« Reply #24 on: February 22, 2016, 05:16:08 PM »

அடிக்கடி செய்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும். நூல்கோல்சப்பாத்தி தேவையானவை: நன்கு கழுவி மெல்லியதாகநறுக்கிய நூல்கோல் – ஒரு கப், கோதுமை மாவு – அரைகிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒருசிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1,கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு -தேவையான அளவு. செய்முறை: நூல்கோலை வேகவைக்கவும். கோதுமை மாவில் உப்பு, கொஞ்சம்எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப்பிசைந்து, ஈரத் துணியால் 15 நிமிடம் மூடிவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுகடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து,நறுக்கிய வெங்காயம் சேர்த்துவதக்கவும். வேக வைத்த நூல்கோல் சேர்த்து மேலும்வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் சுருள வதக்கவும்.பிசைந்த மாவில்கொஞ்சம் எடுத்து கிண்ணம் போல் செய்து, அதற்குள் வதக்கியநூல்கோலைகொஞ்சம் வைத்து சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டுஎண்ணெய்விடாமல் சுட்டு எடுக்கவும். குறிப்பு: நூல்கோல் காயை அதிகம் விரும்பிச்சாப்பிடாதவர்கள், இதேபோல்செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில்நூல்கோலுக்கு
« Last Edit: February 22, 2016, 05:18:03 PM by MysteRy »

Logged