Author Topic: ~ முதலுதவி யாருக்கு? எப்போது? எப்படி? ஃபர்ஸ்ட் எய்டு கைடு ~  (Read 2810 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation)



சி.பி.ஆர் என்பது இதயத்துக்குச் செயற்கையாக உயிரூட்டல். பாதிக்கப்பட்டவரை ஒரு சமதளத்தில் உடனடியாகப் படுக்கவைக்க வேண்டும்.

அவரைச் சுற்றிக் கூட்டம்போட வேண்டாம். காற்றோட்டம் இருக்கட்டும். முதலில் அவரது சட்டை பட்டன்களை அவிழ்க்கவும்.

நெஞ்சின் மையப்பகுதியின் மீது, வலது அல்லது இடது உள்ளங்கையின் தடிமனான அடிப்பகுதியை வைக்க வேண்டும். இன்னொரு கையை அந்தக் கையின் மேல் வைத்து, இருகை விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக்கொள்ள வேண்டும்.



இப்போது, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் சுமார் ஐந்து செ.மீ ஆழத்துக்கு வேகமாக அழுத்தம் கொடுத்து, எடுக்க வேண்டும்.

ஒரு நிமிடத்துக்கு 100 முதல் 120 முறை  இப்படி அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் உணர்வு வரும் வரையிலோ அல்லது அவசரஉதவிப் பிரிவில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர் வரும் வரையிலோ உங்களுக்குக் கடும் சோர்வு ஏற்படும் வரையிலோ, இந்த முதலுதவியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்குச் பக்கவாட்டில் அமர்ந்துதான் இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளுக்கான சி.பி.ஆர்



குழந்தைகளுக்கு, நெஞ்சுப்பகுதியில் கையின் அடிப்பகுதியை வைத்து அழுத்தம் கொடுக்கக் கூடாது.

குழந்தை பேச்சுமூச்சின்றி உணர்வில்லாமல் இருந்தால், குழந்தையின் நெஞ்சுப்பகுதியின் இரண்டு புறமும் கைவைத்துத் தூக்கி, நெஞ்சின் மையப்பகுதியில் இரண்டு கட்டை விரல்களாலும், 2-3 செ.மீ ஆழத்துக்கு மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஒரு நிமிடத்துக்கு 30 தடவை அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.  30 முறை நெஞ்சுப்பகுதியில் அழுத்தம் தந்தபின், இரண்டு முறை வாய் மற்றும் மூக்கின் மேல் உங்கள் வாய்வைத்து ஊதி, செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாரடைப்பும் திடீர் இதயத்துடிப்பு முடக்கமும்

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, ஆஸ்பிரின் மாத்திரை நான்கைக் கொடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

மாரடைப்புக்காரர்கள் நெஞ்சு வலிக்கிறது எனக் கூறியபடியே பேச்சு மூச்சற்று சரிந்தால், அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக மாறி இருக்கக்கூடும்.  எனவே, அவர்களுக்கு சி.பி.ஆர் முதலுதவியைத் தாமதம் இன்றிச் செய்ய வேண்டும்.

தூக்குப்போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், நீரில் மூழ்கியவர்கள், விபத்தில் மோசமாகக் காயம்பட்டவர்கள் என அனைவருக்குமே உயிர் பிரிவதின் கடைசி நிலை திடீர் இதயத்துடிப்பு முடக்கம்தான். எனவே, இந்த முதலுதவியைத் தேவையான சமயங்களில், சமயோஜிதமாக உணர்ந்து செய்ய வேண்டும்.

பெரியவர்களுக்கு வாய் வழியே சுவாசம் தர வேண்டிய அவசியம் இல்லை. சி.பி.ஆர் மட்டுமே போதுமானது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாரடைப்பு



மாரடைப்பு என்பது இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதுதான்.

மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சுப் பகுதியில் ஒருவிதமான பாரம் இருக்கும்.

கழுத்து, இடது கைப்பகுதிகளில் வலி ஏற்படும். வியர்த்துக்கொட்டும், வேகமாக மூச்சுவாங்கும். (சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் தெரியாமல் போகலாம்.)

மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டால், ஆஸ்பிரின் 75 மி.கி அளவு கொண்ட மாத்திரைகள் நான்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆஸ்பிரினில் கடித்துச் சாப்பிடும் வகையாக,  டிஸ்பிரின் என்ற மாத்திரையும் இருக்கிறது.

மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், ஆஸ்பிரின்/டிஸ்பிரின், குளோப்பிடோகிரெல் ஆகிய இரண்டும் தலா 300 மி.கி அளவுக்கு சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்ல வேண்டும்.

ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் அடைப்பு மேலும் அதிகரிப்பதை மட்டுமே தடுக்கும்.



அடைப்பை சரிசெய்ய மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகள் தெரிந்தால், வேகமாக நடக்கவோ, படிகளில் ஏறவோ கூடாது. சோடா குடிப்பதும் தவறு. இவற்றால் வலி கூடுமே தவிர, குறையாது.

மாரடைப்பு ஏற்பட்டால், யாரிடமாவது கன்சல்ட் செய்துவிட்டு பிறகு மருத்துவமனைக்குச் செல்லலாம் என நினைத்து, தாமதப்படுத்துவது தவறு.

இதயத்துக்கான மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு உடனடியாகக் சென்றால் மட்டுமே எளிதில் பிழைக்க முடியும்.
« Last Edit: November 26, 2015, 07:54:39 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு

குழந்தைகளுக்கு  மூச்சுக்குழாயில் உணவு அடைத்துக்கொள்ளும் பிரச்னை அதிக அளவில் இருக்கும். ஏனெனில், குழந்தைகள்   நாணயங்கள், பட்டாணி, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, சிலர் தலைகீழாகக் குழந்தைகளைப் பிடித்துத் தட்டுவார்கள். இது தவறு. இப்படிச் செய்யக் கூடாது.



ஒரு கையில் குழந்தையைச் சாய்வாகப் பிடித்துக்கொண்டு, இரண்டு விரல்களை வைத்து அதன் நெஞ்சுக்குழியில் ஐந்து முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்னர், குழந்தையைத் திருப்பி வைத்து,  உள்ளங்கையால் சில முறை  முதுகில் தட்ட வேண்டும்.

மூச்சுத்திணறல் ஏற்படும்போது தலையில் தட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.

சிலர் குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு உணவுப்பொருளை வெளியே எடுக்க முயலுவார்கள். இதனால், அந்தப் பொருள் மூச்சுக் குழாயின் உட்புறம் தள்ளிவிடப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால்   கவனம் தேவை.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு 

புட்டு, அசைவ உணவுகள் போன்ற சில உணவுகளைச் சாப்பிடும்போது, சிலருக்குத் திடீரென மூச்சுக்குழாய் அடைத்துக்கொள்ளும். ஒருவருக்கு மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டால், அதை சுட்டிக்காட்ட தானாகவே கழுத்துப்பகுதிக்குக் கை போகும். இந்த சமிக்ஞையை ‘யுனிவர்சல் சோக்கிங் ஸைன்’ என்பார்கள்.
யாராவது, தன் கழுத்தைப் பிடித்தபடி தவித்துக்கொண்டிருந்தால், அவருக்குப் பெரும்பாலும் திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, முதலுதவி கொடுக்க வேண்டும்.



மூச்சுக்குழாய் அடைப்புப் பிரச்னையால் தவிப்பவரிடம், ‘மூச்சுக்குழாய் அடைத்திருக்கிறதா?’ என முதலில் கேட்க வேண்டும்.

அவர் கஷ்டப்பட்டு ‘ஆமாம்’ எனச் சொன்னால், பயப்படத் தேவை இல்லை. அவருக்கு ஆக்சிஜன் கிடைத்துக்கொண்டிருக்கும். அவரைப் ‘பேச வேண்டாம்’ எனக் கூறி, நன்றாக இருமச் சொல்லி வலியுறுத்துங்கள்.

ஒருவேளை சத்தம் வரவில்லை, தலையை மட்டும் ஆட்டுகிறார் எனில், அவர்களுக்கு ஹெய்ம்லிச் மேனியூவர் (Heimlich maneuver) எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்குப் பின்புறம் நிற்க வேண்டும். அவரது அடிவயிற்றின் தொப்புள் பகுதியில் இடது  கையைக் குத்துவதுபோல வைக்க வேண்டும். வலது கையை இடது கையின் மேல் வைத்து, நன்றாக மேல்நோக்கி அழுத்தம் தந்து ரிலீஸ் செய்யவும். பாதிக்கப்
பட்டவர் நார்மலாகும் வரை வேகமாக இப்படிச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

முதலுதவி கொடுக்கத் தாமதப்படுத்தினால், நினைவு இழப்பு ஏற்பட்டு, சில நிமிடங்களில் இதயத்துடிப்பு நின்றுவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால், கவனம் தேவை.

