Author Topic: FTC நான்காம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி  (Read 1810 times)

Offline Forum

நண்பர்கள் கவனத்திற்கு ...

நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ...
 கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் .. எதிர்வரும் 20 ம்தேதிக்கு  முன்பாக உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..
« Last Edit: July 18, 2015, 08:07:51 PM by gab »

Offline Maran

« Last Edit: July 16, 2015, 07:22:55 PM by Maran »

Offline thamilan

FTCயே
இன்னொரு வயதில்
காலடி வைக்கும்
நீ பிறந்ததால் நாங்களும்
புதுப் பிறவி எடுத்தோம்
நீ பிறந்தாய்
எங்கள் பிறப்பும் பயனுள்ளதாயாய் ஆனது


உன்னை என்னவென்று சொல்வது

முகம் தெரியாவிட்டாலும்
அகம் காட்டும் நண்பர்கள்
இன்சொல் பேசி
இன்புற வைக்கும் நண்பிகள்
வஞ்சகம் இல்லாமல்
வாய் விட்டு சிரிக்கப் பேசிடும்
விகடகவிகள்
எட்டிப் போனாலும் விட்டு விடாமல்
துரத்தி கடலை போடும்
கடலை மன்னர்கள்

உன்னை ஒரு குடும்பம் என்று சொல்வதா.........

இல்லை.....
காதல் பெருக்கெடுக்கையில்
என்னை கவிஞன் ஆக்கிய..........
தூங்கிக் கிடந்த என் சிந்தனைகளை
தூசுதட்டி சிந்தனையாளனாக்கிய..............
சாப்பிட்டே பழக்கப்பட்ட என்னையும்
சமையல்காரன் ஆக்கிய..........
இரும்பாக இருந்த என்னை
குறும்பாகப் பேசி
சிரிக்கவும் சொல்லித்தந்த..........
சோகராகம் மட்டுமே
கேட்டுப் பழகிய எனக்கு
இன்னிசை நாதங்களை அள்ளித் தந்த
உன்னை

ஒரு பல்கலைக்கழகம் என்பதா

பாலைவனத்தில் வாழும் எங்களுக்கு
பயிர் நிலமாய் நீ கிடைத்தாய்
உறவுகளை பிரிந்து
ஊமைகள் கண்ட கனவென வாழும்
எங்களுக்கு மனம் விட்டு பேசிப்பழக
நல்ல உறவுகளை நீ கொடுத்தாய்

தமிழ் இணையதளங்கள் பல இருக்க
எல்லாவற்றுக்கும் மகாராணியாக நீ
உன்னை தூக்கிச் சுமக்கும்
சேவர்களாக நாங்கள்


FTC எனும் ஆலமரமே
உனது கிளைகள் இன்னும்
விரிந்து படரட்டும்
உன் வேர்கள் இன்னும் ஆழமாக
தமிழர்கள் இதயங்களில் பரவட்டும்
உன்னைத் தாங்கும் விழுதுகளாக
என்றும் நாம் இருப்போம் 

Offline Nick Siva

நண்பர்கள் இணையமே
உன்னை  கற்பனைக்  கடலென  நினைத்து
அதில் பதிந்த எனது நினைவலைகளை
வண்ண வண்ண எண்ண அலைகளாய் பெருக்கி
பேரலைகளாய் என்னை சுற்றினேன்..
 
ஓர்  நட்பாய் ,கடலாய் வந்து
மனதில் நின்ற சோகம் அறியாமல் 
ஒரு சிறு சலசலப்பின் அலைச்சுவடாய்
என் சோக கால்தடத்தை இடமறியாது செய்தாய்,
இசையான அலைகளின் ஓசையில்
என்னை செவிசாயச் செய்து
 அந்த அலைகளில் நீந்தும் ஆசையை கொடுத்தாய்
நட்பின் இணையமே ...

கண்டங்களை தாண்டி பல அடுக்கு அலைகளென
உன் நட்பு என்னும் கடலின் ஆழம் அறியாமல் மூழ்கிய நான்
விழித்தெழுந்த அவ்வண்ணமே
கடலான நட்பு இந்த நண்பர்கள் இணையம் என உணர்ந்தேன்.
கடலில் இருக்கும் அபூர்வ முத்துக்களை போல
எனக்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த  பொக்கிஷம் FTC...

