Author Topic: ~ கோலி ப்ளவர் 65 ~  (Read 477 times)

Offline MysteRy

~ கோலி ப்ளவர் 65 ~
« on: July 22, 2015, 10:16:30 PM »
கோலி ப்ளவர் 65



தேவையான பொருட்கள்

கோலி ப்ளவர் – 1 பூ (பெரியது)

கடலை மா – 1 1/2 tsp

அரிசிமா – 1 tsp

சோள மா -1 tsp

மிளகாய் தூள் – 1 tsp

கரம் மசாலா தூள் – 3 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய்

அரைப்பதற்கு

பூண்டு – 10 பற்கள்

இஞ்சி – சிறிதளவு

பட்டை,கிராம்பு – 1

செய்முறை:

முதலில் பூவை உதிர்த்து மிதமான சுடு தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள் இட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.பின் அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து அவைகளை காலிப்ளவருடன் சேர்த்து நன்கு பிசைந்து 5 நிமிடம் ஊறவிடவும்.

பின் அதனுடன் சோளமா ,கடலை மா, அரிசிமா, உப்பு ,கரம் மசாலா , மிளகாய் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்.

இதனை திக்காக பிசைந்து கொள்ளவும். பின் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய்யில் இட்டு பொரித்து எடுத்து சுவையாக பரிமாறுங்கள்
« Last Edit: July 22, 2015, 10:36:17 PM by MysteRy »