Author Topic: சொல்லப்போவதில்லை எதுவும்  (Read 408 times)

Offline thamilan

உன்னிடம் சொல்லப்போவதில்லை
எதுவும்
நீயில்லாத தனிமையில்
நட்சத்திரங்கள் மறையும் போது
விண்ணுக்குள் நானும் புதைவதை.........
சுவாசிக்கும் பொழுதுகளில்
காற்றே பாரமாவதை........
உணர்வுகள் உள்ளுக்குள் உடைந்து
துகள்களாகி ரணமாவதை.........
இதயத்துக்குள் ஒளிந்திருக்கும் உயிர்
உடைந்த எலும்பாய்
உள்ளுக்குள் உருத்திக் கொண்டிருப்பதை........
காமத்தின் பிழம்பிடையே
உன் பிம்பம் காதலுடன் சிரிப்பதை.......
உன்னிடம் சொல்லப்போவதில்லை
எதுவும்!!!