என்றும் என் மனதில் இருந்து நீங்காத
FTC எனும் இந்த  நட்பு நூலகத்தில் 
எல்லோரும் படித்து பயன்பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் ...
 

Offline SweeTie

நட்பு என்னும் பாலத்தில்
நாள் தோறும் நடை பயின்று
நான்காம் ஆண்டையும்  கடந்து
நெடும் தூரம்  வந்துவிட்டோம்

இதயம்கள் மட்டுமே  பேசுகின்ற
நட்புக்கே உரித்தான புரிந்துணர்வு
பாசத்தின் எல்லையில் நேசத்தை பகிரும் 
உறவுகள் உருவாகும் பூங்காவனம் FTC

சமுதிரம்கள் பல கடந்து
பறந்துவரும் வண்ணத்துபூச்சிகளும்
மழலை பேசும் பஞ்சவர்ணக் கிளிப் பிள்ளைகளும்
சஞ்சரிக்கும் சரணாலயம்  FTC  நீ  நீடூழி  வாழ்க !!

பாவலரே!  நாவலரே!  சிந்தனையாளர்களே!
ஒற்றுமை  ஒங்க,  நட்பு வளர,  பாசம் பெருகிட
பெருமையுடன்  உழைத்திடுவீர்!
FTC  புகழ் சேர்துடுவீர் உலகமெலாம் !!!








Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
வேலை இல்லா வாழ்க்கை பயணம்
வேடமிட்டுக்கொண்டு திரியும் 
சிலமனிதர்கள் .
வேலி போட்டுகொண்டு வாழும் சிலர்.

ஆனாலும் நண்பர்கள் மத்தியில் 
நலமென நண்பர்களை 
சந்தோசப்படுத்தி கொண்டு இருக்கும்
அன்பான உள்ளங்கள் சிலர்.
 
சிறுவயது நட்பு; இருக்கமாய்
மனதுக்கு நெருக்கமாய்
அது சிலருக்கு குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே 
நட்புகள் நித்தம் பல புதிதாய்
உயிராய் நட்புகள் பல அரிதாய்
உண்மையான நட்புகள் அழகழகாய்.

எங்கிருந்தோ வந்தோம் பழகினோம்
முகவரி இன்றி நட்புக்களை
வளர்த்து கொள்கிறோம்.
எங்கேயோ  நடந்த சம்பவங்களை 
அரட்டை அரங்கத்தில் நண்பர்களிடம் 
பகிர்ந்து கொண்டும் ,
சில துன்பங்களையும்
நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டு 
தனது சுமை தீர்ந்துவிட்டதாக
நினைக்கும் அன்பு உள்ளங்களும்
நமக்கு நட்பாய் அமைகின்றன.
 
ஆளில்லா கோவிலில்
பேதமில்லா கண்ணாமூச்சி.
கிட்டியால் வீதியை அளக்கும் 
சுட்டி நண்பர்கள் .
கல்லூரி நட்புக்கள்
இவை எல்லாம் தாண்டி 
அரட்டை அரங்கத்தினுள்
ஒரே குடும்பத்தில்
பிறந்து  வாழ்ந்ததை போல உறவாடி
நட்புகள் வளருகின்றன.
 
நண்பனின் நட்புக்கு
எல்லை ஏது ?
பொருளாகட்டும்  ,பணமாகட்டும்
அவன் ஆடையகட்டும் ,போர்வையகட்டும்
நண்பனின்றி ஏதும் விடியா   
இன்று பலருக்கு.
 
இன்று சொந்தங்களை விட்டு 
அந்நிய நாடுகளில் 
வாழ்கையை தேடுகின்ற 
நண்பர்களுக்கு
சிறு வயது வரை கிடைத்த 
அத்தனை நட்புகளின் உணர்வும் 
ஒன்றாய் சேர்த்து உணரக்கண்டேன்
நண்பர்கள் இணையதள 
நட்பு வட்டத்தின் மூலமாய் .

