Author Topic: விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் நீ  (Read 657 times)

Offline தமிழன்

நீ சிறிய விதை தான்
ஆனால் 
உன்னுள் ஒளிந்திருக்கிறது
பிரமாண்டமான மரம்

வெளிப்பாடு
உன்னை மூடிய மண்ணை பிளந்து
புறப்பட்டு
எங்கெல்லாம் நீர் உண்டோ
அங்கெல்லாம்
உன் வேர்கள் நீளட்டும்
 
தேடலே உன் வேர்கள்
உன் தாகமே உன் வேர்களுக்கு
வழிகாட்டி

பாறைகளை பிளந்து செல்லும்
சக்தி
உன் வேர்களுக்கு உண்டு

ஆழங்களில் இறங்கு நீ
எத்தனை ஆழமாக இறங்குகிராயோ
அத்தனை உயரமாக வளர்வாய்

உன் வேர்களுக்கு
பூமியும் எல்லை இல்லை
உன் கிளைகளுக்கு
வானமும் எல்லை இல்லை

உன் தாகம் அதிகரிக்கட்டும்
உன் தேடல்களும் தொடரட்டும்