட்டால்
பிரச்சனைகள் தீராது
மாறாக
வண்ணமயமான படமாகவே பிரதிபலிக்கும்

நொடிக்கு நொடி
கொல்லும் மனக்கவலை
மரணத்தை காட்டிலும் கொடியது

மன நிம்மதியை கெடுக்கா
தீர்வை நோக்கியே
சிந்தனைகளும் செயல்களும்
யுக்திகளும் இருக்க வேண்டும்

அச்சம் தவிர்
துயரத்தை தூர நிறுத்து
உன் பயம் தான் உன் பலவீனம்
உன் துணிவு தான் உன் பலம்
கவலை கொள்ளா மனமே
விழிப்புடன் இருக்கும்
துன்பத்தையும் தீர்க்கும்

குப்பைமேட்டை போல்
மனதில் கவலைகளை குவிக்காதே
சில மனங்கள் உன்னை வெறுக்கும்
தளர்ந்து போகாதே
உனக்குள் இருக்கும் இலட்சியத்தை தேடு
அதை மனதில் வை !
சில சமூக கட்டமைப்புகளையும் மடமைகளையும் காரணம் சொல்லி புலம்பினால்
எதுவும் கிட்டாது
நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்
இதுவே வெற்றியின் தாரக மந்திரம்

உனக்கு நீயே ஆறுதல்
உனக்கு நீயே வழித்துணை
வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழு
முயற்சி செய் ! மேலே எழுந்து வா !


You become what You Believe !
« Last Edit: July 09, 2024, 06:24:05 PM by சாக்ரடீஸ் »

Offline BlueSea

  • Newbie
  • *
  • Posts: 25
  • Total likes: 66
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum




கை கொடுக்கும் கை:

கை கொடுக்கும் கை நம்பிக்கை...

ஆம், கரடு முரடான பாதைகளை கடக்க
நம்பிக்கை மட்டுமே நமக்கு கை கொடுக்கும்...
நான் வீழ்வேன் என்று பலரும் நினைத்ததுண்டு - இருப்பினும்
என்னை துவண்டு போக விடாமல்
என்னுள் மன உறுதி புகட்டி
எம் பாதையில் தாங்கி பிடித்து
எம்மை மேலுயர்த்தும் கையே அந்நம்பிக்கை....

மஹாபாரத போரின் போது
பார்த்தனுக்கு சாரதியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
உபதேசம் செய்த ஒவ்வொரு வரிகளும்
அவனுக்கு ஓர் நம்பிக்கை... 🙏

எதிரிகளால், கிருஷ்ண தேவராயரின்
வீழிச்சி உருவாகும் தருவாயில் - அவனுக்கு
சானக்கியன் என்ற மாமந்திரியின் தந்திரம்
கை கொடுத்து தூக்கியது... 🙏 அதுவே, ஓர் நம்பிக்கை...!

வாழும் காலங்களில்
நீ வீழ்வாய் வீழ்வாய் என்று உலகம் கூறினாலும்
அதையெல்லாம் மீறி
மனம் தளறாமல் முந்தி வந்து
நம் உந்து சக்தியை உபயோகித்து
நாம் முன்னேறி சென்றால்
நமக்கு பரிசிலாக ஓர் கை
நம் முன்னே பிம்பமாகுவோ, மனிதராகவோ, ஓர் பொருளாகவோ
நம்மை நம் வெற்றி எனும் பாதையில் உயர்த்தி தூக்கி
நம்மை இவ்வுலகில் மிளரச்செய்யும்....!❤

அவ்வளவு, ஏன்
ஓர் பொதுப்படையான எடுத்துக்காட்டு
இப்புகைப்படம் பார்க்கையிலே
நம் கண்ணுக்கு முன் ஓடும் (2024 ஜூன் 29) ஓர் பொன்னாள்
நமது இந்திய மட்டைப்பந்து அணி
உலக கோப்பையை வென்றது .
இதில் கை கொடுத்தது யாரென்றால்
நம்மணியின் பயிற்சியாளர், தலைவர், பந்து வீச்சாளர் மட்டுமின்றி
தன் ஒட்டு மொத்த உழைப்பையும் கொடுத்து
ஒற்றை கையால் Catch பிடித்த அவ்வீரரும் ஆவர்....
🥰 நம்பிக்கை இருந்ததால் மட்டுமே
(17 வருடங்களுக்கு பிறகும்) நம்மால் இவ்வுககத்தை ஜெயிக்க முடிந்தது...

நம்மை உயற்ற
நம்முள் இருக்கும் உந்து சக்தியும்
நம்மை தூக்கி விடும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால்
எவ்வொரு காரியத்திலும்
நாம் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது...!

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)
(திருக்குறள்)
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)
---------------------------------------------------------------------------------------------
இவ்வாய்ப்பைளித்த, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏

« Last Edit: July 10, 2024, 12:46:01 PM by BlueSea »

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 417
  • Total likes: 1931
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


நம்பிக்கை

மனிதனின் பலமும் இதுவே
மிகப்பெரும் பலவீனமும் இதுவே ..
பிறர் மீது வைத்து தள்ளாடுவதும்
தன் மீது வைக்க தயங்குவதும் இயல்பாய் போனதே ...

கடந்து வந்த பாதையை நினைத்து
கலங்கி நிற்கும் மனதிற்கு
எதிரே இருக்கும் காலத்தை நோக்கி
எட்டு வைக்க கற்றுக்கொடு ..

வானுயற பறக்க நினைத்தால் - பறவைக்கு
சிறகின் மீது நம்பிக்கை வேண்டும்
இப்புவியை ஆள நினைத்தால் - நீ
நம்பிக்கையை விதைக்க வேண்டும் ...

கை இழந்தவனும் சாதிப்பது
தன் நம்பிக்கையை வைத்து தான்
தான் இழந்த அனைத்தையும் அடைவான்
நம்பிக்கையை என்றும் இழக்காதவன் ...

முகமறியா ஓட்டுநர் மீது நம்பிக்கை கொண்டு
பல பயணங்கள் கடக்கும் நாம்
தன்னம்பிக்கையை துடுப்பாய் கொண்டு
நம் வாழ்க்கை பயணத்தில் இனிதாய் கரை சேருவோம் ...



உழைப்பை உடைமையாய் கொண்டு
உதிரத்தை வியர்வையாய் சிந்தி
முன்னேறத் துடிக்கும் மனிதனுக்கு - என்றும்
ஏற்றி விடும் ஏணியாய் இருப்போம்..

தலை குனிந்து அடுத்தவருக்கு
கை கொடுக்க மனமிருந்தால்
அண்ணாந்து ஆகாசத்தை பார்க்கையிலே
ஆயிரமாயிரம் கைகள் நமக்காய் நீட்டப்படும்..

தடுக்கி விழுபவனை தாங்கி பிடிக்கவும்
விழுந்தவனை தூக்கி விடவும்
தன்னலமில்லா நெஞ்சங்கள் பல உண்டு இப்புவியில்
நம்பி கை கொடுப்போம் - நம்பிக்கையுடன் வாழ்வோம் ...





« Last Edit: July 10, 2024, 03:06:08 PM by VenMaThI »

Offline KS Saravanan

துணிந்து வா நண்பனே..!
வறுமையே உன்னை தடுக்கலாம்
திறமையே என்றும் ஜெயிக்கலாம்
துணிந்து வா ...

உன்னுள் உறங்கும் திறமைகள்
எட்டுத்திக்கும் பரவட்டும்
உன்னைப் பற்றிய செய்திகள்
காற்றிலே உலவட்டும்
துணிந்து வா ...

நிலவும் அது நெடுதொலைவில் இல்லை
நீ துணிந்தால் போக வானமே அது எல்லை..
துணிந்து வா ...

உன் பாதையை பெரியதாக்கி
உன் பார்வையை கூர்மையாக்கி
உன் கால்களை திடமாக்கி
உன் வலியினை உரமாக்கி
உன் முயற்சியில் வெற்றி நடை போடு
சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க
துணிந்து வா நண்பனே..!


Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1438
  • Total likes: 3009
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen

மகனே !
வா!
எழுந்து வா !
மலைகளைத்  தாண்டி  வா!
தடைகளை  உடைத்து வா !

கை  கொடுக்கும்  கையாய் - இதோ
உன் தகப்பன் உண்டு அறிவாய்
தோல்வியும் தோற்று போகும்
முயற்சியை நீ தொடர்ந்தால்

தொட முடியா இடம் என்று
ஒன்றிங்கு  இருந்ததில்லை
நிமிர்ந்து  பார்!
 
அந்த வானமும் சிவந்து போகும்
உன் பார்வையின் கூரிய  தீண்டலில்
நேர்கொண்டு பார்!

தனயனே !

வாழ்க்கை சொல்லும் பாடங்கள்  ஆயிரம்
அதன் சிகரம் தொட தேவை
உழைப்பும்   அதனூடு மனிதநேயம்

சிறகுகள் உண்டு பறவைகள் பறக்க
நினைவு கொள்
அங்கும் பலம் , கூடி வாழும் பண்பே!  தினம் சிறக்க

என்றும்
சுயநலம் அற்று சீர்  கொண்டு வாழ்வாய் 
நல்லோர் போற்ற வீர்  கொண்டு உயர்வாய்

 
புதல்வனே !

முன்னேறிச்  செல்ல என் கைகள் 
உண்டு பற்றிக்  கொள் !
தன்னம்பிக்கையை உன்னுள்ளே 
வேரூன்றி விதைத்து கொள்!
குறிக்கோள் எதுவோ அதனை நோக்கி
பயணம் கொள் !

இதுவே இந்த தந்தையின் உயரிய உயில்
 நினைவில்  கொள் !
இனி வரும் சந்ததியிடனும்
பகிர்ந்து செல் !