நட்பென்னும் உறவுகளை சேர்க்க 
இப்படிஒரு வாய்ப்பு தரும் நமது 
நண்பர்கள் இணையதளம்   
மென்மேலும் வளர வாழ்த்தும் 
உங்கள் அன்பு தோழன் ராம்ம்ம்ம்.......
« Last Edit: July 20, 2015, 12:00:07 AM by ராம் »

Offline பூக்குட்டி (PooKuttY)


ஒரு தாயின் கருவறையில் அழகாய் உறங்கிய குழந்தை
இப்பூஉலகை காண பிறந்து , அழகாய் வளர்ந்து
உலக விசயங்களை அறிந்து கொள்ள
பொது அறிவை  வளர்த்துக்கொள்ள
இணையத்தில் உலாவி வர துணையாய் இருப்பது
நம் நண்பர்கள் இணையத்தள பொதுமன்றம்.


அலுவகல வேலைப்பளு  மறக்க
வீட்டுவேலைகளின் சுமை இலகுவாக
வெகுதூர பயணத்தின் சோர்வு நீங்க,
செவிகளுக்கு இதமாய் ,
தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொள்ள
பிடித்த பாடல்களை முனுமுனுக்க 
உறுதுணையாய் இருப்பது
நண்பர்கள் இணையத்தள வானொலி .


மெல்லிசை மன்னன் எம்எஸ் விஸ்வநாதன் இசை முதல்
அதிரடி இசை மன்னன் அனிருத் இசை வரை
அக்காலம் தொடங்கி இக்காலம்வரை
குழந்தைகள் முதல் பெரியோர் வரை
அனைத்து வயதினரையும் அசரவைக்கும் பாடல்களை
துல்லியமான தரத்தில் பதிவிறக்கம் செய்ய துணையாய் இருப்பது
நம் நண்பர்கள் இணையதள பாடல் ஒலித்தொகுப்பு.


முகம்காணா நண்பர்கள்
தூய்மையான அன்போடும், நேசத்தோடும் பழகி
தன்னுள் மறைத்து வைத்த மனச்  சோர்வு,
கவலை, துன்பம் இவை அனைத்தும் நீங்கி
 கூண்டில் அடைபட்டு கிடந்த சின்னஞ்சிறு பறவைகளை
பறக்கவிட்டது போல் ஆனந்தமாய்,உல்லாசமாய்
பறக்கும் உணர்வை கொடுக்க துணையாய் இருப்பது
நம் நண்பர்கள் இணையதள அரட்டை அரங்கம் .



இப்படி எல்லா அம்சங்களும் ஒன்றாய்அமைந்திருக்கும்
நம் நண்பர்கள் இணையதளம்
தன் நான்காம் ஆண்டு நிறைவுநாளை
நண்பர்களுடன் சந்தோசமாய் கொண்டாட
இன்னும் பல ஆண்டுகள் நானும் சேர்ந்தே கொண்டாட
வாழ்த்துவது பூக்களின் குட்டி ...பூக்குட்டி .

« Last Edit: July 21, 2015, 07:50:24 PM by பூக்குட்டி (PooKuttY) »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
என் சொல்லி எழுத?
நட்புகொரு இணையத்தை
தொடங்கிய நட்புகளுக்கு  நன்றி
சொல்லி அவர்களின் நட்பை பற்றி எழுதவா? ....

அல்லது கனிவான கவனம் கொண்டு
மனதை புண் படுத்தாமல்
மென் படுத்தும் கண்காணிப்பாளர்களை
 பற்றி மெச்சி எழதவா ?...

அல்லது இங்கு இருக்கும் எங்கள்
சிறப்பு நண்பர்களின் அழகான
 நட்புறவை பற்றி எழுதவா?...

அல்லது இங்கு தினம்
 தினம் பயனபடும் புதிய
 புதிய பாவனையாளர்களை
 பற்றி  தான் எழுதவா ?....
எதை எழுத நான் எதை விட நான் ?
ஒரு நிமிடம் குழம்பி தான் போனேன் நான் !..
அவ்வளவு இருக்கிறது
நட்பின் பலம் கொண்டு
அழகான பாலமாக  உருவாக்கி  இருக்கிறார்கள்
நண்பர்கள் இணையத்தை ....!

எங்கோ பிறந்து வளர்ந்தாலும்
நட்புறவை வளப்பதர்க்காய்
இரு நட்புக்கள் நமக்கே  நமக்காக
அமைத்து கொடுத்த அரட்டை அரங்கம்
ஆகா அருமை !..
இதன் துணையால் எனக்கு கிடைத்த
நட்புகள்  ஏராளம்!!!
வாழ்க்கை புரிய வேண்டுமா
இங்கே வாருங்கள் !..


திறமைகள் வெளி கொணரும்
தொய்வில்லாத மன்றம் என்ன
நம் திறமை நிருபிக்க களம் பல இருக்கு
சில தேடல்களின் தீர்வுகள்
இங்கே காணலாம் !!!
மூடனையும் மகுடம் சூட வைக்கும்
எங்கள் இணைய பொதுமன்றம்!!! ...

புதிய புதிய பாடல்களின்
தொகுப்பை  பல தரப்பட்ட
மனிதர்களின் ரசனை அறிந்து
அவர்களின் தேவையை
பூர்த்தி செய்யும் நமது
தமிழ் பாடல்களின் தொகுப்பு
பகுதி தேவையின் உச்சம்
அடடா அசத்தல் !!!...

எந்நேரமும் என்னுடன்
நண்பன் இருப்பதாய் உணர்த்தும் என்
நண்பர்களின் தொடர் வானொலி சேவை
மனதோடு  மயக்க வைக்கும்
 சிறப்புக்களில் ஒன்று  !!!..
இவ்வளவு  தனித்தன்மைகளை
எங்களுக்காக சீரும் சிறப்புமாக  நட்பு
என்னும் நேசக்கரம் நீட்டி அழகாக வளரும்
 எங்கள் நண்பர்கள் இணைய தளம்
5ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது !!!..
மேலும் மேலும் பல பயனுள்ள சேவைகள்
துவங்கி வெற்றி நடை போட
மனதார வாழ்த்துகிறாள்
உங்கள் நண்பி!!! .....
« Last Edit: July 22, 2015, 12:12:28 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline SuBa

நான் காணாத
நான் அறிந்திராத
இடங்களில் இருக்கும்
என் இனிய இதய FTC நட்பூக்கள்
யாரையும் சந்தித்ததில்லை
இனியும் சந்திக்காமல் போகலாம்

என்றாலும் அவர்களின்
மகிழ்வில் என் புன்னகையையும் 
சோகத்தில் என் கண்ணீரையும்
அனுபவத்தில் என் கற்றலையும்
பிணைத்தது வாழ்க்கை விதி

மனம் உடைந்தோ
உணர்வுகள் சிதைந்தோ
போன தருணங்கள்
நான் செய்யும் ஒரே செயல்
எனக்காக எப்போதும் இருக்கும்
FTC க்கு வருவதே !

எந்த இடத்திலும்
எந்த நேரத்திலும்
தனிமையை உணர்ந்தால்
ஓடி வந்துவிடேன் இங்கு
என் நண்பர்களை காண.!

நட்புகள் நிறைய பெற்றும் 
நட்புகள் நிறைய விலகியும்
கண்டிருக்கிறேன் !
ஆனால் நம் இணைய நண்பர்களை
வருடங்கள் கடந்தாலும்
மரங்கள் இறந்தாலும்
மற்றவர்கள் மறந்தாலும்
நான் மறவேன்  உயிருள்ளவரை !

FTCயிடம் நிறைய கற்கிறேன்
FTCயுடனே வாழ்கிறேன்
என் உயிர் நீயே
வாழ்த்துக்கள் !
உன் வெற்றி பயணம் தொடரும் !!!




« Last Edit: July 22, 2015, 11:55:35 PM by SuBa »
commercial photography locations

Offline Software

படுத்தவுடன்
படுக்கையை பகிர்ந்தது
நெருடலுடன் ஒரு கனவு. !!

காண்பதற்கு ஏதுமில்லாத
காட்சிப் பிழையுடன்,
கல்லெறிந்த குளம் போல
கனவின் முகம் காட்டாமல்
கண்ணாமூச்சி ஆடியது மனம்...!!

