Author Topic: விதியை வெல்லலாம்  (Read 460 times)

Offline thamilan

விதியை வெல்லலாம்
« on: June 30, 2014, 11:20:01 PM »
ஒவ்வொரு முறையும்
வீழும் போதும்
எழுவதற்கான எச்சரிக்கை உணர்வுகள்
எழாமல் இல்லை மனதில்

மீண்டும் வீல்வதிலேயே
மனம்
விதியெனும் மூட நம்பிக்கையில்
முடங்கிக்கிடக்கிறது

விதியை உடைத்தெறிந்து
வென்றுவிட
வேறேதும் வேண்டாம்
அடுத்த முறை
விழ மாட்டேன் என
நம்பும் நம்பிக்கை போதும்

Offline NasRiYa

Re: விதியை வெல்லலாம்
« Reply #1 on: June 30, 2014, 11:29:10 PM »
அடுத்த முறை
விழ மாட்டேன் என
நம்பும் நம்பிக்கை போதும் ............. :D :D :Dலேட்டா வந்தாலும் உங்க கவிதை
லேட்டஸ்ட் தான் டோமி
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி