Author Topic: ~ முதலுதவி யாருக்கு? எப்போது? எப்படி? ஃபர்ஸ்ட் எய்டு கைடு ~  (Read 2822 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சாலை விபத்து

சாலை விபத்துகளில் தமிழகம் எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. தினமும் சாலை விபத்துகளில் பலர் உயிர் இழக்கிறார்கள்.

சாலை விபத்தில் அடிபட்டவர்களை அப்படியே ஆட்டோவில் தூக்கிப்போட்டு, மருத்துவமனைக்குச் செல்வதோ, பெட்ஷீட்டில் போட்டுத் தூக்குவதோ தவறு.

கழுத்து மற்றும் தண்டுவடப் பகுதியில் அடிபட்டிருக்கும்போது, தவறானமுறையில் தூக்குவதால், எலும்புகள் முறிந்துவிடலாம். சிலருக்குக் தண்டுவடத்தில் அழுத்தம் ஏற்பட்டு கை,கால்கள் போன்றவை, வாழ்நாள் முழுமைக்கும் நிரந்தரமாகச் செயலிழந்துவிட வாய்ப்பு உள்ளது.



விபத்தில் முதுகுத்தண்டு அடிபட்டு இருந்தால், அவரை மூன்று நான்கு பேர் சேர்ந்து, தட்டையான பலகையில் வைத்துத் தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதே சிறந்தது.

சுயநினைவு இல்லை, மூச்சுவிட சிரமப்படுகிறார்கள் எனில், கழுத்தை மேல் நோக்கித் திருப்பக் கூடாது. நாக்கு உள் இழுத்துக்கொள்வதைத் தடுக்க, நாக்கைப் பிடித்து, மெலிதாகத் தூக்கிவிடவும்.

கழுத்தைச் சுற்றிப்போடும் பேண்ட் இருந்தால், உடனடியாகப் போட வேண்டும்.

ரத்தம் வெளியேறுவதைத் தடுப்பது அவசியம். பஞ்சு அல்லது சுத்தமான துணியைவைத்து, உடலில் எங்கிருந்து ரத்தம் வழிகிறதோ மிகச்சரியாக அந்த இடத்தில், அழுத்திப் பிடிக்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முதுகெலும்பில் அடிபடுதல் (Spinal injury)

முதுகெலும்பில் அடிபட்டிருப்பவரால், எழுந்து அமரக்கூட முடியாது; வலி மோசமாக இருக்கும். வீக்கம் தெரியாது என்றாலும் எழுந்து அமரவே சிரமப்படுகிறார்கள் எனில், முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.



முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருப்பவர்களை, சிரமப்படுத்தி அமரச்செய்தோ, அப்படியே கைகளாலோ, தோளில் போட்டு தூக்கிக்கொண்டோ வரக் கூடாது. இதனால், பாதிப்பு மேலும் மோசமாகி, தண்டுவடம் நிரந்தரமாகச் செயல் இழந்துவிடக்கூடும்.

முதுகெலும்பில் அடிபட்டவரை சமதளமான பலகை அல்லது ஸ்ட்ரெச்சர் ஒன்றில் மல்லாக்கப் படுக்கவைத்துதான் கொண்டுவர வேண்டும். முதுகெலும்பு பாதிக்கப்பட்டவருக்கு, இரண்டு மூன்று பேராகத்தான் உதவி செய்ய முடியும். கொஞ்சம் பருமனானவர்களுக்கு நான்கு பேர் தேவைப்படும்.



அடிபட்டவரை நேராகப் படுக்கவைக்க வேண்டும். பிறகு, அடிபட்டவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டும், கால் பகுதியை இன்னொருவர் பிடித்துக்கொண்டும் அவரை ஒருபுறமாகச் சாய்க்க வேண்டும்.

மற்றொருவர் பலகையை அடிபட்டவருக்கு கீழ்புறம் செருகி, அதில் அடிபட்டவரைச் சாய்த்து, பலகையின் மீது படுக்கும்படி செய்ய வேண்டும்.

இப்போது, தலைப்பகுதியை ஒருவர் கால்பகுதியை ஒருவர் என பலகையோடு தூக்கியபடி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கழுத்து முறிவு (Cervical injury)

விபத்துகளில், கழுத்துமுறிவு ஏற்படுவது உயிருக்கே ஆபத்தாகவும் முடியக்கூடும். பெரிய விபத்துகளில் சிக்கியவர்களுக்கு, கழுத்துமுறிவு ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.



