Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
32
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on August 30, 2025, 12:50:03 PM »
I'm not Depressed,
nor am i sad,
but
Life has definitely taken
something from me
that no longer allows me
to smile the way i used to.
33
எல்லாம் புரிந்த எனக்கு
என் மனதிற்கு
புரியவைக்க முடியவில்லை

மனதிற்கு புரியவைத்தல்
என்பது அவ்வளவு எளிதல்ல
நடந்தவைகளுக்கும்
நடந்திருக்க
ஆசைப்பட்டவைகளுக்கும்
நடுவே மாட்டிக்கொண்டு
மனம்படும் வேதனையை
வார்த்தைகளில்
கொட்டிவிட முடியாது ..

அனைத்திற்கும்
அப்பாற்பட்டதே
மனங்களின் தவிப்புகள் ...
34
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on August 30, 2025, 10:58:00 AM »
35
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on August 30, 2025, 08:43:38 AM »
36

இதோ கலைகளும், அதற்கான விளக்கங்களும்...

1. எழுத்தியல்வுக் கலை – (அட்சர இலக்கணம்)

2. லிகிதக்கலை – எழுத்து ஞானம்

3. கணிதக்கலை – எண் நுால்

4. வேதம் – முதல் நுால்

5. புராண இதிகாசம் – பூர்வகதை

6. வியாகரணம் – இலக்கணம்

7. ஜோதிட சாஸ்திரம் – வானியல் ஜோதிடம்

8. தரும சாஸ்திரம் – (வானநூல்)

9. நீதி சாஸ்திரம் – (நீதிநூல்)

10. யோக சாஸ்திரம் – யோகபயிற்சி நுால்

11. மந்திர சாஸ்திரம் – மந்திரநுால்

12. சகுண சாஸ்திரம் – நிமித்தநுால்

13. சிற்ப சாஸ்திரம் – சிற்ப கலை நுால்

14. வைத்திய சாஸ்திரம் – மருத்துவ நுால்

15. உருவ சாஸ்திரம் – உடற்கூற்று லட்சணம்

16. சப்தப் பிரம்மம் – ஒலிக்குறி நுால்

17. காவியம் – காப்பியம்

18. அலங்காரம் – அணியிலக்கணம்

19. மதுரபாஷணம் சொல்வன்மை

20. நாடகம் கூத்துநுால்

21. நிருத்தம் நடனநூல்

22. வீணை மதுராகனநுால்

23. வேணுகானம் புல்லாங்குழல் ஊதுகலை

24. மிருதங்கம் மத்தள சாஸ்திரம்

25. தாளம் உப இலைநூல்

26. அஸ்திரபயிற்சி வில்வித்தை (தனுர் சாஸ்திரம்)

27. கனகபரீட்டை பொன் மாற்றுக் காணும் நூல்

28. ரசபரீட்டை மகாரத-அதிரச்சாஸ்திரம்

29. கஜநீட்டை யானைத் தேர்வு நூல்

30. அஸ்வபரிட்டை குதிரைத் தேர்வு நூல்

31. ரத்னபரிட்டை நவரத்தினத்தேர்வு நூல்

32. பூமிபரிட்டை மண் அளத்தேர்வு

33. சங்கிராம இலக்கணம் போர்முறைவிதி

34. மல்யுத்தம் மற்போர்கலை

35. ஆகர்ஷணம் (அழைத்தல் அணுகுதல்)

36. உச்சாடனம் (அகற்றல்)

37. வித்வேஷணம் பகை மூட்டல்

38. மதன சாஸ்திரம் கொக்கோகம்

39. மோகனம் மயக்குதல்

40 வசீகரணம் வசியப்படுத்தல்

41. இரசவாதம் பிறஉலோகங்களை தங்கமாக மாற்றுதல்

42. காந்தருவவிதம் கந்தவர்களை பற்றிய ரகசியம்

43. பைபீல வாதம் விலங்கு மொழியறிவு

44. கவுத்துவாதம் துயரத்தை இன்பமாக மாற்றுதல்

45. தாது வாதம் நாடி நுால்

46. காருடம் மந்திரத்தால்

47 நஷ்டப்பிரச்னம் ஜோதிடத்தினால் இழப்பு கூரல்

48. மட்டிசாஸ்திரம் ஜோதிடத்தினால் மறைத்தைக் கூறுதல்

49. ஆகாயப் பிரவேசம் விண்ணில் பறத்தல்

50. ஆகாய கமனம் வானில் மறைந்து உலாவுதல்

51. பரகாயப் பிரவேசம் கூடுவிட்டு கூடுபாய்தல்

52. அதிருசியம் தன்னை மறைத்தல்

53. இந்திர ஜாலம் (ஜால வித்தை)

