Author Topic: ~ 30 வகை சுண்டல் ~  (Read 2207 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #15 on: September 26, 2013, 01:55:24 PM »
கிரிஸ்பி சுண்டல்




தேவையானவை:
முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - 100 கிராம், காராபூந்தி - 100 கிராம், உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
பச்சைப் பயறுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #16 on: September 26, 2013, 01:57:16 PM »
பூந்தி தயிர்வடை




தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 250 கிராம், புளிப்பு இல்லாத தயிர் - அரை லிட்டர், பச்சை மிளகாய் - 3, நறுக்கிய கொத்தமல்லி, கேரட் துருவல் - தலா 2 டீஸ்பூன், காராபூந்தி - 100 கிராம், எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுக்கவும். வடைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து, தயிரில் போடவும். நன்கு ஊறியதும், மேலே பூந்தி, கேரட் துருவல், கொத்தமல்லி தூவவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #17 on: September 26, 2013, 01:59:12 PM »
அவல்  சர்க்கரை புட்டு




தேவையானவை:
கெட்டி அவல் - 250 கிராம், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, சர்க்கரை - 200 கிராம்.

செய்முறை: 
அவலை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சர்க்கரையை பொடித்து அதனுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #18 on: September 26, 2013, 02:01:52 PM »
எள்ளு சாதம்




தேவையானவை:
பாசுமதி அரிசி - 250 கிராம், எள்ளு - 25 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்துப் பொடித்து, சாதத்தில் சேர்த்து...  நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு:  புரட்டாசி சனிக்கிழமையில் இந்த எள்ளு சாதத்தை பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #19 on: September 26, 2013, 02:04:16 PM »
தாளிப்பு தயிர் சுண்டல்




தேவையானவை:
முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பேபிகார்ன்  - ஒரு கப், கேரட் துருவல் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், தயிர் (புளிப்பு இல்லாதது) - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
பயறு, கொண்டைக்கடலையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி தாளித்து, கேரட் துருவலை சேர்க்கவும். இதை தயிரில் போட்டு, உப்பு சேர்த்து... வேக வைத்த பயறு, கொண்டைக்கடலை, வதக்கிய பேபிகார்ன், மிளகுத்தூள் சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவி சாப்பிடக் கொடுக்கவும்.

குறிப்பு:
ருசியுடன் சத்தும் மிகுந்த இந்த தாளிப்பு சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. விருப்பப்பட்டால், சிறிது சர்க்கரை சேர்த்துக் கலக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #20 on: September 26, 2013, 02:05:57 PM »
வாழைப்பழ அல்வா




தேவையானவை:
வாழைப்பழம் - 4, சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப் பருப்பு, கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.

செய்முறை: 
வாழைப்பழத்தை நெய் சேர்த்து வதக்கி, நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாக கிளறி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #21 on: September 26, 2013, 02:07:58 PM »
தேங்காய் சாதம்




தேவையானவை:
பாசுமதி அரிசி - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 
அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவலை எண்ணெய் விட்டு வறுக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளிக்க வும். சாதத்தை அகலமான பாத் திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, வறுத்த தேங்காய், தாளித்தது ஆகிய வற்றை சேர்த்துக் கலக்கவும். பிறகு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

குறிப்பு:
இதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #22 on: September 26, 2013, 02:09:59 PM »
பால் பொங்கல்




தேவையானவை:
அரிசி - 200 கிராம், பால் - 500 மில்லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: 
அரிசியுடன் ஒரு பங்குக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து 4 விசில் விட்டு இறக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, சாதத்துடன் சேர்த்து மசித்து, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு... ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு போட்டு கலந்து, இறக்கவும்.

குறிப்பு:
திராட்சை, பிஸ்தாவை வறுத்து சேர்க்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #23 on: September 26, 2013, 02:11:36 PM »
அன்னாசிப்பழ கேசரி




தேவையானவை:
ரவை - 200 கிராம், சர்க்கரை - 150 கிராம், அன்னாசிப்பழத் துண்டுகள் - ஒரு கப், நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: 
ரவையை நெய் விட்டு சிவக்க வறுக்கவும். அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு... அன்னாசிப் பழ விழுது சேர்த்து, கொதித்ததும் ரவையை தூவிக் கிளறி வேகவிடவும். நன்கு வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி... ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #24 on: September 26, 2013, 02:13:37 PM »
தேங்காய்  அரிசி பாயசம்




தேவையானவை:
தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - ஒரு கைப்பிடி அளவு, பொடித்த வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, வாழைப்பழம் - ஒன்று.

செய்முறை: 
அரிசி, தேங்காய் துருவலை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் தண் ணீர் விட்டு அரிசி - தேங்காய் விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்கு வெந்ததும், பொடித்த வெல்லம் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன், காய்ச்சிய பாலை சேர்த்து, ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி போட்டு இறக்கவும். வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

குறிப்பு:
கொப்பரைத் தேங் காயை, மெல்லியதாக  நறுக்கி நெய்யில் வறுத்து சேர்க்கலாம். பலாச்சுளையையும் நறுக்கி சேர்க்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #25 on: September 26, 2013, 02:15:53 PM »
காய்கறி வடை




தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கோஸ் துருவல், கேரட் துருவல் - தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 250 மில்லி.

செய்முறை: 
பருப்புகளை ஒன்றாக ஊற வைத்து, தண்ணீர் வடித்து, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
கீரை சேர்த்தும் வடை தயாரிக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #26 on: September 26, 2013, 02:18:32 PM »
அக்கார வடிசல்




தேவையானவை:
அரிசி - 250 கிராம், வெல்லம் - 250 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி.

செய்முறை: 
அரிசியுடன் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் பால் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து, சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு வைத்து கெட்டியானதும், சாதத்துடன் கலந்து மசிக்கவும். அதனுடன் வறுத்த முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #27 on: September 26, 2013, 02:20:29 PM »
ஜவ்வரிசி பாயசம்




தேவையானவை:
ஜவ்வரிசி - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, காய்ச்சிய பால் - 500 மில்லி.

செய்முறை: 
ஜவ்வரிசியை நன்றாக வேக வைக்கவும். வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்பு காய்ச்சிய பாலைக் கலந்து, கெட்டியாகும் வரை கிளறவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி, இறக்கவும்.

குறிப்பு:
சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தும் தயாரிக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #28 on: September 26, 2013, 02:22:03 PM »
உக்காரை




தேவையானவை:
கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், வெல்லம் - 150 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: 
கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, கெட்டியாக பாகு காய்ச்சிக் கொள்ளவும். இட்லித் தட்டில் சிறிது நெய் தடவி, அரைத்த பருப்பை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால்... உதிரி உதிரியாக வரும். இதனுடன் பாகு சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.
குறிப்பு: இது பாரம்பரியம் மிக்க இனிப்பு வகைகளில் ஒன்று.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #29 on: September 26, 2013, 02:23:56 PM »
பாதாம்  தேங்காய் பர்ஃபி




தேவையானவை:
பாதாம் பருப்பு - 10, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - 100 கிராம், ரவை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: 
தேங்காய் துருவல், பாதாம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். சர்க்கரையுடன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறி, ரவை தூவி... கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய உடன் துண்டுகள் போடவும்.

குறிப்பு:
முந்திரியை சேர்த்து அரைத்தும் தயாரிக்கலாம்.