Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
*சளித்தொல்லை_குணமாக…*

பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் பலரும் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வருவார்கள். சளி தொல்லை சிறியதாக இருந்தாலும் நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருகிறது.

👉சளி பிடித்தால் உடனே………

★தொண்டை வலி,

★தலைவலி

ஆகியவை சேர்ந்தே வரும். இத்தகைய சளித்தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பார்ப்போம்.

 #சூடான_இஞ்சி_டீ

சளி பிடித்து இருக்கும் போது சற்று சூடான பானங்களை குடித்தால், நன்றாக இருக்கும். இஞ்சி சளித்தொல்லையை நீக்க வல்லது.

தேவையானவைகள்

▶️6-8 டேபிள் ஸ்பூன் புதிதாக துருவப்பட்ட இஞ்சி

▶️சிறிதளவு இலவங்கப்பட்டை (தேவைப்பட்டால்)

▶️எலுமிச்சை சாறு சிறிதளவு (தேவைப்பட்டால்)

▶️தேன் சிறிதளவு (தேவைப்பட்டால்)

▶️4 கப் சுடு தண்ணீர்

இந்த பொருட்களை சுடுதண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். தேவைப்படும் போது சூடு செய்து தினமும் மூன்று முறை பருக வேண்டும்.

மஞ்சள்_பொடி_மற்றும்_சுண்ணாம்பு

தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.

மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதில் தேவைக்கு தகுந்தது போல நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இதனை நெற்றியிலும் மூக்கிலும் தடவ வேண்டும்.

சுண்ணாம்பு சேர்ப்பதால் புண்ணாகிவிடுமோ என்ற கவலை வேண்டாம். மஞ்சள் புண்ணாவதை தடுக்கும். இதனை தடவிய பின் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.

#நெஞ்சு_சளி_நீங்க

நெஞ்சு சளி நீங்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சு சளி குணமாகும்.


#கொள்ளு_பயிற

கரைக்கவே முடியாத நெஞ்சு சளியை கரைக்க, கொள்ளு சூப் குடிப்பது சரியான தீர்வாக இருக்கும்.

தேன்

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்படி உள்ளவர்கள், அடிக்கடி தேன் சாப்பிடலாம். தேனில் இருக்கும் விட்டமின் சி அடிக்கடி உண்டாகும் சளி தொல்லையிலிருந்து நம்மை காக்கும்.

மேலும்_சில_இதர_வழிகள்…

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது.

இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம்.

இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது. இத சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.

#தேவையான_பொருட்கள்

▶️சீரகம் – 1/2 டீஸ்பூன்

▶️இஞ்சி – 1 துண்டு

▶️பட்டை – சிறிதளவு

▶️வெள்ளை பூண்டு – 10 பற்கள்

▶️மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

▶️தனியா – கிராம்பு – 7

▶️தண்ணீர் – 750 ml

▶️உப்பு – தேவையான அளவு

 சூப் செய்முறை

குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும்.

பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.

10 நிமிடங்கள்

ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)

சூப் ரெடி

பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.

 இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்

மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்

மொத்த கொழுப்பு: 0.5 கிராம்

சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்

சோடியம்: 603 mg

மொத்த கார்போ ஹைடிரேட்: 3%

சளித்_தொல்லை

இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும்.

இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.
22
23
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on Today at 10:54:47 AM »
24
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:35:00 AM »
25


ஒற்றை தாய்..
==========

அம்மா! என் அன்பு அன்னையே !
முன்பெல்லாம் நீதான்  என் முதல் எதிரி !
நான் எது வேண்டுமென கேட்டாலும்
ஒருமுறைக்கு பலமுறைகள் யோசித்து
அவசியமானத்தையே அனுமதித்தாய்!
என்னை செய்யாதே என தடுத்த செயலுக்காக
பலமுறைகள் உன்னை சாடியிருப்பேன்.

