Author Topic: ஆற்றல்  (Read 509 times)

Offline SweeTie

ஆற்றல்
« on: May 13, 2017, 08:32:53 PM »
வேதங்கள் போதிக்க
விண்ணவர் தேவையில்லை
மேதைகளும் தேவையில்லை
ஜாதகங்கள்  எடுத்துரைக்க

அறிவுரை வழங்கவும் 
ஆக்கங்கள் புரியவும் 
பிதாமகனும்  தேவையில்லை
ஆறறிவுதான்  இருந்தால் 

சிற்றெறும்பு போதும்   
சிறு துளைகள்  தோன்றிவிடும்
யானைகளும்  அடி சறுக்கும்
காலத்தின்  கைப்பிடியில் 

பகுப்பதும்  பிரிப்பதும்
கனப்பதும்  சினப்பதும்
தனிப்பதும்  திகைப்பதும்
தன்மானத்துக்கு  இல்லை என்றும்

இமயத்தின் உயரம் 
ஆழ்கடலின் ஆழம்
கற்பகதருவின்  வாசனை 
கண்டோருமில்லை   
வென்றோருமில்லை.
 

Offline SunRisE

Re: ஆற்றல்
« Reply #1 on: May 14, 2017, 12:38:28 AM »
தோழி

உங்கள் எழுத்து நடை
பூவுக்கு பூச்சூடும் அழகு

ஆற்றலுக்கு உயிர் கொடுக்கும் அற்புத
முயற்சி

பகுப்பதும்  பிரிப்பதும்
கனப்பதும்  சினப்பதும்
தனிப்பதும்  திகைப்பதும்
தன்மானத்துக்கு  இல்லை என்றும்

தன்மானத்துக்கு இதைவிட
உதாரணம் இருக்க முடியாது

அருமை தோழி


Offline JoKe GuY

Re: ஆற்றல்
« Reply #2 on: May 14, 2017, 11:05:21 PM »
அருமை தோழி உங்களின் கவிதை நடை.உங்களின் பல திறமைகளில் இந்த கவிதை எழுதுவது மிக அருமை.வளரட்டும் உங்களின் அழகு தமிழ் கவிதைகள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline Karthi

Re: ஆற்றல்
« Reply #3 on: May 15, 2017, 01:31:53 AM »
ஸ்வீட்டி  உங்க கவிதை வேற லெவல்.    ரொம்ப அர்த்தமான கவிதை.  ஓவியத்துக்கு  மட்டுமில்ல.   ஆற்றலுக்கும்  உயிர் கொடுத்திருக்கீங்க

Offline SweeTie

Re: ஆற்றல்
« Reply #4 on: May 18, 2017, 05:48:02 PM »
உங்கள்  பாராட்டுகளுக்கு  நன்றிகள்  தோழர்கள்     Sunrise    Jokeguy   கார்த்தி  .
sarithan.. விபூர்த்தி  ரித்திகா   நன்றிகள்.   
சிறிய அறிவுக்கு எட்டிய  சிறிய கவிதை  மட்டுமே. 

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: ஆற்றல்
« Reply #5 on: May 18, 2017, 06:09:07 PM »
Jo ss :D kavithai varigal ennikaila chinnatha irukalam but karuthu alavula rmba perusu :D unga arivu atha vida perusu :D menmelum ezhutha vazhthukkal ss :D

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ஆற்றல்
« Reply #6 on: May 18, 2017, 09:41:41 PM »
வணக்கம் தோழி

பிடித்த வரிகள்

கனப்பதும்  சினப்பதும்
தனிப்பதும்  திகைப்பதும்
தன்மானத்துக்கு  இல்லை என்றும்


வெப்ப சட்டியில்
வெடிக்கும் கடுகுபோல்
சொல் ஆள்கை

சினத்தோடு சீறிய
சிறுத்தை போல்
கவிதையின் வேகம்

வாழ்த்துக்கள் SweeTie
வாழ்க வளமுடன்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....