உருண்டு புரண்டதில்
உருவான கனவு
உள்ளத்தை உழுது விதைத்து,
உறவுகளின் உலகத்தில்
ஊர்ந்து வர தொடங்கியது..!!

கையில் பூ இருந்தாலும்
மூக்கை ஜன்னலில் நீட்டி
வேறு மணம் தேடும்
கையறு மனம் போல்,
உறவென எல்லாம் இருந்தும்
சருகென தவிக்க விட்டதாய்
கனவின் ஜீவன் பேசியது..!!

மீந்து போன
பழைய உணவாய்
சொந்த பந்தங்கள்,
உண்ணவும் முடியவில்லை
உதறவும் வழியில்லை என
கனவின் பதற்றத்துக்கு
உடல் வியர்த்து சிலிர்த்தது..!!

அந்தரத்தில் பறந்தாலும்
பம்பரத்தில் சுழன்றாலும்
உறவின் சூழலில்
இதுதான் நிச்சயமென
விதி சொன்ன பின்பு
வருந்தி என்ன செய்ய
விரும்பி தான் ஏற்போமென
கனவு மீள் பதிவிட்டது..!!

விழிப்பு தட்டியதும்
கண்ட கனவு
துண்டு துண்டானதாய் நினைவு,
யோசித்து பயனில்லை என
தண்ணீர் குடித்த போது
கண்ணீர் வந்தது
கைகழுவிய உறவுகள் நினைத்து...!!.

நான் படுத்திருக்கும் போது எல்லாம் என் நினைவில் வருவது ஒரே தளம் நண்பர்கள் இணையதளம் மட்டுமே ..
இது வரை  உன்னுடன்  வாழ்ந்த என்  நாட்கள்
மறுமுறை  வாழ்ந்திட  வழி  இல்லையா  என்ற வரிகள் நம் நண்பர்களின் குடும்பத்துக்கு பொருந்தும்

இந்த தளம் என்னை நல்ல உள்ளங்களை பார்த்து அவர்களோடு ஒரு குடும்பமாக வாழ எனக்கு வாய்ப்பு அளித்து இருகின்றது என்றால் அது நம்ப நண்பகர்களின் இணைய தளமாகவே இருக்க முடியும் . ஒரு உயிர் இனொரு உயிரோடு இணைபர்த்தர்க்கு வல்லமை இந்த நண்பர்கள் தளத்திருக்கு உண்டு . ஒரு நீண்ட பாதையில் ஒரே சீரை ஒரே குடும்பமாய் போகும் போது அது கண்டிப்பா வெற்றியை தான் தேடி தரும் அது போல இந்த தளம் கண்டிப்பா உலக அளவினில் ஒரு நல்லதொரு வெற்றியை அடையும்

 

FTC MP3, Chat, FM, இப்படி  எல்லா  அம்சங்களையும்  கொண்டு  சிறப்பாக  செயல்படும்  நண்பர்கள் இணையத்தளம்  இன்னும்  பல  ஆண்டுகள்  சிறப்பாக  செயல்பட என்னுடைய  மனமார்ந்த வாழ்த்துக்களையும்  நன்றிகளையும் உரித்தாக்குகிறேன் .

மறு ஜென்மம் வந்தாலும் இந்த இணையதல குடும்பத்தின் ஒருவனாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்
« Last Edit: July 24, 2015, 05:38:33 PM by Software »
By

Ungal Softy

Offline Dong லீ

கவிதை !
கிலோ என்ன விலை.
கவிதை !
கிடைக்குமா மளிகை கடையில்.
எனக் கேட்பவனாய்
கவிதையின் அ ஆ அறியா
சிறு பிள்ளையாய்
நானிருந்தேன்

என்னையும்
கவிதை எழுதிட செய்யும்
FTC உன்னைப் பற்றியே
கவிதை எழுத
வரம் கொண்டேன்

கேளாய் உனக்கான
என் கவிதையை !