உண்ணும் உணவில் சில தடைகள்...
உடுத்தும் உடையில் விதிமுறைகள்..
உரையாடல் பொழுதில் சில திருத்தங்கள்..
உலகை ரசிக்க, நினைக்கையில் தடைகள்...
என் மனதில் கோபம் கொப்பளிக்க..
இவள் என்ன பைத்தியமா? நம்மை
ஏன் இப்படி கடுமையாக வாட்டுகிறாள்..
இவள் மனித இனம் தானே? நம்மை
ஏன் இப்படி கொடுமை செய்கிறாள்..

உன்னை பல நாட்கள் திட்டி தீர்த்தேன்..
இவள் என்ன மனுஷியா இல்லை கல்லா?

தந்தையில்லா எனை நீ ஆளாக்க..
உனது உன்னத அன்பை அடக்கி,
உனது தாய்மையை கல்லாக்கி..
உன் மனதினை, ஓர் ஆடவனாக்கி..
என்னை ஆளாக்கி இருக்கின்றாய்..
உன்னை தலை வணங்குகின்றேன் ... தாயே..

ஆனால் என் மனதில் 1000 வினாக்கள்..
இது தான் ஓர் ஒற்றை தாயின் உருவமா?.
இன்று என்னை இவ்வுலகம் மெச்சும்..
உன்னத மகளாக ஊருக்கு கொடுத்தாய்..-இதற்கு .
அம்மா! உன்னை மனதார மதிக்கிறேன்.

ஆனால் தாயே ..  ஒன்றை நீ மறந்துவிட்டாய்
அம்மா! உன் தாய்மையை கல்லாக்கி.
இந்த உலகுக்கு ஒரு நல்ல மகளை கொடுத்தாய்..
இதனால்  நீ உன் தாய்மையை இழந்தாய்..
நானோ என் அன்னையை இழந்தேன்...
இது விதியா? இல்லை இது தான் வாழ்க்கையா?
26
கவிதைகள் / எனக்குள் அவள்
« Last post by joker on Today at 12:19:45 AM »
ஓர் நாள்
வார்த்தைப் போரில்
என் உள்ளத்தை கைப்பற்றியவள்

விருப்பமான இசை போல
என் நெஞ்சில்
பதிந்தவள்

அன்பின்
கைவண்ணத்தில் எனக்காய்
புதிய வானத்தை வரைந்தவள்

இதயத்தின் தீபத்தில்
ஒளியாய் பிரகாசிப்பவள்

எனக்குள் அலைபாய்ந்து
கரையாக நின்றவள்

எனக்குள் ஒரு உலகை
கண்டவள்

மனம் எந்நிலையில் எரிந்தாலும்
குளிர்விக்கும் நினைவுகளை தந்தவள்
 அவள்

எந்த வலியிலும்
அணைத்து ஆற்றும் அவள்
பேச்சு

பகலில் நிழலாய்
இரவில் நிலவாய்
என்னுள்
ஓடும் நதி அவள்

சிறுக சிறுக என்னை
அவளாக  மாற்றி செதுக்கும்
சிற்பி அவள்

நான் வேறு அவள் வேறு அல்ல
எனக்குள் அவள்


***Joker***
27
கவிதைகள் / Re: மாவீரர் நாள்
« Last post by சாக்ரடீஸ் on November 26, 2025, 11:53:32 PM »
மாவீரர் நாள் 🙏மண் மக்கள் மொழிக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாள் இது. அவர்களின் இரத்தத்தால் எழுந்த வரலாறு நமக்கெல்லாம் நிலையான வழிகாட்டி. மறக்க முடியாத அந்த வீரச்சுவடுகளை வணங்கிப் போற்றுவோம்.
28
கவிதைகள் / மாவீரர் நாள்
« Last post by Thenmozhi on November 26, 2025, 08:39:04 PM »
                  மாவீரர் நாள்


கார்த்திகைத் திங்கள் 27ஆம் நாளாம் இன்று-       நம் தமிழர்
காவியத்  தெய்வங்களை வணங்கி வழிபடும்      நாளும் அதுவே
காலங்கள் பல்லாண்டுகளாக உருண்டு  ஓடினாலும்
காத்திருக்கின்றோம் -கல்லறையில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்த்தெழுவீர்கள் என்ற நம்பிக்கையில்!

