Author Topic: ~ 30 வகை பியூட்டி - ஹெல்த் ரெசிப்பி! ~  (Read 2296 times)

Offline MysteRy

பச்சைப் பயறு பெசரட்



தேவையானவை:

ஊறவைத்த பச்சைப் பயறு  ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  அரை கப், இஞ்சி  சிறிய துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னி,  தக்காளி சட்னி இதற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை லேசாக வதக்கி, மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பலன்:

உடலில் புரதச் சத்து அதிகரிக்க உதவும்.