Author Topic: கான்கீரீட் காடுகள்..  (Read 776 times)

Offline Jawa

கான்கீரீட் காடுகள்..
« on: April 01, 2012, 08:03:48 AM »
தைரியமாக பறந்து செல்...
அஞ்சாமல் பறந்து செல் ...
எங்கும் செல் ---ஆனால்......
மனிதம் இழந்த
மனிதர்கள் வாழுமிடம்
செல்லாதே...
அஞ்சாமல் பறந்தேன் ..
அப்பாவின் துணையோடு..
எங்கும் சுற்றினேன் ..
நீர் நிலைகள் காடு வயல்கள்..
அப்பப்பா ஆனந்தம் ....
மனிதம் இழந்தவர்களுக்கு
மத்தியில்..
மனிதர்களையும் சந்தித்தேன் ..
பசுமைகளை மறந்து
கான்கீரீட் காடுகளில்
வாழ்கின்றனர்

Offline Jawa

Re: கான்கீரீட் காடுகள்..
« Reply #1 on: April 01, 2012, 08:08:26 AM »
சாலை ஓர மரங்கள்


ஓரறிவிலும் மனித நேயத்துடன்
ஒழுக்கமாய் பணி செய்கிறது
சாலை ஓர மரங்கள்
நிழல்கள் நெஞ்சில் கவிதைகள்

Offline Yousuf

Re: கான்கீரீட் காடுகள்..
« Reply #2 on: April 01, 2012, 01:35:20 PM »
உண்மைதான் ஜாவா மச்சி மனிதம் மறைந்து கொண்டு வருகிறது என்று சொல்வதை விட மரணித்து கொண்டு வருகிறது என்பது தான் உண்மை!

நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் சிந்தனை கவிகள்!