Author Topic: ❤️❤️ தனிமையே துணை ❤️❤️  (Read 959 times)

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 419
  • Total likes: 1952
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum



தனித்திருந்தும் கூட துணிச்சலாய்
முன்னேறிய காலம் அன்று....
தனிமையே தன் மனதில் ரணமாய்
வாட்டி வதைக்கும் காலம் இன்று....

தனிமையிலே இனிமை கண்டு
தன்னலம் காப்போர் மத்தியில்
துவண்டு தான் போகிறேன்
தனிமையின் துணையில் நான்...

என்றும் எதையுமே வெறுத்ததில்லை
தனிமையை தவிர இவ்வுலகில்...
தனிமையை வெறுத்த இம்மனதிற்கு
தனிமையே துணையாய் ஆனதிங்கு.....





Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1220
  • Total likes: 4128
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ❤️❤️ தனிமையே துணை ❤️❤️
« Reply #1 on: June 29, 2024, 07:01:55 PM »
இந்த தனிமைக்கு தான்
நம்மேல் எவ்வளவு அன்பு

தனிமையே துணையாய்!

நல்ல கவிதை

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "