Author Topic: உன் மீது மாறாத காதல்  (Read 393 times)

உன் மீது மாறாத காதல்
« on: November 20, 2015, 09:22:27 PM »
மாறாத காதல் தந்தும்
சேராத காலம் தந்தாய்!!
என் உள்ளம் தாங்கும்வரையிலே
வலிகள் தா தாங்கிகொள்கிறேன்!
எதிர்காலம் ஏதோ சொல்ல
கடந்தவை நினைவில் செல்ல
நிகழ்காலம் மட்டும்
நெஞ்சில் வலியாய் நகர்கிறதே!!
கவிதையில் வரிகள் சேர்த்து
கண்தீன்ட தவமிருப்பேன்!
கண்ணீரே வற்றிப்போயினும்
காதலே காத்திருப்பேன்!!
-சக்தி


Offline SweeTie

Re: உன் மீது மாறாத காதல்
« Reply #1 on: November 21, 2015, 03:18:44 AM »
காத்திருப்பதில் தானே காதலே இனிக்கிறது.   அந்த இனிமையில்
வலிகள் பறந்துவிடும்.   காத்திருங்கள்  சக்தி.     அழகான கவிதை
தொடரட்டும்  உங்கள் கவி பயணம்.

Re: உன் மீது மாறாத காதல்
« Reply #2 on: November 21, 2015, 11:08:34 PM »
நன்றி sweetie :)