ஒவ்வொரு முறையும்
வீழும் போதும்
எழுவதற்கான எச்சரிக்கை உணர்வுகள்
எழாமல் இல்லை மனதில்
மீண்டும் வீல்வதிலேயே
மனம்
விதியெனும் மூட நம்பிக்கையில்
முடங்கிக்கிடக்கிறது
விதியை உடைத்தெறிந்து
வென்றுவிட
வேறேதும் வேண்டாம்
அடுத்த முறை
விழ மாட்டேன் என
நம்பும் நம்பிக்கை போதும்