நான் நிம்மதியாக இருக்கிறேனா?
அப்பாடி தான் எல்லாரும் சொல்கிறார்கள்
நான் சந்தோஷமாக இருக்கிறேனா ?
ஆம் என்று தான் அனைவரும் சொல்கிறார்கள்
நான் பூக்களின் வாசமாக இருக்கிறேனா ?
அப்படித்தான் சொல்கிறார்கள் அனைவரும்
என் இதயம் மட்டும் சொல்கிறது
நீ அனைத்தையும் தொலைத்து விட்டு
அனைத்தும் உன்னிடம் இருப்பதாக
நினைத்து வாழ்ந்து கொண்டு இருகிறாய் என்று
நான் மனிதர்களை நம்புவதா
இல்லை என் இதயத்தை நம்புவதா
சொல்ல முடியாமல் வலிகளுடன்
யோசிக்கிறேன் விடை காண