ஒருவேளை மயக்கமாகிவிட்டார் எனில், திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால், சி.பி.ஆர் முதலுதவி தருவது அவசியம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வலிப்பு 

வலிப்பு வருபவர்களுக்கு அளிக்கும் முதலுதவிகளில் தவறானவையே அதிகம்.



வலிப்பு வந்தவரை சுற்றி கூட்டம் போடக்கூடாது.

விரைவாக மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல வசதி செய்து தர வேண்டும்.

கையில் சாவி குடுப்பது, செருப்பு கொடுப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

அதேபோல அவரது கை, கால்களைப் பிடிக்கக் கூடாது. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு எலும்புகள், விலகவும் முறியவும் வாய்ப்புகள் உள்ளன.

சோடா, குளிர்பானம் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது.

மூன்று முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு வலிப்பு வரும்போது காய்ச்சல் இருந்தால், மென்மையான துணியைத் தண்ணீரில் நனைத்து, நன்கு பிழிந்த பின் குழந்தையின் உடலில் ஒற்றி எடுக்கலாம். இல்லை எனில், ஆசனவாயில் வைக்கும் பாரசிட்டமால் (சப்போசிட்டரி) மாத்திரையை வைத்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.




காய்ச்சல் இன்றி வலிப்பு வருகிறது எனில், நரம்புத் தொடர்பான பிரச்னையாக இருக்கக்கூடும்.  தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே சிறந்தது.

நாக்கைக் கடித்துக்கொள்ளாமல் இருக்க, நமது கைகளை பற்களின் இடையில் வைப்பதோ, துணியையோ வேறு ஏதேனும் பொருளையோ வாயில் திணிக்க முயல்வதோ கூடாது.

இதனால், உதவி செய்ய முயல்பவருக்கு விரல்கள் கடிபடக்கூடும். சில சமயங்களில் விரல்களே துண்டாகக்கூடும்.

வலிப்பு நின்றவுடன் ஒருபுறமாக ஒருக்களித்துப் படுக்கவைத்து, மேற்புறம் உள்ள காலை மடக்கி வைத்துவிட்டு, ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நாய்க் கடி, பூனைக் கடி, குரங்குக் கடி

நாய்க்கடி, உயிரையே காவு வாங்கும் மோசமான பிரச்னை. வீட்டு நாயோ, தெரு நாயோ, தடுப்பூசி போடப்பட்டதோ, போடப்படாததோ எதுவாக இருந்தாலும், எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற வைரஸ் தொற்று ஏற்படக்கூடும். நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடியாலும் ரேபிஸ் தொற்று ஏற்படும்.



கடிபட்ட இடத்தை சோப் போட்டு, குழாய் நீரில் நன்றாகக் கழுவிய பின் உடனடியாக  மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

நாய்க்கடிக்கு, ரேபிஸ் தடுப்பூசி ஐந்துமுறை போடப்படும். கடித்த தினம் முதல், 3, 5, 7, 28வது நாட்களில் இந்தத் தடுப்பூசி  போடப்படும்.

நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 28 ஊசிகள் போடும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கையிலேயே ஐந்து முறை ஊசி போட்டுக்கொண்டால் போதும்.

குழந்தையை நாய், பூனை பிராண்டினாலோ, கடித்தாலோகூட, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாம்புக் கடி

பாம்புக் கடியைப் பொறுத்தவரை பல தவறான மூட நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கின்றன. பாம்பு கடித்த இடத்தை, வாயால் கடித்து, விஷத்தை உறிஞ்சி எடுத்துக் காறித்துப்புவது, பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, கீறிவிடுவது போன்றவை எல்லாம் தவறான முதலுதவிகள்.

பாம்பு கடித்தால், நடக்கவோ ஓடவோ விடாமல் அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனெனில், ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவும்.

பாம்பு கடித்த இடத்திலிருந்து, மேலே 15 செ.மீ உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதேனும் ஒன்றில் இறுக்கக் கட்டாமல், ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி கொடுத்துக் கட்டலாம்.

கடிபட்ட காலை நகர்த்தவோ, மடக்கவோ கூடாது. எனவே, அதனை ஒரு கட்டையோடு சேர்த்துக் கட்டிவிடலாம்.



பாம்பு கடித்த இடத்தைச் சுற்றிலும்,  ஐஸ் கட்டிகள் கொண்டு ஒத்தடம் கொடுப்பது, நல்ல முதலுதவி. இதனால், அந்த இடத்தில் ரத்தம் உறையும் என்பதால், விஷம் ரத்தத்தில் கலப்பது ஓரளவு தடுக்கப்படும்.

சிலர், கடித்த பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார்கள். இதுவும் தவறு. பாம்பைப் பார்த்து எந்தவித சிகிச்சையும் கொடுக்கப்படுவது கிடையாது.

பாம்பை அடிக்க ஓடாமல், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு விரைவாக கூட்டிச் செல்வதே சிறந்தது.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பூச்சிக் கடி, தேனி கொட்டுதல், தேள் கொட்டுதல்

பூச்சிக்கடியால் வலி மற்றும் அலர்ஜி ஏற்படும்.



தேனி கடித்தால், கடித்த இடத்தில் தேனியின் கொடுக்கைப் பிய்க்கக் கூடாது. அந்த இடத்தில் அழுத்தக் கூடாது.

தேனியின் கொடுக்கு வளைந்து இருக்கும். பிய்த்தெடுக்க முயலும்போது, கொடுக்கின் நுனியில் உள்ள விஷம் உடலுக்கு உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது.

ஒரு மெல்லிய அட்டையை (விசிட்டிங் கார்டு, சீட்டுக்கட்டு அட்டை) எடுத்து, தேனியின் கொடுக்கு இருக்கும் இடத்தில் வழித்துவிட (ஸ்க்ரேப்)  வேண்டும்.

வலி இருந்தால், வலி மாத்திரை சாப்பிடலாம்.



கடித்த இடத்தில் ஐஸ் பேக் வைக்க வேண்டும். தேனி கடித்து, வெகு சிலருக்கு அலர்ஜி காரணமாக மூச்சுக்குழாய் வீக்கம் ஏற்படலாம். இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

ஐஸ் பேக் வைத்த பிறகு, விரைவாக மருத்துவமனை வந்து பரிசோதித்து, தேவைப்பட்டால் சிகிச்சை எடுப்பதன் மூலம், மரணத்தைத் தடுக்க முடியும்.

நம் ஊரில் உள்ள தேள்களில் உயிர் இழப்பை ஏற்படுத்தும் விஷம் இல்லை. எனவே, பயப்படத் தேவை இல்லை.  ஐஸ் பேக் வைத்து, வலி நிவாரணி மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு தேள் கடித்தால், இதயத்துடிப்பில் பெரும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே,  உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தீக்காயங்கள்

சிறிய அளவிலான தீக்காயங்கள், வெந்நீர் கொட்டுவதால் ஏற்படும் காயங்கள், பைக் சைலன்ஸரில் சுட்டுக்கொள்வதால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றின் மீது, உடனடியாகக் குளிர்ந்த நீரையோ அல்லது  சாதாரண தண்ணீரையோ ஊற்ற வேண்டும்.



கொப்புளங்கள் ஏற்பட்டால், அவற்றை உடைக்கக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

மாவு, மஞ்சள், பேனா மை போன்றவற்றைத் தீக்காயங்கள் மீது தடவக் கூடாது.

கம்பளி போட்டு உடலைச் சுற்றி, மருத்துவமனைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மிகச்சிறு தீக்காயங்களுக்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பர்னால் போன்ற சில்வர் சல்ஃபாடயாஸைன் களிம்புகளை நாமே தடவிக்கொள்ளலாம்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விஷம் சாப்பிடுதல்

பூச்சிக்கொல்லிகள், எலி மருந்து போன்ற உயிர்க்கொல்லிகள், அரளி விதை முதலான செடி விஷங்கள், ஆசிட் குடிப்பது, தூக்க மாத்திரை, சாணி பவுடர் எனப்படும் மாலசைட் கிரீன்  ஆகியவற்றின் மூலம்தான் நமது ஊரில் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.



இவர்கள் சுயநினைவுடன் இருக்கும்போது, வாந்தி எடுக்கவைப்பதில் தவறு இல்லை.

சுயநினைவு இல்லாதபோதோ, அரை மயக்கத்தில் இருக்கும்போதோ, வாந்தி எடுக்கவைக்க முயற்சிக்கக் கூடாது.

அரை மயக்கத்தில் அல்லது சுயநினைவு இன்றி இருப்பவர்களை  வாந்தி எடுக்கவைத்தால், நுரையீரலில் புரையேறி, மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்படக்கூடும்.

இவர்களுக்கு வாய் வழியாக எதுவும் கொடுக்கவும் கூடாது.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால் மட்டும்,  சி.பி.ஆர் முதலுதவியைச் செய்து, மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

விஷம் சாப்பிட்டவர்கள் நல்ல சுயநினைவுடன் இருந்தால் மட்டும் கரித்தூள் அல்லது பிரெட்தூள் கொடுக்கலாம். அரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்லும் வசதி இருந்தால், இந்த முதலுதவி செய்வதற்குப் பதில், நேரடியாக மருத்துவமனைக்குக்கொண்டு செல்வதே சிறந்தது.

ஆசிட் போன்றவற்றைக் குடித்தவர்கள் சுயநினைவுடன் இருந்தால், முட்டையின்  வெள்ளைப்பகுதியைச் சாப்பிடக் கொடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லலாம்.

எதைக் குடித்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றால், எந்த முதலுதவியும்  செய்யாமல், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதே நல்லது.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தண்ணீரில் மூழ்குதல்

தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு இரண்டு வகையான பாதிப்புகள் நேரலாம். ஒன்று, தண்ணீர் மூச்சுக்குழாயை அடைத்திருக்கலாம் அல்லது திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டு இருக்கலாம்.



இவர்களின் வயிற்றில் கை வைத்து அழுத்துவது எந்தப் பலனையும் தராது. வயிற்றில் அழுத்துவதால் தண்ணீர் வெளியே வருவது இல்லை. மேலும், அழுத்து வதன் காரணமாக வாந்தி ஏற்பட்டு, வயிற்றில் இருக்கும் தண்ணீர், மூச்சுக்குழாயை அடைத்துக்கொள்ள நேரிடலாம்.

சுயநினைவு இல்லை எனில், சி.பி.ஆர் முதலுதவியை அவசியம் செய்ய வேண்டும்.

வாயை வைத்து தண்ணீரை உறிஞ்ச முயல்வது, குப்புறப் படுக்கவைத்துத் தட்டுவது, சக்கரத்தில் படுக்கை வைத்துச் சுற்றுவது போன்றவற்றைச் செய்து நேரத்தை வீணாக்காமல், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எலெக்ட்ரிக் ஷாக்

எலெக்ட்ரிக் ஷாக்கால் யாராவது பாதிக்கப்பட்டால், மின்சாரம் உடலில் பாய்வதைத் தடுக்க, மிக வேகமாக மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டும்.



மின்சாரத்தைத் துண்டிக்க நேரம் ஆகும் என்றால், மின் கடத்தும் தன்மையற்ற பிளாஸ்டிக், மரக்கட்டை போன்றவற்றைக்கொண்டு பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற வேண்டும்.

மின்சாரம் தாக்கியவரை  வெறும் கைகளாலோ, மின்கடத்தும் பொருட்களான இரும்பு போன்றவற்றாலோ தொடக் கூடாது; அவசியம் காலில் ரப்பர் செருப்பு அணிந்திருக்க  வேண்டும்.

எலெக்ட்ரிக் ஷாக் அடித்திருப்பவர்களுக்கு தீக்காயங்கள், திடீர் இதயத்துடிப்பு முடக்கம், தூக்கி எறியப்படுவதால் காயங்கள் போன்றவை ஏற்படலாம். என்ன பிரச்னை என்பதைப் பொறுத்து அதற்கு உரிய முதலுதவியைச் செய்ய வேண்டும்.

மின் தீக்காயங்கள் எனில், உடலின் எந்தப் பாகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த இடத்தை நன்றாகக் குழாய் நீரிலோ, குளிர் நீரிலோ கழுவ வேண்டும். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹைப்போ கிளைசிமியா

சர்க்கரை நோயாளிகள் சிலருக்குத் திடீரென சர்க்கரை குறைந்தால், ‘ஹைப்போ கிளைசிமியா’ எனும் பிரச்னை ஏற்பட்டு உடனடியாக மயக்கம் ஏற்படும்.

மயக்கம் அடைந்த நிலையில் இருந்தால், எந்த உணவுப்பொருளும் கொடுக்கக் கூடாது. அந்த உணவு, மூச்சுக்குழாயை அடைத்து, அதனால் உயிருக்கே பாதிப்பு ஏற்படலாம்.



ஓரளவு சுயநினைவுடன் இருக்கிறார். ஆனால், மிகவும் சோர்வாக இருக்கிறார்; ஏதாவது சாப்பிடும் நிலையில் இருக்கிறார் என்றால் மட்டும், சர்க்கரை நிறைந்த  பானங்களைக் கொடுப்பதில் தவறு இல்லை.

சுயநினைவு இன்றி இருந்தால், அவருக்கு சர்க்கரை அளவு குறைந்திருக்கிறது என்பதை குளுக்கோமீட்டரில் கண்டுபிடித்து, உறுதி செய்துகொண்டு, ‘குளுக்ககான்’ என்ற ஊசியைப் போட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.