« Last Edit: July 11, 2024, 12:21:42 PM by Vethanisha »

Offline Kavii

உறவுகள் எதுவென, என் நெஞ்சம் கேட்டபோது,
உன் முகம்தான் மனதிலே ஒளிர்ந்தது.
நினைவுகளின் தாலாட்டு என் நெஞ்சில்
என்றுமே என் தோழனாக நீ
அன்பின் அலைகள் நம்மை இணைத்தது.

காடு மலைகளைத் தாண்டி போகும் நம் ஆசைகள்,
மறுத்திடா மல் தாங்கும் நம் நம்பிக்கை.
 உனது கையெழுத்து நான் என் மனதில் பொறித்து வைத்துள்ளேன் ,
அது நாம் உயர்ந்திட நம்மை வாழ்த்தும் வெற்றியின் விதை.
தோழமையின் பெருமை, தன்னம்பிக்கையின் வலிமை,
 நாம் ஒன்றாய் இருந்தால், எதுவும் சாத்தியமே. !
அழிந்து போகுமே எந்த இடரும்,

எப்போதும், நம்பிக்கையின் ஒளியில் நம் வாழ்வின் வெளிச்சம்.
உன்னால் நான் கண்டேன், என் திறமையின் உச்சம்!,
உறவின் வலிமையில் நானும் நம்பிக்கை கொண்டேன் .
நீ எனக்கு கொடுத்த நட்பு என்னும் உறுதிமொழியால்,
என் வாழ்க்கை காவியம் ஆனது. உன் நட்பின் அழகிய வரிகளில் !

நட்பின் நிழலில் நம்மை வளர்த்தோம்,
அன்பின் விளக்குகளில் இருளை ஒழித்தோம்.
 நினைவுகளில் நீ எனக்கு தன்னம்பிக்கை,
உன்னோடு பயணம் செய்யும் பாதை எனது வெற்றியின் பாதை.
அழகான இவ்வுலகம், நம்மை இணைத்தது,
பல்வேறு திரைகள் மறைப்பினும் மறையாது.நம் உறவின் வண்ணங்கள்,
உன்னுடன் பயணம், எனக்கு இன்றும் திகைப்பே!

நண்பனே, என் வாழ்வின் சொந்தமே.
நீ உண்மையான உறவு, எனது தன்னம்பிக்கையின் ஒலி,
 உன் ஆதரவு எனக்கு, எப்போதும் வளமே!
 என் நண்பனே! நீ என் நண்பன் மட்டுமல்ல
என் தன்னம்பிக்கையின் வெளிச்சம்,
 உன்னோடு வாழ்வது, எத்தனை பேரழகு!

நாம் ஒன்றாய் வாழ்வோம், வெற்றியின் தோழமையில்,
உறவின் தழுவலில், தன்னம்பிக்கையின் நிழலில்.
நினைவுகள், கனவுகள், எல்லாம் நம் சொத்து,
அன்பின் மொழியில், நம் இதயம் இணைந்தது,
உறவின் வழியில், நம் தன்னம்பிக்கை தழைத்தது.
 நீ எனக்கு தோழன் மட்டுமல்ல  உறவின் தெய்வம் !

 நீயே எனக்கு கைகொடுக்கும் தன்னம்பிக்கை சக்தி!
உன்னால் காண்பேன் வாழ்வின் வெற்றி!
எதிர் பார்ப்புகளே இல்லாமல் கை கொடுத்து
தூக்கிவிடும் ஒரே உறவு நட்பு!
நட்பு புனிதமானது! நட்பை போற்றுவோம் என்றும் !

Offline PreaM

தளராத மனமே உன்னை தயார்படுத்தும் குணமே
தடைகள் கோடி வந்தாலும் தளராது உந்தன் மனமே
உடல் வலியதாயினும் உள்ளத்தில் உறுதி வேண்டும்
உறுதியோடு போராடு வெற்றி வாகை நீ சூடு

உடலும் உள்ளமும் உறுதியானால்
உனக்குள்ளே ஊற்றெடுக்கும் உத்வேகம்
தெளிவோடு திறன்பட செயலாற்று
தெரிந்ததில் புதுமையை நீ காட்டு

நாட்களை கடத்தி வாழும் மனிதர்களும் உண்டு
நாட்களை தனதாக்கி உலகில் வெல்வோரும் உண்டு
இன்று வேதனையை மறந்து போராடும் மனமே
நாளை சாதனையோடு வெற்றியை தனதாக்கும்

தோல்வியே வெற்றிக்கு முதல்படி
இது முன்னோர் சொன்ன பழமொழி
தொடர்ந்து உன் பாதையில் முன்னேறு
இதுதான் இலக்கை அடையும் உன்வழி

எல்லை இல்லா இவ்வுலகினிலே
உன் இலக்கிற்கோ எல்லை உண்டு
தோல்வியை கண்டு மனம் தளராதே
உன் இலக்கை வெல்வது எளிதாகும்

போராட துணிந்த மனமே போராடு
புது சரித்திரம் படைத்திட போராடு
போராட துணிந்த மனமே போராடு
வெற்றிக்கரம் பற்றிடும் வரையிலும் போராடு

       
-<<<   இலக்கை அடைவோம்  >>>-