FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on June 12, 2012, 01:57:45 PM
-
மனிதன் உயிர் வாழ
உணவு உடை உறையுள்
இவை மூன்றும் வேண்டும் என்பர்
இவற்றை விட
உலகில் உயிர் வாழ
அன்பு வேண்டும்
உணவின்றி வாழலாம்
உடையின்றி வாழலாம்
உறையுளின்றி வாழலாம்
அன்பின்றி வாழுதல் கடினம்
நம்மை நேசிக்க உலகில்
ஒரு உயிர்தனில் வேண்டும்
அப்படி இருந்தால்
நம் வாழ்க்கை சொர்க்கமாகும்
இல்லையேல் நரகமாகும்
அன்பு என்பது
எதிரொலி போன்றது
நீ செலுத்தும் அன்பு
உன்னிடம் திரும்பி வரும்
நீ நேசி
நீ நேசிக்கப்படுவாய்
பிறருக்கு பரிமாறு
உனக்கு பரிமாறப்படும்
நீ அன்பு எனும் தீபத்தை ஏற்று
அது உனக்கு ஒளி தரும்
எத்தனை செல்வம் இருந்தாலும்
பிறர் அன்பை பெறுபவனே
செல்வந்தன்
அன்பை பெறாதவர்கள்
பரம ஏழை
-
மனிதன் உயிர் வாழ
உணவு உடை உறையுள்
இவை மூன்றும் வேண்டும் என்பர்
இவற்றை விட
உலகில் உயிர் வாழ
அன்பு வேண்டும்
உணவின்றி வாழலாம்
உடையின்றி வாழலாம்
உறையுளின்றி வாழலாம்
அன்பின்றி வாழுதல் கடினம்
அன்பு என்பது
எதிரொலி போன்றது
நீ செலுத்தும் அன்பு
உன்னிடம் திரும்பி வரும்
நீ நேசி
நீ நேசிக்கப்படுவாய்
பிறருக்கு பரிமாறு
உனக்கு பரிமாறப்படும்
நீ அன்பு எனும் தீபத்தை ஏற்று
அது உனக்கு ஒளி தரும்
/b]
nitharsanamaana unmail thamilan.
very nice kavithai..
-
எத்தனை செல்வம் இருந்தாலும்
பிறர் அன்பை பெறுபவனே
செல்வந்தன்
உண்மையான வரிகள் . நல்ல கவிதை தமிழன் நண்பா
-
அனு, GAB உங்கள் அன்புக்கு நன்றி