Author Topic: பேனாவிற்கு பின்னால் ஒரு பெண்  (Read 528 times)

என்னில் பிறக்கும்
கவிதைகளில் வரிகளை விட
வலி அதிகம்!!
காரணம்
பேனாவால் பிறப்பதுதான் வரி!
பெண்ணால் பிறப்பதுவே வலி!
என் பேனாவை கை சுமந்ததை விட!
பெண்ணே உன்னை இதயம்
சுமந்தது அதிகம்!
அதனால் தானோ
மையும் மெய் மறந்து!
முதல்வரி ஆகுதுன் பெயர்!

காகித கவிதையில் கண்ணீர் பட்டு!
கரையுதே கவிதை கண்கள் விட்டு!
இறைவன் அழித்தது இதயத்தில் அல்ல!
இதை நீயும் அறிவாய்
மெல்ல மெல்ல!!!!!


---சக்தி ராகவா

Offline gab

ஆழமான வரிகள் . நல்ல கவிதை .

Offline JoKe GuY

உங்களின் வலி எங்களால் உணர முடிகிறது நண்பா ...அருமை வாழ்த்துக்கள்..எதிர் பார்க்கிறோம் இது போல பல கவிதைகள்.
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline SweeTie

வலிகளைத் தாங்கும் உங்கள் இரும்பு இதயம் நீண்ட நாள் வாழவேண்டும். 
கவிதை  நன்றாகவே இருக்கிறது.   வாழ்த்துக்கள். 

நன்றி நண்பர்களே தொடர்ந்து ஆதரவு த்தாருங்கள்

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
nice line sakthiragava thodarnthu elutha vazhthukkal....