தமிழீழ மண்ணை மீட்டெடுக்க
தன்னுயிரை ஈர்த்த தியாக தீபங்கள்       இவர்களே!
தன்னலமின்றி  தமிழுக்காகவும்,தாய் மண்ணுக்காகவும் உயிர் நீத்த மாவீரர்களும் இவர்களே!
தமிழனின் வீரத்தினை உலகத்திற்கு பறைசாற்றிய வீர,வீராங்கனைகளும் இவர்களே!

இவர்களின் உடல்களில் செங்குருதிகளும், வீரத்தழும்புகளும்!
இவர்களின் கழுத்துகளில் சயனைட் குப்பிகளும்!
இவர்களின் மார்பிலும் ,கைகளிலும் ஆயுதங்களும்!
இவர்களின் மனதில் தமிழீழ தாயக விடுதலை கனவுகளும்!
இவர்களின் வாய் அண்ணன் கூறிய உறுதிமொழிகளை உரைத்தவாறும்!
இவர்களின் கால்கள் விடுதலையை நோக்கி வீறுநடை போடும்!

விடுதலைப் புலிகள்,கரும்புலிகள்,
கடற்புலிகள் எனும் பிரிவுகளாக !
விதவிதமான புனை பெயர்களுடன், சீருடை அணிந்து ,அணியாக போர்க்களத்தில்!
விண்ணைப் பிளக்கும் பீரங்கி ,வெடிகுண்டு சத்தம்!
விழும் எதிரிகளின் உடல் அடுக்கடுக்காக நிலத்தில்!

மாவீரர்களை பத்து திங்கள் சுமந்து ஈன்றெடுத்த தாய் என்றும் வீரத்தாய்!
மாவீரர்கள் கல்லறையில் புதைக்கப்படவில்லை, எங்களின் மனதில் விதைக்கப்பட்டவர்கள்!
மாவீரர்களை வணங்குகின்றேன், வழிபடுகின்றேன்!


29
என் மனதில் ஓடும் ஆயிரம் எண்ணங்களுக்கு
விடைதெரியாமல் இன்று தவிக்கிறேன்
அழகான ஓவியமாக இருந்த உன்னை
சிற்பமாய் என் இதயத்தில் வடித்தேன்
 கால ஓட்டத்தில் ஒரு கந்தர்வ வாழ்க்கை அது

தேவதைகளையும் மிஞ்சிய அழகி  நீ
தினமும் உன்னை   ஆராதித்தேன்
உன்னை படைத்த பிரமனை வியந்தேன்
சித்திரத்தேரிலே தங்க சிலையாக பவனி வந்தாய் 
பார்த்து பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன்
\
பழைய கஞ்சி ஆறிப்போனதுபோல,  காலம்கடக்க
உன் அழகிலும் சில மாற்றங்கள் ஏற்பட
உன்மீது என் நாட்டம் குறையலாயிற்று
புதிய உறவுகள் என்னை அண்டத்தொடங்கின
நானும் புதிய மாற்றங்களுக்கு அடிமையானேன்

என் அறிவு மழுங்கியது ஆண்மை தலை தூக்கியது
அழகு சிலையாயிருந்த உன்னை
அறியாமை எனும் உளி கொண்டு அலங்கோலமாக்கினேன்
கடும் சொற்களால் உன்னை கீறி கிழித்தேன்
உடலில் சிதைவுகள் உண்டாக்கினேன்

