Author Topic: வந்துவிடு என் பக்தனாக!!  (Read 545 times)

Offline SweeTie

காலை வருடும்
கொலுசுக்கு  உன்
காலடி ஓசை கேட்டதுவோ
காளை  நீ வரும் வழியை
கண் மலர் நோக்கியதோ
உன் இதய துடிப்பின் எதிரொலி
என் மனசுக்குள் ஊஞ்சல் ஆடியதோ
காதலின் பொருள் சொல்வாயோ
காலமெல்லாம்  என்னைக்
காக்க வைப்பாயோ.
 
உன் சிரிப்பின் சங்கீதம்
என் காலையின் பூபாளம்
காதோடு கிசு கிசுக்கும்
தேன்  துளிகள்
மாலையின் என்னைத் தாலாட்டும்
ஹம்சத்வனி
சிறைப்  பிடித்த  என் விழிகளைத்
திருப்பிக் கொடுத்துவிடு
இல்லையென்றால் வந்துவிடு
காலமெல்லாம்   என் அருகில்
பக்தனாக....
« Last Edit: June 25, 2016, 07:01:02 PM by SweeTie »

Offline thamilan

Re: வந்துவிடு என் பக்தனாக!!
« Reply #1 on: June 25, 2016, 10:58:00 AM »
SWEETIE என்னயா  கூப்பிடுறீங்க ?

Offline JoKe GuY

Re: வந்துவிடு என் பக்தனாக!!
« Reply #2 on: June 25, 2016, 11:07:38 PM »
மிக அருமை கவிதை குயிலே...

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline EmiNeM

Re: வந்துவிடு என் பக்தனாக!!
« Reply #3 on: June 26, 2016, 08:22:52 PM »
அருமை ஸ்வீட்டியே

Offline SweeTie

Re: வந்துவிடு என் பக்தனாக!!
« Reply #4 on: June 29, 2016, 06:56:19 AM »
தமிழன் , Joke guy   எமினென் ...... வாழ்த்துக்களுக்கு   மிக மிக நன்றிகள்.

Offline JerrY

Re: வந்துவிடு என் பக்தனாக!!
« Reply #5 on: July 12, 2016, 08:36:00 AM »
அருமை சகோ தலைப்பு

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: வந்துவிடு என் பக்தனாக!!
« Reply #6 on: July 12, 2016, 09:33:24 AM »


Offline SweeTie

Re: வந்துவிடு என் பக்தனாக!!
« Reply #7 on: July 12, 2016, 05:59:48 PM »
நன்றிகள்  சகோதரா ஜெர்ரி    ரித்திகா