உணமைதான் ஆதி அது அந்த காலமல்ல இந்த காலத்திலும் ... பேசுவதை ஓர் நினைப்பதை சுத்த தமிழில் கூறிவிட்டால் அது கவிதை என்று நினைத்து கொள்கின்றார்கள் ... கவிதைக்கும் பேசுக்கும் நிரம்ப வித்தியாசம் உள்ளது என்பது உங்கள் பதிவில் படித்து அறிந்திருப்பார்கள் ...
கவி அரசு கண்ணதாசன் பாடல்கள் பாமரர்களுக்கும் புரியக்கூடிய கவிதைகளாய் பெரும்பாலும் அமைந்திருக்கும் .. ஆனால் கற்றவரையும் பொருள்மயக்கம் கொள்ள செயும் வல்லமை மிக்க கருது பொதிந்த பல பொருள் தழுவிய ஒரு கவிதை பாடலை அண்மையில் கேட்க கிடைத்தது .. இதை பற்றி கடந்த இரவு அரட்டை அரங்கத்தில் அளவளாவினோம் ஆதி ... இருந்தாலும் இது இங்கே அளவளாவுவதற்கு உரிய விடயமாக பட்டதால் இங்கு எனக்கு என் அறிவுக்கு எட்டிய வரையில் இதை பகிர விளைகிறேன் ..
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ ...
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ ..
ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ ...
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவோருபேர் குறைகயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ
கோதையை நீ காயதே கொற்றவரை காய் வெண்ணிலா
இருவரையும் காயதே தனிமையில் ஏங்காய் வெண்ணிலா ..
இதுதான் அந்த பாடல் மேலோட்டமாக இந்த கவிதை பாடலின் அர்த்தத்தை ஆய்வு கண்டால் ஒரு காதலன் காதலி சந்திக்கும் இடத்தில காய்கின்ற வெண்ணிலவை காதலியை இன்பபடுதும் முகமாக காதலன் வெண்ணிலவை போன்றவள் இங்கு இருக்கிறாள் எனவே வேற திக்கில் காய்ந்துகொள்... அந்த தோப்பில் தொங்கும் காய் கனிகளை உவமான உவமேயங்களுக்கு உட்படுத்தி பாடியதாய் பொருள் கொள்ள முடிகின்றது... ஆனால் இதன் காட்சி பதிவு ஒளி வடிவில் பார்த்தால் தோன்றும் கரு வேறு பாருங்கள்
http://www.youtube.com/v/muWBARd3oAk
இதன் படி பொருள் பார்த்தல் ... திருமண இரவில் ஒளிரும் வெண்ணிலா .. ஒளியை அதிகமாக உமிழ்கின்றது ... இதனால் நாணம் கொள்ளும் பெண் நிலவை பார்த்து ... இங்கே இருக்காதே போய்விடு நீயும் பெண் தானே உனக்கும் புரியும் என்ற ரீதியில் பாடுகின்றாள் .. தலைவனும் அவள் எண்ணத்துடன் ஒத்து போய் என் உயிரானவள் சொல்வதை போல் வேறு திக்கில் போய் காய்ந்து கொள்ள சொல்கின்றாள் ...
கன்னிக்காக அவள் கொண்ட காதலுக்காக ... காதலுற்ற பாவைக்காக .. அவள் இதழ் களுக்காக அவரிடம் சொல் அதாவது முத்தம் வேண்டும் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் வேநிலவிடம் சொல்வது போல் சொல்கிறாள் மங்கை ... மாது உள்ளம் காய் ஆனாலும் அதாவது மாது உள்ளம் கனியாது இருந்தாலும் என் உள்ளம் கனியாது இருப்பேனோ .. என்னை நீ காயதே .. அதாவது என்னை வாட்டாதே என் உயிரானவள் நீதானே .. இப்படி பொருள் கொள்ள முடிகின்றது
இரவுக்காக உறவுக்காக எங்கும் இந்த ஏழை காக நிதமும் நீ வந்து இவளிடம் தேவைகளை சொல்லி ... இவளை இன்பதில் ஏக்கத்தில் காய வை என்பது பொருளாகின்றது ...
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ ... உருவம் இன்னும் கனியாது போனாலும் ... காரணம் முதல் இரவு ... இன்னும் உறவு கொள்ளாத நிலை ... பருவம் காய் ஆகுமோ ... பருவம் .. ரொம்ப நாளாய் அது எதிர்பார்ப்பில் கனிந்து விட்டது என்பதை மறை முகமாய் சொல்கின்றதாக பொருள கொள்ளலாம் ..
ஏலக்காய் வாசனை போல் எண்கள் உள்ளம் வாழக்காய் ...ஏலக்காய். போல எப்பவும் எங்கள் உள்ளம் நறுமணமாய் வாழ வேண்டும் ... என்று பொருள் கொள்ள படுகின்றது சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனிய காய் ... சாதிக்காய் உயர் சுவை தர கூடியது .. அதே போல் நம் தனிமையும் உயர் இன்பம் அமைய வேண்டும் என்று பொருள் ஆகின்றது ..
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா.... சொனது எல்லாவற்றையும் துணைக்கு தூது சொல் வெண்ணிலா என்று பொருள் கொள்கின்றது ..
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவோருபேர் குறைகயோ- உள்ளம் எல்லாம் இளகாயோ ... ஒவொரு பேர்கொண்டு அதை சொல்வாயோ .... அதாவது உளத்தில் எழுகின்ற எனணங்கள் ஆசைகளை உரைகசொல்வதாய் பொருள் கொள்க .
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ - வெள்ளரிக்காய் அதுவாக கனிந்தால் வெடித்து அது கனிந்துவிட்டத்தை காட்டும் அதுபோல் நீஉம் சிரித்து உன் சமைத்ததை சொளிவிட்டாய் என்பது பொருள் ...
கோதையை நீ காயதே கொற்றவரை காய் வெண்ணிலா - பெண் என்னை காயதே .. என் கொற்றவன் என் மன்னன் என் கணவரை காய் வெண்ணிலா என்று பொருள் கொள்ள
இறுதியாய்
இருவரையும் காயதே தனிமையில் ஏங்காய் வெண்ணிலா ..- இருவரையும் நீ காயதே ... எங்கள் உளத்தை நாம் புரிந்து கொண்டோம் .. இனி இங்கு உனக்கு தேவை இல்லை எனவே நீ தன்மையில் போய் ஏக்கம் கொள் உன் காதலனை நினைத்து என்று பொருள் கொள்ள வைகின்றது பாடல் ...
அதாவது வெண்ணிலவை வைத்து அதனை தூது சொல்வது போல் உள்ள கிடக்கைகள் பரிமாறப்பட்டு புரிந்து கொள்ள பட்ட உள்ளங்கள் என்று கவிதைப்பாடல் முற்று பெறுகின்றது ....
அட இதற்குள் இதனை அர்த்தங்களா என்று இபொழுது நீங்கள் ஆச்சரியபடுகிண்றீர்களா இல்லையா ...?