Author Topic: இதயம்  (Read 912 times)

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
இதயம்
« on: October 31, 2016, 10:41:24 PM »


என் இதயத் துடிப்பின்  வரிகளை சமர்ப்பிக்கிறேன்

உன்னை  கண்டெடுதேன் இணையத்தில்
எனக்காக யோசிக்கும் ஓர்  ஜீவன்
அவரின் பேச்சும் செயல்களும்
என்னை  வெகுவாக கவர்ந்தது

பிடித்திருந்தது என்  மனதுக்கு
அவருக்கும்  என்னைப்போல்
உணர்வு இருக்குமா இருக்காதா
தெரியாமல் துடிதேன் வாடினேன் 

ஏன் இந்த குழப்பம் மனதில் ,
சில நாள் அவனை பார்த்தும்
பேசாமல் போனதும் உண்டு..
என்னை போல் அவரும்
நடந்து கொண்டதும் உண்டு..

இருவருக்குள்ளும் ஏதோ ஒரு உணர்வு
பதட்டம்  எங்கள் கண்களில்
இதழ்கள் சொல்ல வந்தும்
சொல்லாமல் தடுத்தது
எங்கள்  மனமும் மதியும்

இரவு நேரத்தில்  தொலைபேசியில் அழைத்தார்
உன்னிடம் பேச வேண்டும்  ..
நானும் பேச வேண்டும் என்றேன்..
எனக்கு தூக்கம் போயியுற்று..

மறுநாள் அவருக்காக  காத்திருந்தேன் ..
அந்த காத்திருக்கும் நேரத்தில்
வந்து வந்து சென்றார்  என் நினைவில்

இணையத்தில் பேசினோம் இப்போதுதான்
நிஜத்தில் பார்க்க போகிறோம்...
என்ற ஆனந்தம் என்னுள்..
எப்படி இருப்பாரோ என்ற எண்ணம் என்னுள்..

மனம் பட படக்க விழிகள் தேடியது ..
வந்தார்   என் முன்னாள் ..
என் சிறு இதயம் துடித்தது
என் விழிகள் அவர் விழிகளை
பார்த்து வெட்க்கி நின்றது..

அவர்  ஒரு சொல் சொல்லாமல் நின்றார்
நிமிடங்கள் கடந்தன அவர் விழிகளை பார்த்தேன்
அவர்  என்னையே பார்த்தது அப்போது உணர்ந்தென்
அவரை பார்த்து புன்னகைதேன் ..

என்னை பார்த்து  காதலிக்கிறேன்  என்றார்
என் சிறு இதயம் இன்னும் வேகமாய் துடிக்க
என் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது..
ஆனந்தத்தில் மிதந்தேன்..
 
அவர் கரங்களில் ஓர் அழகிய இதயம்
என் இதயம் உனக்காக ஏங்கியது
கிடைக்குமா உன் இதயம்
என் இதயத்தில் சேர்க்க என்றார்

பல  நாள் ஏங்கினேன் உனக்காக
எத்தனை நாள் இந்த
சொல்லுக்காக காத்திருந்தேன் தெரியுமா
உனக்காகவே காத்திருக்கும் என் இதயம்

பின்குறிப்பு : பட்திட்கேற்ப எழுதியுள்ளேன் .இது ஒரு இணையதள  காதல்

« Last Edit: November 01, 2016, 01:53:30 PM by BlazinG BeautY »

Offline இணையத்தமிழன்

அருமையான கவிதை அக்கா மேலும் உங்கள் கவிப்பயணம் தொடர என் வாழ்த்துக்கள் அக்கா

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline GuruTN

Re: இதயம்
« Reply #2 on: November 02, 2016, 06:44:43 AM »
ஹா ஹா.. என் முதல் கவிதையை நான் என் குடும்பத்தினருடன் பகிரும்போது.. நானும் பயன் படுத்தினேன் பின் குறிப்பு.. "கவிதையாக மட்டும் பார்க்கவும்" என்று.. உண்மையில் மனதில் வந்த உணர்வு போலவே இருந்தது உங்கள் கவிதை... சிந்தனையில் தோன்றியதாக தோன்றவில்லை  ஒரு நிமிடம்.. அருமையான கவிதை தோழி.. அன்பு வாழ்த்துக்கள்... அசத்தல் தொடரட்டும்...