பெண்மைக்கே உரித்தான பொறுமை உன்னை
பேசாமடந்தையாக்கி என் கொடுமைகளை
பொறுத்துக்கொள்ளும் பூமாதேவியாகிவிட்டது
வெயிலிலும் மழையிலும் எப்படி நீதவித்தாயோ 
என் சுகபோக வாழ்க்கையில் இதை எல்லாம்.
 எண்ணி பார்த்ததில்லை  இன்றுவரை

காலம் என்னை குத்திக்காட்ட தவறவில்லை
தனிமரமாக நிற்கும் என்னை இன்று
தங்குவார் யாருமில்லை
சுற்றிநிற்கும் கறையான்கள் மட்டுமே தஞ்சம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்
நான்மட்டும் என்ன விதிவிலக்கா?
 மாற்றங்கள் மாறாதவை என உணர்கையில்
வாழ்க்கையின் இறுதிப்படியில் நின்றுகொண்டிருக்கிறேன்





 
30
உள்ளத்தை துளைக்கும்
நெடிய
நினைவுக்குழியின் ஆழத்திலிருந்து
மேலெழும்பி வருகிறேன்.
கரையேறி வந்தடைந்த முகட்டிலிருந்தும் மீண்டும் உள்ளிழுக்கிறது நினைவுக்குழி

வீழ்ந்தாலும் மீண்டெழ வைக்கும்
மீண்டாலும் மீண்டும் விழ வைக்கும்
இந்நினைவுக்குழியின்
ஒவ்வொரு பிளவிலும்
சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு.
மீண்டும் மீண்டும் ரணங்களை
கீறிப் பார்த்து,
சிதலங்களின் சாளரங்கள் வழி
வானம் பார்த்து
ஆறுதலடையும் ஓர் எளியவன் நான்

மாபெரும் இம்மனக்கோட்டையின்
மதில் மேலேறி
என்னை நானே ஆசிர்வதித்துக் கொள்ளும் சில கணங்கள்
உங்களுக்கு புரியாமல் போகலாம்
உங்கள் ஆழ்மனக் காயங்களின்
மீதேறி ஒரு நடனம் புரிந்து பாருங்கள்
பின் நீங்களும்
உங்கள் மதில்களின் மீதேறி
உங்களின் மீட்பராவீர்கள்

இதற்கெல்லாம் நான் அஞ்சியிருந்தேன்
இதற்கெல்லாம் நான்
காரணமாயிருந்தேன்
இதற்கெல்லாம் நான்
விலகியிருந்தேன்
என இடையறாத
இந்த கரையேறுதல்களில் வழி
எனை நானே கற்று தேர்ந்தேன்.

நெருங்குதலும், விலகுதலும்
ஒரு வேடிக்கையென
விளையாடிய பார்த்த
தருணங்களை மலை முகட்டிலிருந்து
திரும்பி வர முடியாத தூரங்களுக்கு
வலசை போகும் பறவைகளுக்கு
பரிசளித்தேன்
அவை மீண்டும் திரும்பி வரக்கூடும்
எனினும் கரையேறுதலில்
கைதேர்ந்தவன் நான்.

இருப்பினும் நான் கரையேற முடியாத தொலைவுகளையும்
தொட்டுவிட முடியாத தூரங்களையும்
திரும்ப திரும்ப தேடிப் போகின்றேன்
இந்த விழைவு தான்
கொஞ்சமேனும் எனை இன்னும்
வாழ வைக்கிறது
இந்த தேடல் தான் இன்னுமேனும்
கொஞ்சம் எனை உயிர்ப்போடு
வைத்திருக்கிறது.

நான்,
செல்வதற்கு பாதைகள் இல்லாதவன்
வாழ்வதற்கு தேசங்கள் இல்லாதவன்
ஆனால் ஏறுவதற்கு
சில மலைகளும்
சில கரைகளும்
சில கதைகளும்
என்னிடம் உண்டு
அதுவே என் வாழ்வின் மீதான பிடிப்பு
Pages: 1 2 [3] 4 5 ... 10