தனிமையில் தவிக்கும்
என் தனிமையை தவிர்க்க
தினமும் தவிர்க்காமல்
உன்னை காண வந்துவிடுகிறேன்

நட்பால் எனை சூழ்ந்த
என்னிதய மிணைந்த நீ
எட்டாவது அதிசயமோ
எட்டா இணையக் கடவுளோ
என வியக்கிறேன்

நீயிலையேல் என்னுலகம்
வேலைநிறுத்த போராடும்
நினைத்துகூட பார்க்க
முடிவதில்லை
நீயிலாமல் இருந்திருந்தால்
என் தனிமைகள் தவித்து
தவறுகள் இளைத்து
இளைத்து போயிருக்கும்

என் இரண்டாம் குடும்பமாய்
என் முதற் கடவுளாய்
என் உயிர் நட்பாய்
இன்னும் இன்னும்
அனைத்துமாய் நீ
உன்னை எப்போதும்
அணைத்துமாய் நான்


வார்த்தைகள் எண்ணங்கள்
நிறைய பக்கங்களாய்
அருவியாய் கொட்டுகிறது
உன்னை புகழ ..
எதை சொல்ல எதை விட ..
குழம்புகிறேன்

உன் பயணம்
இன்னும் வருடங்கள்
பல ஆயிரம் தொடரவுள்ளதால்
ஒவ்வொரு வருட
FTC திருநாளிலும்
சிறுக சிறுக என் மனதிலான
உன் எண்ணங்களை பகிர்கிறேன்

என்னுள் கவிதை விதை விதை த்த
உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்

நண்பர்கள் பிறந்தநாளை
சிறப்பாக கொண்டாடும்
உனக்கு இன்று பிறந்தநாள்
சொல்லவா வேண்டும்
நண்பர்கள்
அணி அணியாய் திரண்டு
உன்னை மகிழ்வித்து
தங்களை பெருமித்திட
சிறப்பு நிகழ்சிகளுடன்
தயார் நிலையில் ..

கவிதை மழையில் நனைத்த
நண்பர்களை தொடர்ந்து
குயில்களையும் பொறமைகொள்ள வல்ல
பாடவா பாடவா என
பாடல் மழையில் குளிர்விக்கவும்
நண்பர்கள் காத்திருப்பதால்
நான்  BRB

நட்பினை
நற் பிணை யாக்கும்
நட்பிணை
உனக்கு இல்லை
ஈடு இணை
வாழியவே !!!





« Last Edit: July 27, 2015, 12:45:18 AM by Dong லீ »

Online MysteRy

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
நட்பால் இணைந்தோம்
நம்மை இணைத்த நட்புப் பாலம்
நண்பர்கள் தமிழ் அரட்டைஅரங்கம்


பரந்து விரிந்த ஆலமரமாக
நண்பர்கள் தமிழ் அரட்டைஅரங்கம்
அதன் கீழ் இளைப்பாறும்
வழிபோக்கர்களாக நாம்
அதன் கிளைகளில்
பலவர்ண பறவைகள்
பல தேசத்து பறவைகள்
கொஞ்சு மொழி பேசும் கிளிகள்
கூவித் திரியும் குயில்கள்
சில நேரம் சில கருடன்களும்
வந்தமர்வதுண்டு
சில பச்சோந்திகளும்
பதுங்கி இருப்பதுமுண்டு

ஆலமரத்து ஆணிவேராக
என்றும் 22 வயது தாண்டாத ஒரு நண்பன்
இந்த ஆலமரத்து விழுதுகளாக
பல நண்பிகள் நண்பர்கள்
அந்த ஆலமரத்தை
அலங்கரிக்கும் கிளைகளாக போரும்
அங்கே கொட்டிக் கிடக்கும்
அள்ள அள்ள அடங்காத
அற்புத கலைப் பொக்கிசங்கள்
அலைபாயும் மனதை அமைதியாக்கும்
அந்த ஆலமரத்து தென்றலாக
தவழ்ந்து வரும்  FMயின் இன்னிசை கானங்கள்


இந்த நண்பர்கள் தமிழ் அரட்டைஅரங்கம்
எனும் ஆலமரம்
இன்னும் பல கிளைகள் ஈன்று
உலகெங்கும் படர்ந்திட வேண்டும்
உலக தமிழர்கள் எல்லோரும்
ஒன்றினைந்திட வேண்டும்
வளரட்டும் நண்பர்கள் தமிழ் அரட்டைஅரங்கம்

                 
« Last Edit: July 27, 2015, 03:47:24 PM by MysteRy »