51
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-11(இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் பந்தம்–இணையநண்பர்கள்
« Last post by Rahmathulla on June 18, 2026, 10:00:27 PM »நட்பு என்னும் பொக்கிஷம்
Ftc in எனக்கு முதல் நட்பு தேன்மொழி தான். முடிவில்லா நட்பும் அது தேன்மொழி தான்.. நான் ftc ku வந்து 10மாதங்கள் கடந்து விட்டது..
என் உயிர் நண்பி என்று தான் நான் தேன்மொழி ய கூப்பிடுவேன். &சிங்க பெண்.. சிங்க பெண் என்று ஏன் சொல்லவேன் என்றால்..
தேன்மொழி ku பொறுமை அதிகமாக இருக்கும்.. Guest id user எப்படி பேசுறாங்களோ. அதற்க்கு சிறிதும் கடிந்து கொள்ளாமல்.. அப்படி பேசவேண்டாம்.. சொல்லி பொறுமையா சொல்லி குடுப்பாங்க..
நான் யோசிப்பேன் என்னடா இந்த பொண்ணு அவனிடம் பேசி புரிய வைக்கிறாங்க.
மற்ற யாரும் அந்த இடத்தில் இருந்தா சத்தம் போடுவாங்களே.. என்று யோசிப்பேன்..
தேன்மொழியிடம் அந்த நற்பண்பு எனக்கு பிடித்தது..
அப்பொழுது தான் சிங்க பெண் என்று பெயர் வைத்து கூப்பிட்டேன்..
அந்த பொறுமை குணம் எல்லோரிடமும் இருக்காது..
என்னுடைய பேச்சுக்கும் மதிப்பளித்து
தெளிவா ஒவ்வொன்றாய் புரிய வைக்கும் பண்பு அது தேன்மொழியிடம் தான் இருக்கு என்பேன்..
என் உயிர் நண்பியின் நட்பு கிடைத்தது நான் மிகவும் பாக்கியசாலி என்று தான் சொல்லுவேன்..
நான் forum போயிட்டேன்.. But எனக்கு சரிவர எதுவும் அந்த time தெரியாது..
கவிதை க்கு try பண்ணலாம் nu எனக்கு ஆர்வம்..
English la 1st கவிதை write பண்ணிட்டேன். But enaku தமிழ் ல எழுத வரலை..
அப்பொழுது தான் உயிர் காட்கும் என் தெய்வம் போல தேன்மொழியிடம் கேட்டேன் write panni குடுங்க.. சொல்லி..
உடனே அவங்க தமிழ் ல write panni குடுத்தாங்க...
யாரும் தன் வேலையை பார்க்க தான் செய்வார்கள். ஆனால் எனக்கு தமிழ் ல Write panna வராதுன்னு தெரிந்த உடனே நான் write பண்ணி தரேன் சொல்லி தன்னுடைய வேலையை பொருட்படுத்தாமல்
எனக்காக write பண்ணி குடுத்தாங்க. என் உயிர் நண்பி..
அது போலவே நெஞ்சம் மறப்பதில்லை kum தேன்மொழி தான் தமிழ் ல write panni குடுப்பாங்க..
எனக்கு forum la colour font style & epdi post பண்ணனும் அனைத்தையும் சொல்லி குடுத்தது..
என் உயிர் நண்பி தேன்மொழி தான்..
சொல்லி குடுக்க ஒரு மனசு வேணும். அந்த மனசு தேன்மொழியிடம் அதிகாமகவே இருக்கும்...
என்னைய ஒவ்வொரு விஷயத்துக்கும் encorage பண்ணுனது என் உயிர் நண்பி தேன்மொழி தான்..
அதன் பிறகு தான் நான் தமிழ் ல கவிதை write பண்ண கற்று கொண்டேன்..
நல்ல நட்புவை நான் ஒரு பொழுதும் இழக்க தயார் இல்லை..
என் கோபங்களை சகித்து கொண்டு சிறப்பாக நட்பு என்னும் வட்டத்தில் ஓர் நிலையாக நின்றதும்..
என் தாயிற்கு பிறகு எனக்கொரு தோழி இருக்கிறாள் என்று பெருமை கொள்ளும் இடத்தில் நட்பு என்ற தூய இடத்தில் பிரதிபலிக்கும் என் உயிர் நண்பி.. தேன்மொழி.
நம் நட்பை ஒரு நாளும் மறக்க இயலாது..
தேன்மொழி என் உயிர் நண்பி என்று சொல்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்..
என் உயிர் நண்பி எல்லா செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் என்றென்றும் என்னுடைய துஆ (prayer ) உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.. வாழ்க பல்லாண்டு..
Priyamudan
இவன்
அன்பு தோழா
ரஹ்மத்துல்லா
TQ

Recent Posts