54. மகேந்திர ஜாலம் அதிசயம் காட்டுதல்

55. அக்கினி ஸ்தம்பனம் நெருப்பைக் காட்டுதல்

56. ஜல ஸ்தம்பனம் நீர் மேல் நடத்தல்

57. வாயு ஸ்தம்பனம் காற்றுப் பிடித்தல்

58. திருஸ்டி ஸ்தம்பனம் கண்கட்டுதல்

59. வாக்குலஸ்தம்பனம் வாயைக் கட்டுதல்

60. சுக்கிஸ்தம்பனம் இந்திரியம் கட்டுதல்

61. கன்னல்ஸ் தம்பனம் மறைப்பதை மறைத்தல்

62. கட்க ஸ்தம்பனம் வாள் சுழற்சி

63. அவஸ்த்தைப் பிரயோகம் ஆன்மாவை அடக்கல்

64. கீதம் இசைக்கலை

இந்தக் கலைகளில் உங்களுக்கு எத்தனைக் கலை தெரியுமா?
காலப்போக்கில் நம்மிடையே பல கலைகள் மறந்தே விட்டன
குதிரை தேர்வும், யானை தேர்வும் ஒரு கலைதான், படிப்பும் ஒரு கலையே...

முடிந்தவரை பல கலைகளை கற்றுத்தேர முயற்சி செய்யுங்கள் , ஏனெனில் இவை வாழ்வில் ரீதியானவை, ஆனால் சில நம் பண்பாட்டில் இருந்தே மறைந்தேவிட்டன.
37
கதைகள் / நரியின் நிழல்...
« Last post by MysteRy on August 30, 2025, 08:33:34 AM »

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி

"நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்" என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது.. பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.

மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்... சிறுத்து விட்டோம்.. என்று வருந்தியது நரி. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது... அதனால், நரிக்குத் தன் நிழலே தெரியவில்லை.. "ஆஹா நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?' என்று பயந்தது. பிறகு, "சீச்சி... நாம் உயிரோடு தான்
இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு
கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்.." என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி தான்... சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர்.

காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்.. மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம்.

இயல்பாக இருப்போம்.
ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம். வாழ்வைக் கொண்டாடுவோம்.
38

பூண்டு சளி தொல்லையில் இருந்து மட்டுமின்றி, காய்ச்சல், இருமல், உயர் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், வயிற்று வலி, பாம்பு கடி போன்றவற்றை குணமாக்கவும் உதவுகிறது.
சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். அதற்கு தினமும் பலமுறை பூண்டு பற்களை ஒவ்வொன்றாக சாப்பிட வேண்டும்.

பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்

2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மழைக்காலத்தில் பூண்டு சூப்பைக் குடித்து வந்தால், சளி, இருமல் போன்றவை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு சளி பிடிப்பது போன்று இருந்தால், ஒரு நாளைக்கு 2 முறை பூண்டு சூப் குடித்து வந்தால், சளியை அப்படியே விரட்டிவிடலாம். மேலும் பூண்டு சூப் உடலுக்கு ஆற்றலை வழங்கும்...
40
வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது..

வேப்பந்தழையின் இலை
* கோழையகற்றுதல்,
* சிறுநீர் பெருக்குதல்,
* வீக்கம்,
* கட்டிகளைக் கரைத்தல்,
* வாதம்,
* மஞ்சள் காமாலை,
* காச்சல்,
* சுவையின்மை,
* பித்தம்,
* கபம்,
* நீரிழிவு,
* தோல் வியாதிகள்,
* பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது...


Pages: 1 2 3 [4] 5 6 ... 10