தோழர் சரிதன்
நீங்கள் கூறிய விடையில் ஒரு முரண்பாடு தெரிகிறது....ஒரு நல்ல உள்ளம் கொண்ட கவிஞரின் கவிதை என்று சொல்லும்போது நிட்ச்சயமாக லோலிதாவினால் கவிதையில் எதுவித மாற்றமும் செய்ய முடியாது. அது நியாயத்துக்கு புறம்பானது. ஆனால் பொதுமன்றத்தில் வாசிப்பவர்கள் மனதில் நீங்கள் லோலிதா பிரசுரித்த அந்த நல்ல உள்ளம் கொண்டவரின் கவிதையை பிரதி பண்ணி உங்கள் பெயரில் வேறு தலைப்பில் பின்னால் ஒரு நாளில் பிரசுரித்த மாதிரித்தான் தெரிகிறது. இரண்டு வரிகளை நடுவில் மாற்றினால் அது உங்கள் கவிதை ஆகிவிடுமா அல்லது தலைப்பை மாற்றினால் உங்கள் கவிதை ஆகிவிடுமா?. மீதமாயுள்ள 55 வரிகள் அந்த நல்ல உள்ளம் கொண்ட கவிஞரின் வரிகள் அல்லவா

இது எந்த விதத்தில் நியாயமாகும்? அப்படியானால் உங்கள் கவிதை என்று பறைசாற்றும் பெண்ணின் மாறுதலும் ரணமும் என்ற கவிதையை நடுவில் இரண்டு வரிகளை மாற்றி வேறு தலைப்பில் யாரும் பிரசுரிக்க நிட்ச்சயமாக உரிமை உண்டு என்றுதானே அர்த்தம். இதையும் நீங்கள் புரிந்துகொண்டுதான் ஆகவேண்டும்.
படங்களில் பெண் பாடும் வரிகளை ஆண் பாடுவதும் ஆணின் வரிகளை பெண் பாடுவதும் என்பது வேறு. அது சினிமா உலகம். ஒரு பெண் பிரசுரிக்கும் கவிதையை ஒரு ஆண் பிரசுரிப்பதும் அல்லது ஆணின் கவிதையை பெண் பிரசுரிப்பதும் பொதுமன்றங்களில் நடை பெறுவதுமில்லை நாகரிகமும் இல்லை. அப்படியானால் அது கவிதையாக இருக்கவும் முடியாது. கவிதை என்பது தங்கள் சுய அறிவில் உருவாகும் ஒரு எண்ணம். சிறந்த கவிதைகளை எழுதும் உங்களுக்கு எப்படி கவிதைக்குரிய வரைவிலக்கணம் தெரியாமல் போனது என்று எண்ணும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.
கோபத்தில் வார்த்தைகளை கொட்டாதீர்கள். கொட்டிய வார்த்தைகளை மீண்டும் அள்ள முடியாது. இவற்றையெல்லாம் ஸ்வீட்டி ப ftc team உறுப்பினர் என்ற ரீதியில் கேட்கவில்லை. கவிதைகளை விரும்பி படிக்கும் ஒரு ரசிகையாகத்தான் எனக்கு ஏற்பட்ட குழப்பத்தை தீர்த்துக்கொண்டேன். பாவம் லொலிதா அந்த நல்ல உள்ளம் கொண்டவரின் அருவருப்பான கவிதையை சிறந்த கவிதை என பிரசுரித்துவிட்டார் இதே குழப்பம் மற்ற வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா?
இப்பொது அவர்களுக்கும் புரிந்திருக்கும்.
நன்றி வணக்கம்.