கழுத்து முறிவு ஏற்பட்டவர்கள் கழுத்தைத் திருப்பவோ தூக்கவோ கூடாது. அவர்களை மல்லாக்கப் படுக்கவைத்து, தலையை நேராக வைக்க வேண்டும். நமது கை விரல்களை அடிபட்டிருப்பவரின் கழுத்தின் அருகே வைத்து, விரித்துப் பார்த்து கழுத்தின் நீளத்தைத் தோராயமாக அளந்துகொள்ள வேண்டும்.

பிறகு, இரண்டு மூன்று பக்க செய்தித்தாள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, கழுத்து அகலத்துக்கு மடிக்க வேண்டும்.



மடிக்கப்பட்ட செய்தித்தாளை ஓர் அகலமான துணி அல்லது போர்வையில் வைத்து, போர்வையை அதே அகலத்துக்கு மடித்துக்கொள்ள வேண்டும். காகிதம் உள்ளே வைத்துச் சுற்றப்பட்ட இந்தப் போர்வை நெக் பேண்ட் போல செயல்படும்.

கழுத்தைத் தூக்காமல், மடிக்கப்பட்ட போர்வையைக் கழுத்தின் அடிபாகத்தில் செருகி, போர்வையால் கழுத்தை நெக்பேண்ட் போல சுற்ற வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும் வரை இந்த நெக்பேண்டை அவிழ்க்கக் கூடாது.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மூக்கில் ரத்தம் வழிதல்

மூக்கில் அடிபடுவதாலோ, உயர் ரத்த அழுத்தத்தாலோ  சிலருக்கு மூக்கில் ரத்தம் வழியும்.

மூக்கில் அடிபட்டால்...

காயம் ஏற்பட்டு மூக்கு உடைந்தால், ஐஸ் பேக் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.



உயர் ரத்த அழுத்தத்தால் மூக்கில் ரத்தம் வரும்போது..

அவர்களை நாற்காலியில் உட்காரவைத்து, தலையை முன்புறமாக நீட்டியவாறு வைத்து,  மூக்கை இரு விரல்களால் அழுத்திப்பிடித்துக்கொண்டு, வாயால் மூச்சு விட வேண்டும். ரத்தம் நிற்கும் வரை விரல்களை எடுக்கக் கூடாது.

உயர் ரத்த அழுத்தத்தால் சிலருக்கு பின் மூக்கு வழியாக ரத்தம் உட்புறமாகக் கசிந்து, வாய்க்கு வரும்.  இதனால், வாந்தி வரவோ, புரை ஏறவோ வாய்ப்புகள் உள்ளன. இவர்கள், ரத்தத்தை உடனடியாகத் துப்பிவிட்டு மருத்துவமனைக்குச் செல்வதே சிறந்தது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரத்தப்பெருக்கு

விபத்துகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் நிற்காமல் கொட்டும்போது, முதலில் காயம் எந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டறிய வேண்டும். அந்தப் பகுதி ஆடையால் மூடி இருந்தால், அதனை முதலில் அகற்ற வேண்டும்.



சுத்தமான துணியை ரத்தம் பெருகும் இடத்தின் மேல் நேரடியாகவைத்து சில நிமிடங்களுக்கு அழுத்திப் பிடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், காயம்பட்ட இடத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் ரத்த உறைதலை ஏற்படுத்தி, ரத்தப்பெருக்கைக் கட்டுப்படுத்தும். சிலருக்கு, காயத்தின் தன்மையைப் பொறுத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வரை ரத்தப்பெருக்கு நிற்காது.

சிலர், சில விநாடிகள் மட்டும் அழுத்திப்பிடித்துவிட்டு ரத்தம் வருகிறதா என எடுத்துப் பார்ப்பார்கள்; இது தவறு. தொடர்ச்சியாக அழுத்திப் பிடித்தவாறே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முன் கை உடைதல்

முன் கை உடைவு ஏற்பட்டால், அதன் அறிகுறியாக கை பெரிதாக வீங்கும், தாங்க முடியாத வலியால் துடிப்பார்கள். கையை அசைக்கக்கூட முடியாது. கைவீங்கி இருந்தால், அது உடைவாக இருக்கலாம். எனவே, கையை உதறவோ, அமுக்கிப் பார்க்கவோ கூடாது.



உடைந்த கையின் அடிப்பாகத்தைக் கட்டுப்போடும் வரை, மற்றொரு கையால் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

உடைந்த கையின் அடிப்பாகத்தில் மர ஸ்கேல் அல்லது பட்டையான கம்பை வைக்க வேண்டும். பிறகு, கைக்குட்டை அல்லது துணியால் இரண்டு பக்கமும் கட்ட வேண்டும்.

பிறகு, சட்டையின் நெஞ்சுப்பகுதியில் உள்ள பட்டனைக் கழற்றி, கட்டுப்போட்ட கையைச் சட்டைக்குள் வைத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். தொட்டில்கட்டு போடுவதற்குப் பதிலாக இந்த முறை உதவும்.



இன்னொரு முறையிலும் கட்டுப்போடலாம். அதாவது, உடைந்த கையின் கீழ்புறம் அடிஸ்கேல் அல்லது பட்டையான குச்சியை வைத்து இருபுறமும் கட்டிய பிறகு, சட்டையின் கீழ்ப்பகுதி பட்டன்களைக் கழற்ற வேண்டும். பிறகு, கட்டுப்போட்ட கையை நெஞ்சின் மீது வைத்து, சட்டையின் பட்டன் துளையுள்ள நுனியைத் தூக்கி, காலர் பட்டனில் பொருத்த வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முழங்கை உடைதல்

விபத்தினால் கை மூட்டுகள் விலகுவதையும், மூட்டுகளின் லிகமென்ட் கிழிவதையும், ‘முழங்கை உடைதல்’ என்கிறார்கள்.



முழங்கை உடைந்திருப்பதன் அறிகுறி, அந்தப் பகுதி வேகமாக வீங்குவதுதான். மேலும், கையைத் தூக்க முடியாதபடிக்கு வலி மிக மோசமாக இருக்கும்.

முழங்கை வீங்கி இருந்தால், கையை உதறுவது போன்றவற்றைச் செய்யக் கூடாது.
மறுகையால், முழங்கையைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.

கையை மடித்து அளவுகோல் அல்லது பட்டையான குச்சியின் ஒரு நுனியை புஜத்திலும் மற்றொரு நுனியை மணிக்கட்டிலும் வைத்து, இரு நுனிகளையும் கைக்குட்டை அல்லது துணியால் கட்ட வேண்டும்.

பெல்ட்டைக் கழுத்தில் மாட்டி, கட்டப்பட்ட மர ஸ்கேல் அல்லது குச்சியை பெல்ட்டுடன் சேர்த்துக் கட்ட வேண்டும். இதைத் தொட்டில் கட்டு என்பார்கள். தொட்டில் கட்டு கட்டிய பின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கால் முறிவு

கால் முறிவு ஏற்பட்டவர்களுக்கு, அந்தப் பகுதி சட்டென வீங்கிவிடும். கால்முறிவு ஏற்பட்டிருப்பவர்களை நாற்காலியில் உட்காரவைக்கக் கூடாது. அவர்களை தரையில் படுக்கவைத்தே முதலுதவிகள் செய்ய வேண்டும்.



அடிபட்டவரை மல்லாக்கப் படுக்கவைக்க வேண்டும்.

நீளமான தட்டையான பலகை ஒன்றை, அடிபட்ட காலோடு சேர்த்துவைத்து, கைக்குட்டை அல்லது துணியால் மூன்று இடங்களில் கட்ட வேண்டும்.

பலகை கிடைக்கவில்லை என்றால், அடிபட்ட காலை மற்றொரு காலோடு சேர்த்தும் கட்டலாம்.

கட்டுப்போட்ட பின்பு, அடிபட்டவரை படுக்க வைத்த நிலையிலேயே மருத்துவமனைக்குக் கொண்டு வர வேண்டும். கைகளால் தூக்கிக்கொண்டு வரக் கூடாது. ஸ்ட்ரெச்சர் அல்லது மரப்பலகையில் படுக்கவைத்துக் கொண்டுவருவது நல்லது.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கணுக்கால் மூட்டு முறிவு

கணுக்கால் மூட்டு முறிவு ஏற்பட்டவர்களைப் படுக்க வைக்க வேண்டும். கணுக்காலுக்கு அடியில் தலையணை ஒன்றை வைக்க வேண்டும். பிறகு, அந்தத் தலையணையைக் கணுக்காலோடு சேர்த்துக் கட்ட வேண்டும். இவர்களை நடக்கவைக்கக் கூடாது. ஏதேனும் ஒரு வண்டியில் அமரவைத்தோ, படுக்கவைத்தோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லலாம். அடிபட்ட பாதத்தை ஊன்றாமல் பார்த்துக்கொள்வது நல்லது.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உறுப்புத் துண்டாகுதல்

வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் பயன்படுத்தும்போது, கவனக்குறைவாக சில பெண்கள் விரல்களைத் துண்டாக்கிக்கொள்வது உண்டு. அதேபோல தொழிற்சாலை வேலையின்போதும் சாலை விபத்திலும் கை, கால்கள் துண்டாகிவிடுகின்றன.



விபத்து ஏற்பட்டு துண்டான எந்த உறுப்பையும் வேண்டாம் எனத் தூக்கி எறிந்துவிட வேண்டாம். விபத்து ஏற்பட்ட 6-8 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குத் துண்டான உறுப்புடன் வந்தால், உயர் சிகிச்சை (இம்பிளான்ட்) மூலம் மீண்டும் ஒட்டவைக்க முடியும்.

துண்டான  உறுப்பை தண்ணீர் புகாத பாலித்தீன் கவரில் போட்டு, ஐஸ் பெட்டிக்குள் அந்த பாலித்தீன் பையைவைத்து உடனடியாக மருத்துவமனைக்குக்  கொண்டுசெல்லவும். துண்டான உறுப்பை நேரடியாக ஐஸ் பெட்டியில் போடக் கூடாது.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஒவ்வாமை - அனஃபிளாக்சிஸ் (Anaphylaxis)

சிலருக்கு, சிறு வயதில் இருந்தே முட்டை, பால், பட்டாணி  ஆகியவை அலர்ஜியாக இருக்கும். இவர்கள் அந்த பொருளைத் தொட்டாலே மூச்சுக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு, 10-15 நிமிடங்களில் உயிர் இழப்பு நிகழலாம். இந்தப் பிரச்னைக்கு ‘அனஃபிளாக்சிஸ்’ என்று பெயர். இது ஒருவிதமான அலர்ஜி நோய். இவர்களுக்கு உடனடியாக அட்ரிலின் ஊசி போட வேண்டும்.



இந்த அலர்ஜியை சிறுவயதில் கண்டுபிடித்துவிட்டால், எப்போதும் உடன் இந்த ஊசியை வைத்துக்கொள்ள வேண்டும்.

தனக்கே தெரியாமல் குறிப்பிட்ட பொருளைத் தொட்டால்கூட, இந்தப் பிரச்னை ஏற்படும். சமயங்களில் இந்த ஊசி உயிர் காக்கும்.

ஆயிரத்தில் இருவருக்கு இந்தப் பிரச்னை காணப்படுகிறது. பெரும்பாலும், இவர்களுக்கு நண்டு முதலான கடல் வாழ் உணவுகள், பட்டாணி போன்றவற்றால் இந்த அலர்ஜி ஏற்படுகிறது.

இந்த அலர்ஜி இருப்பவர்கள்  வாழ்நாள் முழுவதும்  அலர்ஜி ஏற்படுத்தும் பொருளைத் தொடவே கூடாது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கண்களில் கெமிக்கல்கள் படுதல்

பணிபுரியும் இடங்களில் ஆசிட்கள், பெயின்ட், சுண்ணாம்பு, ஆல்கலைன் போன்ற வேதிப்பொருட்கள் கண்களில் பட்டுவிட்டால், கண்களைக் கசக்குவதோ, விரலை கண்களில் வைத்து தேய்ப்பதோ கூடாது.



குழாய் நீர் கண்ணில் படும்படி சிறிது நேரம் வைத்திருக்கலாம். தண்ணீரால் வேதிப்பொருளின் வீரியம் குறையும்.

குழாய் நீரில் கண்களை வைக்கும் போது எந்த கண் பாதிக்கப்பட்டதோ, அது கீழ்புறம் இருக்குமாறு தலையை நீரில் காட்டுவது நல்லது. இல்லையெனில், மற்றொரு கண்ணும் பாதிக்கப்படக்கூடும்.

கண்கள் நன்கு சிவந்து, புண்ணாகிவிட்டிருந்தாலோ எரிச்சல் அதிகமாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சுயவைத்தியம் ஏதும் செய்யவே கூடாது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மயக்கம்

பசி, சோர்வு, ரத்த தானம் செய்த பின் ஏற்படும் தளர்வு ஆகியவற்றால் சிலர், திடீரென மயங்கி விழுவார்கள். இது சாதாரண மயக்கமா, திடீர் இதயத்துடிப்பு முடக்கமா என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.



மயக்கம் அடைந்தவர்களை காற்றோட்டமான சூழலில் மல்லாக்க படுக்கவைக்க வேண்டும்.
அவர்களின் கால்களைச் சற்று நேரம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

உயரமான இரண்டு தலையணைகளின் மேல் அவர்களின் கால்களை வைக்கலாம்.

இவ்வாறு செய்யும்போது, போதுமான ரத்த ஓட்டம் அவர்களின் மூளைக்குச் சென்று ஒருசில நிமிடங்களில் அவர்களுக்கு இயல்பாகவே நினைவு திரும்பிவிடும்.

தலையணை இல்லாவிடில் நாற்காலியிலும் கால்களை வைக்கலாம். மயக்கத்தில் இருக்கும்போது வாயில் ஏதும் புகட்ட முயலக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பதாலும் எந்தப் பலனும் இல்லை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உயிர் பிழைக்க உதவுவோம்!

சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்தால், போலீஸ், மருத்துவமனை எனப் பல தேவை இல்லாத இடங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். எனவே, சாலை விபத்தில் அடிபட்டால், அதிகபட்சம் 108-க்கு அழைத்தால் மட்டும் போதுமானது’ எனப் பலர் நினைப்பதால்தான் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் சிலர் மரணிக்க நேரிடுகிறது.



இது குறித்து மக்களிடம் உள்ள பயத்தைப் போக்க ‘குட் சமாரிட்டன் சட்டம்’ (Good Samaritan law) ஒன்றை இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. விரைவில், இந்தச் சட்டம் நாடாளுமன்ற ஒப்புதல் பெற உள்ளது.

மேலும், போலீஸ், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவருக்கும் சில அறிவுரைகள் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

‘காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டு வந்தால்தான் சிகிச்சை கொடுக்க முடியும்’ என, எந்த மருத்துவமனையும் சொல்வது இல்லை. அவை கட்டுக்கதைகளே!

ஒரு நபர் இறக்கும் தருவாயில் இருந்தால், சட்டப்படி அவருக்கு முதலில் சிகிச்சைதான் அளிக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் எல்லாம் தேவை இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரசிகிச்சைப் பிரிவில்  ஏ.ஆர் காப்பி (Accident Register Copy) இருக்கிறது. நோயாளிக்கு முதலில் சிகிச்சை கொடுத்த பின்னர் மருத்துவமனையில் இருந்தே, போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

எனவே, பாதிக்கப்பட்டவருக்கு உதவினால் நமக்கு போலீஸ் கேஸ் என அலைச்சல், தேவை இல்லாத தொந்தரவுகள் வருமோ என மக்கள் அச்சப்படத் தேவை இல்லை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குட் சமாரிட்டன் சட்டத்தின் அம்சங்கள்



பாதிக்கப்பட்டவரை யார் வேண்டுமானாலும் எந்த மருத்துவமனையிலும் கொண்டுசேர்க்கலாம்.

மருத்துவமனைக்குக் கொண்டுசேர்ப்பவர்கள், தங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் மருத்துவ மனையில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனை சார்பில் யாரும் உதவுபவரின் தகவல்களைக் கேட்கக் கூடாது.

தகவல்களைச் சொன்னால்தான் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள முடியும் என சம்பந்தப்பட்ட நபரிடம் வலியுறுத்த யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.

மருத்துவமனையில் உயிர் காக்க என்ன சிகிச்சை செய்ய வேண்டுமோ, அதை அவசியம்  உடனடியாகச் செய்யதே ஆக வேண்டும்.

உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை பணம் எதிர்பார்க்கக் கூடாது. உயிர்காக்கும் சிகிச்சை தருவது,  மருத்துவமனைகளின் கடமை.