அம்மாவின் கைகள்
அன்பைக் காட்டும்
அப்பாவின் கைகள்
வாழ்க்கையைக் காட்டும்
நண்பனின் கைகள்
பிகரைக் காட்டும்
பிகரின் கைகள்
டாட்டா காட்டும்
ஆடிக்குப் பின்னால்
ஆவணி
தாடிக்குப் பின்னால்
தாவணி
காற்றுக்கு என்மேல் கோபம்
காரணம் கேட்டேன்
சுவாசிப்பது என்னை
காதலிப்பது மட்டும் அவளையா
எனக் கேட்டது
காதலின் கண் அசைவுக்கு
ஆயிரம் அர்த்தங்ககள்
நண்பனின் கண் அசைவுக்கு
ஒரே ஒரு அர்த்தம் தான்
"மச்சான் பிகர் வருது சட்டுனு
திரும்பிப் பார்"
இறைவனிடம் புன்னகையாக் கொடு
என்று கேட்டேன்
கண்ணீரைக் கொடுத்தான்
இன்பத்தைக் கொடு என்று கேட்டேன்
துன்பத்தைக் கொடுத்தான்
மரணத்தைக் கேட்டேன்
உன்னைக் கொடுத்தான்