நீர் வளம் இறைவன் அருளும் கொடை
மாணவர் விடுதியில் ஓர் நாள்
உணவு வேளை அனைவரும்
உண்கையில்
புரையேறி விக்கியதில்
நிலை குலைந்தாள் ஒருத்தி
ஓடினாள் ஒரு மாணவி நீர் மெள்ள
நீர்க் குழாய்களிலும் நீர் வரவில்லை
தேக்கிய குவளைகளும் தீர்ந்து போயின
அடியில் மண்டியென ஏதோ கொஞ்சம்
அதையாகிலும் சிந்தாமல்
அவதானமாய்
எடுத்து வந்தாள் விரைவாய்
விக்கி தவித்தவள்
சாதியெனும் மூடநம்பிக்கை
வெறிகொண்டவள்
சீ போ உன்கையால் மெண்ட நீர்
நான் பருகவோவென
உதறி எறிந்தாள்
விக்கல் சிக்கலானது
வேறுசிலர் ஓடினர் நீர் மெள்ள
நீர் இல்லை பரிதாபம்
மலக்குழியில் தேங்கிய நீர்தான் உண்டு
பருகி உயிர் பிழைத்துக்கொள் - இல்லையேல்
சாதி வெறிகொண்டு செத்திடு
முடிவு உன்கையில்
மாணவர் விடுதியில் ஓர் நாள்
தக்க வேளையில் நீ இல்லை
நிலை கண்டாயா
பணம் நம்மிடம் இருக்கலாம்
பயன்படுத்தும் நீருக்கு நாம்
கட்டணமும் செலுத்தலாம் - ஆனால்
நீரில்லா காலமதில்
நம் பணம் கொண்டு
நீரை உண்டாக்கிட முடியாது
ஏனென்றால்
நீர் வளம் இறைவன் அருளும் கொடை
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே