-
இன்று என் நாள்
இனிதாய்
இருக்கும் என
இன்றுவரை ஒவ்வொரு நாளும்
இறைவனை நினைத்து
இனிய நாளை நோக்கி
இன் முகத்தோடு தொடர
இனிய நாள் ஒரு நாளும்
இனிமையாக மாறாமல்
இருட்டாய் மாறி
இதயம் கனத்து போக
இன்னும் தொடருகிறேன்
இனிமையான நாளை நோக்கி...
-
இது என்ன புது குழப்பம்
இனியவள் இவள் இருந்தாலே போதும்
இனிமை அது பன்மடங்காய் .
இருப்பதை விட பலமடங்குகள்
இங்கு எனக்கு என்று மட்டும் இன்றி
இங்கிருப்பவர் எல்லோருக்கும் இயல்பாய்
இன்பமாய்,இனிமையாய் ,இருக்கும்பொழுது
இனியவள் இவளுக்கு மட்டும் ஏன்
இப்படி ?
-
Iniya naalukaai engidum
iniyaval unakaaga
innaal muthalaavathu
iyalaamai neengi
inimaiyum
inbamum
iniya sagothari in vaazhvil
indriamaithathaagida
iraivanidam murai idugiren
-
Epavathu:@:@ santhosama pesuriya nee
epa paaru alu moonji ah:@:@
-
April 1
முட்டாள்கள் தினம் நேற்று
நானும் முட்டாள் ஆனேன்..
பாசமாய் பழகும் முட்டாளாய்
நேசத்தை தேடும் முட்டாளாய்
கிடைக்காத அன்பை
கேட்கும் முட்டாளாய்..
மனதில் ஒன்று வைத்து
வெளியே ஒன்றை
பேசத் தெரியாத முட்டாளாய்
நட்பை நட்பாக மட்டுமே
வெளிபடுத்தும் முட்டாளாய்...
பேச வேண்டிய இடத்தில்
பேசாமலிருக்கும் முட்டாளாய்
பேச கூடாத இடத்தில்
அதிகமாய் பேசும் முட்டாளாய்..
மதியாதவர்களை தேடும் முட்டாளாய்
பாசத்தை புரியமறுக்கும்
உள்ளத்தை நேசித்து
பாசத்தை எதிர் பார்க்கும் முட்டாளாய்
முழு முட்டாளாய் ஆனேன் நேற்று.....
-
முட்டாள் ஆக்கப்பட்ட முட்டாள் தனத்தை
மனதோடு மூடி மறைத்து முணுமுணுக்காமல்
முழுநீள அறிக்கையாய் வாசித்திருக்கும்
முட்டாளுக்கு என் மாலை வணக்கம் !
முட்டாள் ஆக்கபட்டதற்காய் மனம் வருந்தினால்
அதை சுருட்டி மூட்டை கட்டி மூலையில் எறி
மெத்த படித்த மேதாவிகளுக்கென தனியாய்
ஏதும் திருநாள், தனி நாள் உண்டா ?
முட்டாள்களுக்கென முழுதாய் ஒரு நாள்
பெரும் நாள் ,சிறந்த நாள் உண்டே
இவன் யார் ?
முட்டாள்களுக்கு மும்முரமாய் ,முழுமூச்சாய்
வரிஞ்சிகட்டிகொண்டு வக்காலத்து வாங்கும்
இவன் யார் ??கேள்வி எழுமே ???
இருக்கும் முக்கால்மூளையில் கால் பங்கு
மூளையை இதில் செலவிட வேண்டாம் !
முட்டாள் நீ ,முன்னாள் முன்மொழிந்த
அத்தனையையும் வழிமொழிய முழு
தகுதி படைத்த ஒரு முழு முட்டாள் நான் !
உண்மையில் உனக்கு முன்னாள் அதே
அடிப்படைகளில் முட்டாள் ஆக்கப்பட்ட
முன்னாள் முட்டாள் நான் !
-
முழு முட்டாளாய் ஆனேன் நேற்று.....
ithula modify paniru shur
athu inum betr ah irukum
-
நட்புக்குள் பொய் இல்லை
பொய் இருந்தால் அது நட்பே இல்லை..
கற்று உணர்ந்த பாடமாக இருபினும்
என்னை சுற்றி சில பொய்களை
நட்பாக கொண்டு
மெய்யாக பழகி
பொய்யாய் போனது என் நட்பு...
-
நட்பு பொய்யாகலாம்
பாசம் பொய்யாகலாம்
நேசம் பொய்யாகலாம்
சொந்தம் பொய்யாகலாம்
பந்தம் பொய்யாகலாம்
உறவே பொய்யாகலாம்
எது பொய்யான போதும்
உன் மனம் பொய்யாகி இருக்காதே ??
எதன் எதன் மீதோ வைத்த நம்பிக்கையை
உன் மனதின் மீது வைத்திருக்கலாம் ! :(
-
பொறுமை மிகவும் கசப்பானது
முற்றிலும் நிஜமும் கூட...
எனக்கான உறவுகள்
என் பாசத்தை தேடி காத்திருக்க
இல்லாத உறவுகளை தேடி
பாசத்தை பகிர நினைத்து
பொறுமை இழந்து
பாசத்தின் மேல் பாசம்
குறைந்தே போயிற்ரு...
உதட்டளவு உறவு வேண்டாம்
உள்ளம் தொடும் உறவு போதும்...
உள்ளம் தொடும் உறவு எங்கே??
பொறுமை இழக்கிறேன் தினமும்
-
ஒப்புக்கு உறவாய் இருக்க ஒப்பில்லாமல்
ஒப்புரவாய் இருக்க ஒப்புக்கொண்டு
ஒப்பில்லா உன் உறவை வரவாக்க
ஒப்பற்ற வரிகள் தம் துணைகொண்டு - யாரும்
ஒப்பிடா உவமைகள் தனை உடன் கொண்டு
ஒப்பிட்டு வரிவரியாய் வரியிட்டு வர்ணித்து
ஒப்புரவாய் இருந்திடவே இருந்த உறவதனை
தப்பு தப்பாய் எண்ணும் தப்பானவரின் சொல்கேட்டு
துப்புரவாய் அவ்வுறவை துடைத்தெரிந்தாய்
அப்புறமோ அதற்க்கு ஆபுரமோ
எப்புறம் என்று தெரியவில்லை
இப்புறம் ,எதிர்பார்த்தது போல ஏதும்
தப்பு தப்பாய் இல்லை என்பதை
இப்போதாவது ஒப்புக்கொண்டு வெறும்
ஒப்புக்காவது உரையாடினாய்
இப்போதைக்கு இது போதும் எனக்கு !
-
நேசக்கரம் நீட்டாவிடினும்
உண்மை நேசத்தை
உதறித்தள்ள வேண்டுமோ
ஒரு முறையாவது இன்பமாய் கவிதை
எழுத நினைக்கின்றேன்...
பெயரில் மட்டும் இன்பத்தையும்
கவியையும் கொண்டேன்
நிஜத்தில் கவியாய்
இன்பத்தை தொலைத்தவளாய்
எல்லாவற்றிலும்
தோற்று போனவளாய்
கேலி பொருளாய் போகின்றேன்...
-
பொறுமை என்பது கசப்பானது
உண்மை தன் ஒப்புகொள்கிறேன்
கசப்பான உண்மை தான். ஏனெனில்
உண்மையும் உண்மையில் கசப்பானது
அதனால் தான் பலரும் அதை சுவைப்பதில்லை .
பொறுமை கசப்பானது தான்
அது காக்கப்படும் பொது மட்டும்
கட்டி காக்கபட்டுவிட்டால் அதன் பலனோ
எண்ணிடமுடியாதபடி எண்ணில்லா இனிமையானது .
உட்கொள்ளப்படும்போது கசப்பாய் இருந்தாலும்
கட்டுப்பாட்டுடன் உட்கொண்டுவிட்டால் பிணிபோக்கி
உடல் நிலையை இனிதாக்கும் மருந்தோ போல .
பொறுமையை பெருமையாய் கருதி கடைபிடிக்காமல்
வெறும் வறுமையாய் கடைப்பிடித்து அதன் வெறுமையை
வெறுமையாய் வரியிடும் இசையின் பரிணாமமே !
பொறுமையை கடைபிடி !
அருமையாய், பெருமையாய்,சீறும் சிறப்புமாய்
இருப்பாய் என , உரிமை இருக்கிறதோ இல்லையோ?
இருந்தும் உரிமையை சொல்கிறேன்
இனிமை என்பதும் இன்பம் என்பதும்
இருக்கின்ற இடத்தை பொருத்தது இல்லை
இதயத்தை பொருத்தது !
ஆகையால்
பொறுமையை கடை பிடி !
-
நீ மட்டுமல்ல
உன்னோடு யாவரும் ஒர்வகையில் முட்டாள்தான்
முட்டாளுக்கு ஒர்தினமல்ல
ஒவோர் தினமும் முடல் தினம்தான்
:)
-
நிம்மதி தேடி அலைந்த மனதுக்கு
நிம்மதி தரும் இடமாய்
அலுவல் பார்க்கும் இடம் இருப்பதாய்
அளவில்லா சந்தோஷத்தில்
திளைத்த போது
சந்தோஷம் தானாக பறிபோனது...
காரணம் அறியவில்லை நான்..
அலுவலகம் இன்று எனக்கு மட்டும்
சுடுகாடாய் மாறி போயிற்ரு...
நன்றிகள் இரவா
ஓவ்வொரு சூழலிலும்
என்னை எனக்கே புரிய வைக்கிறாய்...
உண்மை எது
பொய் எது....
கண்டுகொள்ள இதுவும் ஒரு வாய்ப்போ??
-
இனிமை என்பதும் இன்பம் என்பதும்
இருக்கின்ற இடத்தை பொருத்தது இல்லை
இதயத்தை பொருத்தது !
நன்றிகள் இரவிற்கா ??? இறைவனுக்கா ???
உன்னை நீயே புரிந்து கொள்ளவும் , உண்மை எது ,
பொய் எது என்று அறிந்து கொள்ள குறைந்த நேரம் எடுத்துகொண்டு
இரவில் இன்பமாய் இளைப்பாற பழகு !
இரவில் பெரும்பான்மை ஜீவராசிகள் புரிவது இதுவே !
-
அலுவல் அதிகமாகி
அலுப்பை தர
முடித்தே ஆகவேண்டும்
என்ற சூழலில்
அலுவல் கழுத்தை நெரிக்க
மணித்துளிகள் இதயத்துடிப்பை
அதிகரிக்க ...
கை வலியில் கைகள் கடுக்க
கவலையில் மனம் அலைய
நான் மட்டும் அவதியாய்
பணி தொடர
நேரம் பத்தை நெருங்க
பதட்டம் மேலும் அதிகரிக்க
ஒருவழியாய் பணி முடிக்க
அலுவலகமே காலி ஆக
இருட்டு வேளையில்
தனியே இருந்த போதும்
கவலை இல்லாமல்
வண்டியை நோக்கி சென்று
வீட்டுக்கு போக தயாராகி
வண்டியை முன்னோக்கி செலுத்தி
கவலைகளை பின்னோக்கி நினைவாக
நெஞ்சில் கொண்டு
ஏதோ ஒரு நினைவில்
திருவிழா கூட்டத்தில்
நடுவே மாட்டிக்கொள்ள
சாலை மறித்து மேடையிட்டு
கோவில் இசை நிகழ்ச்சியில்
தண்ணி அடித்த இளசுகளின்
நடுவே நான் மாட்டிக்கொள்ள
மிருகங்கள் என் ஆடையை பிடித்து இழுக்க
ஒரு கணம் செய்வதறியாது
மனம் கலங்கி கூட்டத்தில் தொலைந்த
குழந்தையாய் வெறித்து பார்த்து முழிக்க
எங்கிருந்தோ ஒரு ஜீவன்
என்னை காக்க
மறித்து வாய்த்த சாலையை கடக்க முடியாமல்
நான் அதிர்ச்சியில் உறைய..
தம்பி ஒரு உதவி செய்வியா என்று
ஒரு நல்ல ஜீவனை அழைக்க
என் வாகனத்தையும் என்னையும்
பத்திரமாக அழைத்து வந்து
வழி அனுப்ப
முதல் முறையாய் ஏதோ ஒரு நடுக்கம்
மனதுள்...
-
இக்கால நிகழ்வை படம் பிடித்து காட்டியது போல் உணர்வு.
-
நிகழ்வு நிஜமாய் நடந்தது அண்ணா ....இது எனக்கு ஏற்பட்ட நிகழ்வு தான்
-
sry da.. dont worry about that
athellam ketta vishayama ninachi maranthudu......
-
உணர்ச்சிகளை கட்டுக்குள் வை நண்பா !
உணர்ச்சி மிகுதியில் கெட்ட விஷயமா ( அது கெட்ட விஷயம் தான் ) என்று சொல்லிருக்கே ...
கெட்ட கனவா என சொல்ல வந்திருப்பியோ என்னவோ ???
-
அதேதான் நன்பா கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுட்டன்
-
இரண்டு நாட்கள் விடுமுறை
சந்தோஷத்தில் மனம் துள்ள
நிம்மதியாய் என் நாட்கள் நகர
சட்டேன்று முடிந்துவிட்டதே
என் சந்தோசம்...
நாளை திரும்பவும்
அலுவல் என்ற
அல்லலில் திரும்பவும்
மாட்டிக்கொள்ள
இயந்திர வாழ்க்கைக்கு
தயாராக போகும்
மனதை சற்றே
ஆசுவாச படுத்திக்கொள்ள
ஆயத்தமாகிவிட்டேன்..
-
இங்கே என்னை கவர்ந்த ஒரு வாழ்க்கை தத்துவத்தின்
தழுவலை நழுவவிடாமல் தழுவிக்கொள்கிறேன்
"இனிமை " என்பதும் "இன்பம் " என்பதும்
இருக்கின்ற இடத்தினை பொருத்தது இல்லை
இதயத்தை பொருத்தது !
வாழ்க்கை அது இயந்திரத்தனம் ஆனதனால் தானோ ??
ஆசுவாச படுத்திக்கொள்ளவும் ஆயுதம்
வாங்கி தாங்க போகின்றாய் ??
-
அல்லலுர கூடாதென
அலுவலகம் சென்றவளின்
அலுப்பை குறைக்க
அடுத்தடுத்த நாளை
விடுப்பாக அளித்தால்
விடுப்பு முடிந்தும்
விடுப்பிலிருந்து வெளியேற மனமின்றி
கடுப்பில் இருப்பவளே மீண்டும்
அடுப்பூத விருப்பமோ...?
-
விடுமுறை முடித்து
அலுவல் செல்ல
புதிதாய் ஏதும்
புதுமையாய் இல்லாமல்
எப்பவும் போலவே
அலுவலை ஆரம்பிக்க
அன்புத்தோழியின் அழைப்பில்
ஆனந்தமாய் அளவளாவ
தோழமையை இருந்த தோழன்
இல்லாத காரணத்தால்
பேசாமல் இருந்து இடைவெளி
அதிகமாகி.
நேருக்கு நேர் பார்த்துக்கொண்டாலும்
சிறு புன்னகையை கூட உதிர்க்க
ஏனோ என் மனம் இடம் கொடுக்காமல்
பார்த்தும் பாராமல் இருக்க
பழகி கொண்டேன்...
துரோகத்தைக் காட்டிலும் கொடுமை
நட்பில் பிரிவு...
உள் ஒன்று வைத்து புறம் பேசும்
மானிடர்களின் மனதை பயிலும்
காலம் போலும்... ;) ;) ;)
-
காலை முதலே சோகம் குடிக்கொள்ள
வழக்கமான சந்தோசம் வராது போக
மனதில் பல சிந்தனைகளோடு
அலுவலகம் நோக்கி
சிந்தை பயணிக்க
பயணத்தின் போது
சந்தோஷமாய் அலைபேசியில்
பேசும் நினைவும் மறந்து போக
ஏதோ ஒரு நினைவில்
கண்கள் கலங்க
துக்கத்தோடு அலுவலகம் சென்று
எதிலும் ஈடுபாடு இல்லாமல்
என் அலுவலை ஆரம்பிக்க
சட்டேன்று மனம்
வேலையைவிட்டு சென்று விடு
என்று நினைத்த நொடியில்
கரங்கள் கடிதத்தை
எழுதிட
என் மேலதிகாரியின் இருக்கையை நோக்கி
நகர்ந்து கடிதத்தை தந்துவிட்டு
திரும்பி என் இருக்கையை பார்க்க
தேம்பி அழுதேவிட்டேன்...
நான் நேசிக்கும் வேலை
நேசிக்கும் அலுவலகம்
நேசிக்கும் நட்புகள்
இவர்கள் இல்லாமல் இனி நானா?? :'( :'( :'(
-
காரணத்தையே கூறிடாமல் செய்த
காரியத்தை மட்டும் கூறுகிறாய்
காரணமே அப்படி ஏதும் இருந்தாலும்
அது, தேரா காரணமாய் ஈறாது.
மாறாது ,ஒப்புக்கொள்கிறேன் உன் நிலை
படு மோசமான நிலைதான் என்பதை ...
அப்படியே, விட்டுப்ப் போக வேண்டும்
என்ற இக்கட்டான கடும் சமயமெனில்
வருத்தபடவேண்டியது நீ மட்டும் அன்று
உன் அலுவலக மேஜைகள் , நாற்காலிகள் .
குளிரூட்டிய குளிசாதன பெட்டி .
நீ தொட்டு பயன்படுத்திய தொலைபேசி .
உன் பட்டுப்பாதம் பட்டுப்பட்டு பதிந்து போன
உன் அலுவலக மின் தூக்கி (லிப்ட்).
உன் இரு சக்கர வாகனம் நிறுத்தா
வாசல் வழியில் இருக்கும் அவ்வாகன நிறுத்தம் .
மதிய வேளையில், உணவு இடைவேளையில்
உன் சக ஊழியரோடு அரட்டையில் நீ அடிக்கும்
ஒவ்வொரு நகைச்சுவை துணுக்குகளையும்
ஒருமுறையும் கேட்காத எனையே இப்படி வருத்துகிறதே ?
நிதமும் அதை கேட்டு, ரசித்து, சிரித்து ஆயுள்கூடிய
அந்த உணவு கூடத்தின் நிலை என்ன ?
அன்றாடம் நீ சுமந்து சென்ற கோப்புகள் ,
அழகாய் , மிக அழகாய் நித்தம் நீ குடிக்க ,
தேநீரும், தண்ணீரும் உனக்காய் சுமந்த கோப்பைகள்
இவை அனைத்தயும் விட, தன் வருகையின்
அர்த்தத்தை அர்த்தப்பட்டு ,அர்த்தப்படுத்தும் ,
ஒவ்வொரு நாளும் உன் வருகையை பதிவு செய்யும்
வருகை பதிவேடு ,
இப்படி ஒவ்வொன்றும்
தன் உயர் பங்கிற்கு வருந்துமே ?
இதற்கென்ன பதில் சொல்ல போகிறாய் ??
-
இரன்டொரு மாத காலமாக
இதே நிலையில் இருந்தவனை
விடுங்கள் அன்னா
நடப்பது நன்மைக்கே என
என்னை தேற்றியவளுக்கும்
இக்கட்டான நிலையா...?
வருந்தாதே தங்கையே, எதற்க்கும் கலங்காதே
இக்கட்டிலிருந்து மீளூம்
கண்கட்டி வித்தை
எதுவென கன்டறி
மனதை அதில் செலுத்து
உதாசீணபடுத்தியவர்கள் நம்மை
புரிந்து கொள்ளும் நிலை வரும்...
காத்திருப்போம்.
-
சந்தோசம் இன்று மனதை குடிகொள்ள
தூக்கம் வராது
கவிதையில் மனம் அலைபாய
நள்ளிரவில் ஒரு கவிதை
ஓயாமல் பேசுபவள் தான்
இன்றும் ஓயாமல் பேசி வருகிறேன்
இணைய வானொலியில்
புரியாமல் செய்த நிகழ்ச்சி
புரிந்து செய்த பின் மனதில்
மகிழ்ச்சி...
பாராட்டுகள் ஒவ்வொன்றும்
முயற்சிக்கு ஏணிப்படிகள்
ஏளனமாய் சிலர் குறை கூறினாலும்
சிலரின் பாராட்டில் குறை மறைந்து
நிறைவாகி போகின்றது..
தமிழை வரமாக பெற்று
கவிபாட திறம் தந்த
இறைவனுக்கு நன்றிகள் கோடி ;) ;)
-
இங்கே என்னை கவர்ந்த ஒரு வாழ்க்கை தத்துவத்தின்
தழுவலை நழுவவிடாமல் தழுவிக்கொள்கிறேன்
"இனிமை " என்பதும் "இன்பம் " என்பதும்
இருக்கின்ற இடத்தினை பொருத்தது இல்லை
இதயத்தை பொருத்தது !
-
நள்ளிரவு முதல்
தூக்கம் வராமல் புரண்ட எனக்கு
எப்படியோ தூக்கம்
கண்களை தழுவ
ஏதோ ஒரு கனவு
மனதை வருட
கனவு முடிந்தும்
கனவின் பாதிப்பு ஏனோ
நெஞ்சத்தை தொட
முதல் முறையாய்
காதல் வாழ்கையை
வாழ்ந்து பார்க்க
மனம் அலைய
நம்பிக்கை இல்லாத காதலின் மேல்
நம்பிக்கை இல்லாததால்
மீண்டும் கனவுக்காக
காத்திருக்கிறேன்
என்னவனோடு கனவில்
காதல் செய்ய :( ;) :-[ :(
-
அங்கும் இங்குமாய்
சிதறி இருக்கும்
நட்புகள்
பார்த்து மனம் கலங்க
செய்வதறியாது தவிக்கும் மனது
என் நண்பனின் துயரம் ஒரு புறம்
என் மனதின் குழப்பம் மறு புறம்
கவிதை களத்தில் சிந்தனை
ஏனோ செல்ல மறந்தாலும்
என் "கவி" க்கு கிடைத்த
சிறந்த தளமாகி போனதால்
வராமல் இருக்க முடியாமல்
வந்து வந்து நொந்து செல்கிறேன்
உண்மையே
உண்மையாக நீ இருக்கும் இடம்
எங்கே??
-
chlm na un heart la than iruken ne oluga kana thoranthu paru :-[
-
chlm na un heart la than iruken ne oluga kana thoranthu paru :-[
Haha darchuuuuuu
-
இன்று ஒரு சந்தோசம்...
சொல்லில் அடங்காத சந்தோசம்..
இணையத்தில் புதிதாய்
ஒரு காதல் கிளிகள்
கண்டதும் ஏனோ
மனதில் ஒரு மகிழ்வு...
குறுகிய காலத்தில் நிறைவாய்
ஒரு உறவு...
பாசத்தை மட்டுமே
பகிரும் பெண் கிளி...
இதயத்தோடு இதயம் இணைந்து
அவளுக்காக சேர்ந்து துடிக்கும்
இதயமாய் ஆண் கிளி...
கண் பட்டு விடுமோ என்ற அச்சம் என்னுள்..
உரிமையாய் என் மீது பாசம் கொள்ளும்
இக்கிளிகளுக்கு
பாசத்தை அளவில்லாமல் தர
ஆசைதான்...
காலம் உள்ள காலம் வரை
என்றும் நீங்காத உறவாய்
நீங்களும் உங்களால் உண்மை காதலும்
வாழும் என்ற நம்பிக்கை என்னுள்...
காக்கும் கடவுள் இருப்பாய் ஆயின்
காதல் கிளிகள் கவலை இன்றி
சந்தோஷத்தை மட்டுமே
வாழ்க்கையில் கொண்டு
வலம் வரும் காட்சியை
பார்க்கும் சந்தோஷத்தை
எனக்கும் தந்து விடு
இறைவா ;) ;) ;) :)
-
Kavi Unpola Un manasum Alaga Eruku Kavithaiyum Alaga ErukuUn ManathilEdam Kidathathuku En Nanrigal :-* :-* :-*
[/b]
-
En machal polla yaru illai pasathai tharu vatharku ungal pasamum ungal aahchirum engalku kettaika naangal kotuthu vaithavarkal engalka kavithai thantha machalku nanri solli vera oruthara ninaika manasu illai neenga en family oruthar than neengal engalku kitaika karama irruntha ftckum kadavulkum nanri machal endrale oru jollya pesalam ,remba uirimai edugalam ennaku remba happya irruku machal ungal kavi payam thodara ennudaiya vaalthugal god bless u :D :D ;D :-[ :-[
-
En thangachi pavi ma kulla kaathala.. Athuvum enoda friend kuda. Grt. Ungaludaiya kaathalakul ethanai innalgal vanthalum piriya nilai vendi iraivanai prarthikiren.
-
romba super chlm antha kaathal kiligal yarunu solu nanum poyi all the best solitu varen 8)
-
மழையின் கண்ணீரும்
புயலின் சீற்றமும்
வெயிலின் கடுமையும்
பனியின் குளுமையும்
மாற்ற இயலாததை போல
உன்னை நினைக்கும்
மனதை மாற்ற இயலாமல்
நான்.....
-
இரண்டு நாட்களாய் மனதில்
போராட்டம்
எங்கோ இருப்பது போல
ஒரு உணர்வு
பிரிந்த சொந்தத்தை தேடுகிறேன்
ஒரு முறையேனும்
பேசி விட துடிக்கிறேன்...
ஏதோ ஒரு உணர்வு தடுக்க
பிரிவை எண்ணி வருந்தியே
காலம் செல்ல
தேடுதலை தொடருகிறேன்...
பாசத்தை முழுதாய் தந்தவள்
இன்று பாதியில் விட்டு செல்ல
பாசத்தை தேடும் மனதை புரிவார் யாரோ
**********************************************
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
-
அதிகம் பேசுகிறேன்
அளவில்லாமல் பேசுகிறேன்
சிந்திக்காமல் பேசுகிறேன்
அமைதி என்ற வார்த்தைக்கு
அர்த்தம் புரிய மறுக்கிறேன்...
ஏதோ ஒரு காரணம் தேடி
பேசிக் கொள்கிறேன்..
சில நேரங்களில்
என்னை நானே வெறுக்கிறேன்
ஏதோ ஒரு தேடல் எனக்கும்
மனதில் பல குழப்பம்
சில சொல்லில் சில்லு சில்லாய்
உடைந்தும் போகிறேன்..
ஏன் என்று வினா வினவியும்
பதில் கிடைக்காத காரணத்தை தேடி
தொடர்ந்து வருகிறேன்..
அமைதியே எங்கே இருகிறாய்
ஓயாமல் துடிக்கும்
என் மனதிற்கு ஆறுதல் தர
அமைதியே அமைதியாய் வந்துவிடு
எனக்குள்
-
சந்தோஷமாய் கவிதை படைக்க
எண்ணும் போது எல்லாம்
ஏதாவது ஒரு இன்னல்
என்னுள் மனதை வதைக்க
என் கவிதை எல்லாம்
எனக்காக கண்ணீர் வடிக்க
என் வரிகளில் வலியை மறக்கிறேன்..
நட்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் புரியாமல் பழகி
நட்பை வதைக்கும் நல் உள்ளங்களின்
செயல்கள் நீங்காத வடுக்களை
ஏற்படுத்தினாலும்
பழகிய நட்பை களங்கபடுத்தும்
எண்ணம் துளி அளவும் இல்லாததால்
கலங்கும் உள்ளதோடு
கவலையோடு காத்திருப்பேன்..
கவலை மறக்க எனக்கே எனக்காக
ஒரு உறவு வராமலா போகும்?? :) :)
-
கவலை மறக்க உனக்கே உனக்காக நான் இருக்கிறேன்.. இருப்பேன் என்றென்றும்... :-* :-* :-* :-*
//நட்பை வதைக்கும் நல் உள்ளங்களின்
நட்பை வதைக்கும் உள்ளங்கள் நல் உள்ளங்கள் இல்லை.
நீ தூய்மையானவள். களங்கபடுத்தும் எண்ணம் உனக்கு என்றும் இல்லை.
-
கவலை மறக்க எனக்கே எனக்காக
ஒரு உறவு வராமலா போகும்?? :)
Apa naanga elam ilaya
NOTE : KANMANI PLEASE ITHUKU VILAKAM KELUNGA NEENGA APADI ILAYA IVALUKKU
(Epadiyo enala mudincha china nala visayam:D)
-
remo intha shruthi ianiku azudhu pulambaradhuku edhum matter ilanu ena use panita pola iruku polachitu pogatum
-
Naarathar Emo Oliga :@:@:@
akkoiiiiiiiiiiiiiiiii nan sonnathu Prensuuu neenga my sisy <3
-
சந்தோஷமாய் நகர்ந்தது
இந்த விடுமுறை
புதிதாய் ஒரு தோழி
அழகாய் பாசமாய்
உரிமையோடு
உள்ளதோடு
உண்மையோடு பாசத்தை பகிர
அலுக்காமல் பேசிவருகிறோம்
சில நிழல்களுக்கு மத்தியில்
நிஜமாய் சில உறவுகள்...
இதே நிஜம் தொடரவேண்டும்
இறைவா
-
அலுக்காமல் பேசிவருகிறோம்
டி ;D ;D ;D அலுக்காமல் தான்
சில நிழல்களுக்கு மத்தியில்
நிஜமாய் சில உறவுகள்...
நிஜமாய் நீயும் நானும் :-* நிழல் படாத தூரத்தில் ;D
இதே நிஜம் தொடரவேண்டும்
இறைவா
சாமியே கும்பிடாதவ இதுக்கு மட்டும் ஏன் சாமிய கூப்பிடுற ;D ;D
நிஜம் என்றும் நிலைத்திருக்கும்
-
அலுக்காமல் பேசிவருகிறோம்
டி ;D ;D ;D அலுக்காமல் தான்
சில நிழல்களுக்கு மத்தியில்
நிஜமாய் சில உறவுகள்...
நிஜமாய் நீயும் நானும் :-* நிழல் படாத தூரத்தில் ;D
இதே நிஜம் தொடரவேண்டும்
இறைவா
சாமியே கும்பிடாதவ இதுக்கு மட்டும் ஏன் சாமிய கூப்பிடுற ;D ;D
நிஜம் என்றும் நிலைத்திருக்கும்
நிஜமாய் நீயும் நானும் :-* நிழல் படாத தூரத்தில் ;D
saamiya kumbidamatenu sollaladi :D sami peru theiryathu :D
i love Jesus ;) ;) ;) ;)
-
நிம்மதியான உறக்கம்
கலைந்து
அழகான பொழுதாய்
இன்று என் நாள் தொடர
இதே இனிமை இன்று
முழுதும் தொடருமா
ஐயத்தோடு தொடர போகிறேன்.. ;) ;) ;)
-
இந்த நாள் இனிய நாள் ;D ;D ;D
கவுந்தடிச்சு தூங்கிட்டு பேசுறத பாருய்யா ;D ;D ;D
-
டி நான் தூங்கி எந்திரிச்சு வந்து fresh-a இருக்கேன்
பேய்க்கு பயந்து தூங்காம இருக்க நீயெல்லாம் வந்து பேசுறியா ::) :) ;) ;) ;)
-
சில நிழல்களுக்கு மத்தியில்
நிஜமாய் சில உறவுகள்...
இதே நிஜம் தொடரவேண்டும்
இறைவா
Intha nijamana uravu thodara vaalthukal
-
சந்தோஷமாய் நகர்ந்தது
இந்த விடுமுறை
புதிதாய் ஒரு தோழி
அழகாய் பாசமாய்
உரிமையோடு
உள்ளதோடு
உண்மையோடு பாசத்தை பகிர
அலுக்காமல் பேசிவருகிறோம்
suuurudhii.... ungaladhu natpu endrendrum idhae paasathoda thodara vaazthugal
-
சந்தோஷமாய் நகர்ந்தது
இந்த விடுமுறை
புதிதாய் ஒரு தோழி
அழகாய் பாசமாய்
உரிமையோடு
உள்ளதோடு
உண்மையோடு பாசத்தை பகிர
அலுக்காமல் பேசிவருகிறோம்
suuurudhii.... ungaladhu natpu endrendrum idhae paasathoda thodara vaazthugal
Akka :D ithula yetho ulkuthu iruka??
-
சில நிழல்களுக்கு மத்தியில்
நிஜமாய் சில உறவுகள்...
இதே நிஜம் தொடரவேண்டும்
இறைவா
Intha nijamana uravu thodara vaalthukal
:):):) mmmm nandrigal
-
உன் கவிதை வரிகளில்
உன் சிந்தனையை கண்டு சிலிர்த்து விட்டேன்
உன் கவிதைகளை படிக்கும் பொழுது
உன் ஆழ்மனதில்
ஊர்ந்து கிடக்கும் ஆச்சரியமூட்டும் உன்
உள்ளத்தின் அபூர்வமோ என என்னத் தோன்றுகிறது
உன் கவிதைகள் அனைத்தும்!!!
தோழியே தொடருங்கள் உங்கள் கவி ஊற்றை
-
உன் கவிதை வரிகளில்
உன் சிந்தனையை கண்டு சிலிர்த்து விட்டேன்
உன் கவிதைகளை படிக்கும் பொழுது
உன் ஆழ்மனதில்
ஊர்ந்து கிடக்கும் ஆச்சரியமூட்டும் உன்
உள்ளத்தின் அபூர்வமோ என என்னத் தோன்றுகிறது
உன் கவிதைகள் அனைத்தும்!!!
தோழியே தொடருங்கள் உங்கள் கவி ஊற்றை
நன்றிகள் ஆயிரம் :) :) :)
-
shruthiiii un kavithaiya en paiyan kooda padika arambichitaan
[/color][/b]
-
ஆனந்தமாய் தூக்கத்தில்
ஆழ்ந்து இருக்கையில்
தூக்கத்தை கலைக்கும்
பேய் குரலாய்
கைத்தொலைபேசியின்
அழைப்பு ஒலி அடிக்க
தூக்கத்தை கலைத்த
தோழியின் அழைப்பு..
இன்னும் பத்துநிமிடம் தூங்கனும் டி
என்று தூக்கத்தை தொடர
மீண்டும் ஒரு அழைப்பு
ஐயோ என் தூக்கம்
என்று கடிகாரத்தை காண
நேரம் எட்டை நெருங்க
அழைப்பு மணியில் ஒரு
துயில் எழுப்பலோ என்று
கை பேசியை நோக்கி
தூக்க கலக்கத்தில்
அரைகுறையாய் பேசி
அவசரமாய் அலுவலகம் செல்ல
பாதி வழியில் இன்று
பெட்ரோல் கடையடைப்பு என தெரியவர
பாதியோடு வீட்டை நோக்கி திரும்பி
அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க
அழைப்பை ஏற்படுத்த
அழைப்பில் ஒரு அபாயமாய்
அலுவலகத்தில் சிறு பிரச்னை என்று சொல்ல
கவலை தோய்ந்த உள்ளதோடு
என் நாள் தொடர
இன்று முழுவதுமே கவலையோடு
நாள் சென்றுகொண்டிருக்க
நாளை அலுவலகம் செல்ல வேண்டுமே
அடுத்த கவலையோடு இன்று என் நாள்
தொடருகிறது... :P :P
-
inimaee ivaluku naaan phanae pana maaten.. oruthiya neridaiya solita,.. enaiyum soldrathukula naan thapichidanum
-
அடியே ஆபிஸ் போகாததுக்கு இவ்வளோ Build up ஆ?? ;D நல்லாதான்யா ப்ளான் பண்றீங்க :o :o
போன் பில் 9999 எடுத்து வை மொதல்ல ;D ;D
-
indru en naal la iruka ella kavithaiyum nalla iruku....
-
shruthiiii un kavithaiya en paiyan kooda padika arambichitaan
[/color][/b]
அம்மு நீ பெரிய ஆளா வர போற
-
inimaee ivaluku naaan phanae pana maaten.. oruthiya neridaiya solita,.. enaiyum soldrathukula naan thapichidanum
அழைப்பு மணியில் ஒரு
துயில் எழுப்பலோ என்று
கை பேசியை நோக்கி
தூக்க கலக்கத்தில்
அரைகுறையாய் பேசி
இது நீங்க தான்
-
அடியே ஆபிஸ் போகாததுக்கு இவ்வளோ Build up ஆ?? ;D நல்லாதான்யா ப்ளான் பண்றீங்க :o :o
போன் பில் 9999 எடுத்து வை மொதல்ல ;D ;D
அடியே போய் சொல்லாத லோக்கல் கால் பேசிட்டு இம்புட்டு Build up தர நீ
நல்லா செக் பண்ணு ISD பேசி இருக்க போற
-
அடியே போய் சொல்லாத லோக்கல் கால் பேசிட்டு இம்புட்டு Build up தர நீ
நல்லா செக் பண்ணு ISD பேசி இருக்க போற
ஆமா ஆமா நான் அபுதாபில இருந்து பேசுறேன் ;D ;D நீ அத்திப்பட்டில இருந்து பேசுற ;D
-
அடியே போய் சொல்லாத லோக்கல் கால் பேசிட்டு இம்புட்டு Build up தர நீ
நல்லா செக் பண்ணு ISD பேசி இருக்க போற
ஆமா ஆமா நான் அபுதாபில இருந்து பேசுறேன் ;D ;D நீ அத்திப்பட்டில இருந்து பேசுற ;D
கர்ர்---- :D:D:D
-
shruthiiii un kavithaiya en paiyan kooda padika arambichitaan
[/color][/b]
Akka iva eluthurathu elam 99.99% kaathal kavithai thaan :S athulayum sila tim konjam apadi ipadi irukum :D athaiyelam payana padikavidurigaley:S
ethuku intha risk :S:D
-
shruthiiii un kavithaiya en paiyan kooda padika arambichitaan
[/color][/b]
Akka iva eluthurathu elam 99.99% kaathal kavithai thaan :S athulayum sila tim konjam apadi ipadi irukum :D athaiyelam payana padikavidurigaley:S
ethuku intha risk :S:D
adapavi EMoooooooooooo >:( >:( >:( >:(
-
Drag pani drag pani kick vanginathu maranthutiya :D
-
Drag pani drag pani kick vanginathu maranthutiya :D
athu pona maasam
-
இன்று காலை பொழுது
அழகாய் உதிக்க ,
அவசரமாய்
அலுவலகம் செல்ல
லேசான மனதோடு
ஜில் காற்று
தேகம் தீண்ட
எனக்கு பிடித்தமான பாடலை
கேட்டுகொண்டே பயணிக்க
அலுவலகம் சென்றதும்
பயம் ஏனோ தானாய் பற்றிக்கொள்ள
இன்றைய வேலைகளை
ஆரம்பித்து,
மனம் மட்டும் ஏதோ ஒரு தேடலில்...
சுகமாய் தோன்றும் தேடல் இது..
எதை தேடினேன்??
இன்றுவரை நினைவில் இல்லை
முந்தைய நாளின் அரட்டையில்
தூக்கம் தொலைந்து
அலுவலகத்தில் அரைதூக்கத்தில்
பணியை செய்கையில்
என் மீது எனக்கே கோவம்...
இனி இரவு நேரம் அரட்டை பக்கம் போகாதே
என் மனதுக்கு நானே
ஆணையிட...
"இன்னைக்கும் மட்டும் போவோமே"
மனம் தனக்குள்ளே சொல்லிக்கொள்ள
இப்படி தான் தொலைக்கின்றேன்
ஓவ்வொரு நாளில் நிம்மதி தூக்கத்தை :P :P
-
indha kadhai thodarkadhaiya dhaanae vandhitu iruku :D ( enaiku nama edutha mudiva nama follow seithirukom)
-
மனம் மட்டும் ஏதோ ஒரு தேடலில்...
சுகமாய் தோன்றும் தேடல் இது..
நீ என்னத்த தேடி இருப்ப .. முனியாண்டி விலாசை தான் தேடி இருப்ப ;D ;D ;D
"இன்னைக்கும் மட்டும் போவோமே"
கழுத கெட்டா குட்டி சுவரு ;D ;D ;D
அலுவலகத்தில் அரைதூக்கத்தில்
பணியை செய்கையில்
தங்கமே என் இனம் டி நீ ;D ;D ;D
அடியே எப்படி தினமும் நடக்குறத கவிதயாவே எழுதுறியோ.. சூப்பர் டி செல்லம் :-* :-*
(ஓ பாட்டாவே படிச்சிடியா..அந்த மாதிரி ;))
-
kannu akka nama podatha sabathama??
gargy kar thu:D:D:D
thodar kavithai ::$:$:$
-
ipdithaan enakum thukam pocha... konja naaluku thunguvomnu daily paakuren mudila... nice lines shruthi......
-
nice kavithai shruthi
-
நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் ஏதோ ஒரு
மனபாரம் என்னுள்
நிஜத்தை தொலைக்காமல்
வாழ்வது கடினமானதோ
நிஜத்தை தேடும் பொழுதெல்லாம்
நிழல் கூட கேலியாய்
சிரிப்பதை போல
மனதுக்குள் தவிப்பு...
பொய்யாய் பழக தெரிந்து இருந்தால்
என்னை சுற்றி ஒரு கூட்டம்
இருந்து இருக்க கூடும்
நிஜத்திற்கு
ஆயுள் குறைவாய் இருப்பினும்
நிஜத்தை தொலைக்காமல்
இருக்க முயற்சி செய்கிறேன்..
-
:( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :(
:'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
-
shruthii unaku edhum santhosam vantha kooda pulamabratha niruthamataa... edhum reason irunda solavenum inaiku yaara nenachu edha enachi indha kavithaiyoo paavam avangaluku puriyamala irukum
[/b][/color]
-
:( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :(
:'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
Ivlo thana illai inum iruka :@ :@ :@:@
yendi ipo oppari vaikura...olunga exam ku padi
-
shruthii unaku edhum santhosam vantha kooda pulamabratha niruthamataa... edhum reason irunda solavenum inaiku yaara nenachu edha enachi indha kavithaiyoo paavam avangaluku puriyamala irukum
[/b][/color]
Akka, Kavi endrale Kanner nu innoru meaning irukunu adikadi maranthu poiduren :D ennavo manasu sari illai akka :D coolllllllllllllllllllllll
-
U laugh - me laugh
u eat - me eat
u sleep - me sleep
u go to office - me go to office
u dont go to office - me dont go to office
u dont eat - i eat :P
u sad - me sad
u cry - me cry
u dont talk - me :( :( :( :( :( :( :( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
-
shruthii unaku edhum santhosam vantha kooda pulamabratha niruthamataa... edhum reason irunda solavenum inaiku yaara nenachu edha enachi indha kavithaiyoo paavam avangaluku puriyamala irukum
[/b][/color]
Sathiyama enaku puriyala :D
-
U laugh - me laugh
u eat - me eat
u sleep - me sleep
u go to office - me go to office
u dont go to office - me dont go to office
u dont eat - i eat :P
u sad - me sad
u cry - me cry
u dont talk - me :( :( :( :( :( :( :( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
U lie - Me sad :)
-
நிம்மதியான உறக்கம்
கலைந்து புத்துணர்ச்சியை
உணர்ந்து,
காலையில் கவிதை களம் நுழைய
நிறைய எழுதும் ஆவல்
எனக்குள் வர நேரமின்மையால்
பிரசிவிக்காமலே மறித்து போகின்றது
என் கவி மழலைகள்...
மரித்து போன கவிதைகள் எல்லாம்
என் நினைவில் நிறுத்தி
வரி அமைக்க காத்திருக்கிறேன்..
விரைவில் வரும்
சில பல நல்ல (ஒப்பாரி) கவிதைகள் ;) ;) ;) ;)
-
விரைவில் வரும்
சில பல நல்ல (ஒப்பாரி) கவிதைகள்
ithu ne solla thevaladi :D
-
விரைவில் வரும்
சில பல நல்ல (ஒப்பாரி) கவிதைகள்
ithu ne solla thevaladi :D
counter poda correct varuviye di :D:D
-
நான் எதுவும் சொல்லல பா :(
-
examthana nadakuthu unaku padikama inga enna pannitu iruka ne adivaanga pora intha thadavayum LKG B thana ne ;D ;D ;D ;D ;D
ne thera mata ;D ;D ;D
-
examthana nadakuthu unaku padikama inga enna pannitu iruka ne adivaanga pora intha thadavayum LKG B thana ne ;D ;D ;D ;D ;D
ne thera mata ;D ;D ;D
fact fact fact
-
என் நாட்குறிப்பில்
முட்டாள்கள் தினமோ
நான் மட்டும் முட்டாளாய் ஆனேன்
என் நாளில் இன்று
முழு இருள்
எனக்கு மட்டும் அமவாசையோ??
நட்புக்குள் பொய் இல்லை
பொய் இருந்தால் அது நட்பே இல்லை
Thanks 4 alll :)
-
shruthiii naan un frienda ilama akkavagiten thapichen ilana nee yaaruku ena soldaranu yosichu enlife poirukum
-
நிம்மதியான உறக்கம்
கலைந்து
அழகான பொழுதாய்
இன்று என் நாள் தொடர
இதே இனிமை இன்று
முழுதும் தொடருமா
ஐயத்தோடு தொடர போகிறேன்.. ;) ;) ;)
superb superb superb cuty :-*
unga kavithai ya padikum podhu unga diary ah padikira oru feel varudhu.
ethana azhaga unga sandosatha unga kastathaiyum vaarthaigalaaga pottu kavithai ezhudi irukinga. very niceeeeee ..
unga kavithaigal la neraiya friends pathiyum avanga unga anbai purinjikalannu solli irundinga..
enaku therinjadha solrene
friendship la pala types iruku
silar anbai azhaga veli kaatuvanga
oru silarku anbai pagira kooda theriyadhu
oru sila natpu pesi pesi valarum
sila natpu la pesamaale nalla oru understanding la irukum.
enna thaan friends naalum expectation illaama irukanum..
engha expectation iruko anga emaatramum irukum.
ellaaraalum ore mathiri ella nerathilum iruka mudiyaradhu illa.
enna thaan friend naalum ellaarum ellaathiayum share seiyanum nu condition illaye.
oru sila kaaranuthukaaga oru sila visayangala maraikalam..
conditions irunda anga eppadi friendship valarum.
love ah irukatum friendship ah irukatum butterfly mathiri . adhai free ah vidunga.
unga anba kaatta marakaadinga.ungaluku sondam na thaana unga kitta varum ..
poi ulagathil mei theduradhu seriyum alla thavarum alla.
ellaarum ellaartavum ore mathrii iruka matanga.
ungaluku pidichavanga mathavangaluku pidikama irukalam
mathavangaluku pidichavanga ungaluku pidikaama irukalam.
adukaaga avanga nallavangalum illa kettavangalum illa.
naama epadi parkiromo apadi taan avngalum irupanga.
oru silar kudumba sooyal kooda oru kaaranamaa irukalam.neraiya peru neraiya sooznilaiya irundu varanga. unmaiyana anbu irundaalum pala nerathila poi ah irundutu pogavum seiranga.
naan ennaiye eg ah solren..
enna thaan naan chat la irundaalum oru sila kattu paadugal enakum iruku.
palar ennai anbaai thedi varum podhu romba sandosama irukum.
ennaala palaroda anbuku unmai ya iruka mudiyradhu illa.oru limit ku mela ennaala suthandirama iruka mudiyaradhu illa.begining la enake kastama irukum. ennoda unmai ah irukiravanga kitta ennaala unmai ah iruka mudiyalaye nu. begining la kastama irukum ennai nenache enaku verupa kooda irundu irukum.ippa pazhagi poitu. poi ulagha anbirkaaga mei ulgatha vida mudiyala.ithanaalave
chat la ennoda limit la irundutu poiduven.
idhuve palarku naan poi nu thonum . entavum palar kettum iurkanga. ennala seriyaana answer kuduka mudiyaradhu illa.ningalum enta kettu irukinga:)
ennai ketta life is simple.
venumgiradhuku mukiyathuvam kudupom.
vendaatha vittu thallitu poite irukanum.
naamalum sandosama irukanum. mathavangala sandosa paduthaatiyum
atleast hurt seiyaama irundutu povom.
edirpaarpu illaama vazha kathupom..
sry edavadhu thappa solli irundaa..edho enaku pattatha sonen..
-
superb superb superb cuty :-*
unga kavithai ya padikum podhu unga diary ah padikira oru feel varudhu.
Nijama ithu en daily pola than ...enoda santhosham, thukkam ellame velipaduthitu varen...:)
enna thaan friends naalum expectation illaama irukanum..
engha expectation iruko anga emaatramum irukum.
Nijam than over Expectation enita.... athu than ella hurts kum kaaranm
ennai ketta life is simple.
venumgiradhuku mukiyathuvam kudupom.
vendaatha vittu thallitu poite irukanum.
Anumaaaaa(cuty)
:'( :'( :'( nijama i waana hug uuuuuuuu
ennai vendamnu than elorum vitu thallitu poitanga polaaa anuma :'( :'( :'(
atleast hurt seiyaama irundutu povom.
edirpaarpu illaama vazha kathupom..
sry edavadhu thappa solli irundaa..edho enaku pattatha sonen..
Ennala yaraium Hurt seiya Mudiyathu anumaa....
Enoda silent than ini elorukum Pathil sollum...
Thanks anuma...
Pala nerathila neenga enaku aaruthala irunthu irukeenga
Now alsoooooo....ummmaaaaa(nose to nose) miss u :'( :'( :'(
-
superb superb superb cuty :-*
unga kavithai ya padikum podhu unga diary ah padikira oru feel varudhu.
Nijama ithu en daily pola than ...enoda santhosham, thukkam ellame velipaduthitu varen...:)
enna thaan friends naalum expectation illaama irukanum..
engha expectation iruko anga emaatramum irukum.
Nijam than over Expectation enita.... athu than ella hurts kum kaaranm
ennai ketta life is simple.
venumgiradhuku mukiyathuvam kudupom.
vendaatha vittu thallitu poite irukanum.
Anumaaaaa(cuty)
:'( :'( :'( nijama i waana hug uuuuuuuu
ennai vendamnu than elorum vitu thallitu poitanga polaaa anuma :'( :'( :'(
atleast hurt seiyaama irundutu povom.
edirpaarpu illaama vazha kathupom..
sry edavadhu thappa solli irundaa..edho enaku pattatha sonen..
Ennala yaraium Hurt seiya Mudiyathu anumaa....
Enoda silent than ini elorukum Pathil sollum...
Thanks anuma...
Pala nerathila neenga enaku aaruthala irunthu irukeenga
Now alsoooooo....ummmaaaaa(nose to nose) miss u :'( :'( :'(
cuty umma :-*
Nose to Nose :-* :-[
ungaluku sandosamum thukkamum kattu kadangaama thaan varuthu.
unarchigaluku anai podunga pala nerathula romba useful ah irukum
english la solvanga.
respond rather react nu ..
ninga anuma sollum podhu romba sandosama iruku cuty :-*
romba naal kalichi anba anbaa velipaduthi irukinga ..ummma :-*
-
anu shruthi ezhuthiya kavithaiya vida neenga sonathula 1000 arthangal iruku en manasula iruka varuthathukulaam neenga aarudhal soldra pola iruku ..
enadhaan friends nu solikitaalaum avanga varuthathala irukum podhu nama kita avangalum enamo sila vishayangal solikamudiyama thavikaraanganu nenaikumpothu romba kastama iruku ...mansu padum paatai varthaigalal sola mudiala ....
entha problem naalum chat dhaane mugam theriyadha manithargal dhaanaenu vitu pogavum mudiala
enna thaan friends naalum expectation illaama irukanum..
engha expectation iruko anga emaatramum irukum.
ellaaraalum ore mathiri ella nerathilum iruka mudiyaradhu illa.
enna thaan friend naalum ellaarum ellaathiayum share seiyanum nu condition illaye.
oru sila kaaranuthukaaga oru sila visayangala maraikalam..
conditions irunda anga eppadi friendship valarum.
love ah irukatum friendship ah irukatum butterfly mathiri . adhai free ah vidunga.
unga anba kaatta marakaadinga.ungaluku sondam na thaana unga kitta varum ..
poi ulagathil mei theduradhu seriyum alla thavarum alla.
ellaarum ellaartavum ore mathrii iruka matanga.
ungaluku pidichavanga mathavangaluku pidikama irukalam
mathavangaluku pidichavanga ungaluku pidikaama irukalam.
adukaaga avanga nallavangalum illa kettavangalum illa.
naama epadi parkiromo apadi taan avngalum irupanga.
oru silar kudumba sooyal kooda oru kaaranamaa irukalam.neraiya peru neraiya sooznilaiya irundu varanga. unmaiyana anbu irundaalum pala nerathila poi ah irundutu pogavum seiranga.
.... golden words
-
கை முறிந்ததை போல் ஆனேன்
என் நம்பிக்கை உடைந்தததால்...
அழுகை தாளாமல்
அலுவல் முடித்து அறைவிடுப்பில்
இல்லம் வந்து செய்வதறியாது
மனம் ஏனோ தவிப்பில் துவள
வேண்டாம் இனியும் இந்நிலை...
நிம்மதியே எங்கே இருகிறாய் நீ
மீண்டும் தேடல் எனக்குள் :) :)
-
shruthi unaku aluvalagam dhaan sudukaada maarinadhu enaku paakum idamellam apadithaan iruku
-
சுகமான தூக்கம்
சுகமாய் கலைந்திட
நீண்ட நாள் பிறகு
நிம்மதியாய் ஒரு விடியல்...
கண்திறக்கும் பொழுதினில்
தினமும் கோபத்தோடு
விழிக்கும் என் நாள் இன்று
ஆசுவாசமாக , அமைதியாய்
புலர ...மனதிலும் சிறு அமைதி,..
குழப்பம் நீங்கி
தெளிவோடு மனம்,
நிதானமாய் சிந்தித்து
சில முடிவுகள் என்னுள்...
பாசத்தை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி
என் பழைய நாட்களை தொடர போகிறேன்...
வேண்டாம் இனி
சில பொய்முகங்கள்
என் நட்புகூட்டுக்குள்..... ;) ;) :) :) :)
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
அழகான பாடல் நிஜமான வரிகள் ;)
-
tnks kanmani
-
ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒரு செயலை
முன்னிறுத்தியே
என் நாட்களும்
என் கவிதையும் பயணிப்பதாய்
எனக்குள் சந்தேகம்
தனிமையின் வேதனை
தாளாத போது
என் கண்கள்
கண்ணீரை வடிக்காமல்
வரிகளாய் வடிப்பதால்
பாதி பாரம் தீர்ந்த சந்தோசம் என்னுள்...
ஓயாமல் பேசியே பழக்கப்பட்டவள்
பேசமுடியமால்
என் மனதின் வலிகளை
வரிகளாய் படைத்தது
ஒரு முறை படித்து
பாரங்களை இறக்கி வைத்த
திருப்தியோடு ஒவ்வொரு நாளையும்
கடந்து வருகிறேன்
இதுவும் கடந்து போகும்... ;) ;) ;) ;) ;)
-
தனிமையின் வேதனை
தாளாத போது
என் கண்கள்
கண்ணீரை வடிக்காமல்
வரிகளாய் வடிப்பதால்
பாதி பாரம் தீர்ந்த சந்தோசம் என்னுள்...
)
nice lines cuty
-
சுதந்திர காற்றாய்
சுகமாய் சுவாசிக்க
ஆயுதமாகும் மனதோடு
அழகாய் விடிந்த விடியலில்
ஆனந்தமாய் அலுவலகம் நோக்கி
எண்ண அலைகள் சுழல
இறுக்கமான சூழல் தீர்ந்தது
என் தோழியின் வருகையால்...
எனக்கு அன்னையாய் என் தோழி..
அவள் அன்னையாகி வந்த பிறகு
அழகாய் மாறி இருந்தாள்..
செல்ல குட்டி சாராவை :-* :-* :-*
பார்க்கும் ஆவல் என்னுள்
மீண்டும் என் அலுவலகம்
ஆனந்தமாய் மாறிய சந்தோஷத்துடன்
அலுவலகம் நோக்கி என் பயணம்...
-
Anuma thankssssssssssssss...miss u lot :* :*
-
nanum antha saaravai parkanume chlm mudiuma?
-
palakame darchu india vaanga ;) ;)
-
எதை எதையோ
ரசித்து கவிதை படைத்த நான்
இதனை வருடமாக
ஒன்றை ரசிக்க மறந்தேன்..
அழகான விடியலை
ரசித்து எழுதும் நான்
ஒவ்வொரு விடியலின் போதும்
கண்விழித்த அடுத்த நொடி
என்னை கட்டி தழுவி
முத்தமிடும் என் செல்ல மகளை
ரசிக்க மறந்தேனோ...
ஒவ்வொரு நாளும்
காலை வணக்கத்தை
முத்தத்தால் சொல்லும் மகள்..
பல நேரங்களில்
நான் கண்விழிக்காத போதும்
முத்தமும் , தழுவலும்
நிறுத்தாமல்
தந்துவிட்டு செல்லும் மகள்...
இதனை வருடம் எப்படி மறந்தேன்
இதை ரசிக்க..
பள்ளியில் இருந்து வந்த அடுத்த நொடி
தேடும் முகம் என் முகம் தானே...
கட்டி அணைத்து முத்தமிட்ட பின்னே
மற்ற வேலைகளை செய்யும் செல்ல மகளை
இன்று ஏனோ ரசிக்க தொடங்கி விட்டேன்...
பல நேரங்களில் என் அன்னையாய்
சில நேரங்களில் தோழியாய்
இந்த வயதில் எத்தனை முதுர்ச்சி...
கருவில் சுமக்காவிட்டலும்
இதயத்தில் சுமந்துவருகிறேன்
என் இறுதிவரை :-* :-* :-* :-* :-* ;) ;) ;)
-
shruthi nalla kavithai thaai magal paasathai paravasathudan pagirnthirukirirgal nanri..
-
கருவில் சுமக்காவிட்டலும்
இதயத்தில் சுமந்துவருகிறேன்
என் இறுதிவரை :-* :-* :-* :-* :-* ;) ;) ;)
manadhil sumanthaalum thaai thaane cuty :-*(L)
-
கருவில் சுமக்காவிட்டலும்
இதயத்தில் சுமந்துவருகிறேன்
என் இறுதிவரை
So happy to hearing this..... May God bless her!!
-
மூன்று நாள் விடுப்பு
முடிந்த கவலை
நேற்று இரவே மனதில்..
பள்ளி செல்லும் சிறுகுழந்தையாய்
மனம் ஏனோ அடம்பிடிக்க
விடிந்த விடியலை
விரும்பாமல் விழித்து
ஐயோ ஏன் இந்த நிலை.
அலுவலகம் செல்ல
மனதில் அலுப்பு..
விடுமுறை இன்பம்
நீடிக்காதோ என மனம்
அலைபாய விருப்பம் இல்லாமல்
அலுவலகம் நோக்கி
பயணம்....
:'( :'(
-
லேசான மனதாய்
மனம் மாறி
தெளிவாய் போனதாய்
எண்ணம்...
அலுவலக பிரச்சனைகள்
ஓரளவு தீர்ந்த திருப்தி..
கவிதை பக்கம்
கால் பதிக்க முடியாமல்
சிறு நேரமின்மை...
எல்லாம் தீர்ந்த மனதிருப்தி...
புதியகவிதைகளை படைக்க
ஏங்குது நெஞ்சம்..
இனி வரும் கவிதைகள் புதிதாய்
இல்லாவிடினும்
புது "கவி"யாய் மாறினேன் நான்
-
சென்ற வாரம் முழுதும்
சோகமாய் சென்றாலும்
தனிமையை கூட நேசிக்க
கற்றுத்தந்த வாரமாகி
குழப்பம் சூழ
தெளிவு இல்லாமல் அலைந்து
தினமும் சிந்தித்து
குழப்பமே விடையாகி போனதால்
அமைதி காக்க
தொடங்கினேன்..
அலுவலக அலுவல்
கழுத்தை நெரிக்க
தனிமை மனதை அரிக்க
நேற்றோ ஏதோ ஒரு சிந்தனையில்
வண்டியில் பயணிக்க
கவனம் சிதறி
கண் இமைக்கும் நொடிதனில்
நடந்தே முடிந்தது எல்லாமே...
சுதாரித்து எழுந்த பிறகே
அறிந்தேன்
விபத்தில் மாட்டியது
நான்தான் என்று ..:)
தினமும் பலவிபத்துக்களை
நட்பில் கண்ட எனக்கு
இந்த விபத்து ஏனோ வலிக்கவில்லை...
ஓடிவந்த உதவிய உள்ளங்களுக்கு
நன்றி சொல்லி
கவன சிதறலோடு மீண்டும்
என் பயணம்....
வலி மட்டும் இன்னும்..
உடலில் அல்ல உள்ளத்தில் :) :)
-
நீண்ட நாட்களுக்கு பிறகு
தேடி பிடித்தேன் இந்த திரியை
பின்னுக்கு தள்ள பட்டுவிட்டது
என்னை போல..
சந்தோஷமாய் இருப்பது போல
ஒரு மாயை என்னுள்...
முழுதாய் சந்தோசம் எங்கே
தேடலுக்கு விடை
இன்னும் புரியாத புதிர்
நட்புக்கும்
காதல் சாயம் பூசும்
மனிதர்கள்
சிறு பாரம் மீண்டும் என்னுள்...
-
நட்புக்கும்
காதல் சாயம் பூசும்
மனிதர்கள்
சிறு பாரம் மீண்டும்
[/b][/color]
engadapa aduthadhu inum arambikalaiyanu paarthen ..
natpuku kaadhal saayam poosum manithargalin paaravaiyil kolaaru shruthi atharkaaga nee indru en naala la kavithaiyaga podura alavuku feel panuvadhu thavaru...
-
உடைந்த கண்ணாடி
தெரியாமல் ஒட்டவைத்தேன்
கையை கீறாமல்
இதயத்தை கீறிவிட்டு சென்றது....
சென்ற பின் தான் தெரிந்துகொண்டேன்
சிலரின் நிஜ முகங்களை...
கண்ணாடிக்கு நன்றி,..
இருக்கும் போதும் முகம் காட்ட
மறந்தாலும் சென்ற பின்
பலரின் முகத்திரை
காண்பித்த கண்ணாடிக்கு
நன்றிகள் என்றென்றும்
-
மீண்டும் மீண்டும்
கவலை மட்டுமே
கைவசமாய் கவிவசம்..
கோபத்தை மறந்தேன்
அமைதியை கற்றேன்
புரிந்தோர் எல்லாம்
புரியாமலும்
நேசம் எல்லாம் அறியாமலும்
கண் இருந்தும் குருடாய்
மனம் ஏனோ கவலையில்
வேண்டாம் எதுவும்
பொய்யாய் நேசமும்
நட்பும் பாசமும்...
-
எண்ணில்லா சிந்தனைகளோடு
ஏக்கங்கள் நெஞ்சின்னோடு
சோகங்கள் கண்ணோடு
மௌனங்கள் உதட்டினோடு
தவிப்புகளை தவிர்த்து
எதிர்பார்புகளை எரித்து
ஏமாற்றத்தை மரிக்கசெய்து
நிம்மதியாய் வாழ ஆசை ;) ;) ;) ;)
-
shruthi solvadharuku ellam naladhaan iruku neenga follow panunga firstuu ;D
-
naalaikku yaroda naal ;)
-
இந்தவாரம் முழுதுமே
மனம் ஏனோ மகிழ்ச்சியில்
வேலை பளு இல்லாது
கவலை ஏதும் இல்லாமல்
அழகாய் நகர்ந்தன
ஒவ்வொரு நாட்களும்
பிரிவுகள்
புது உறவுகள் என மாறி மாறி
மாற்றம் தந்த வாரம் போலும்,,,
இதே மகிழ்ச்சி தொடராதோ
எந்நாளும்... ;) ;) ;)
-
மகிழ்ச்சி தொடர்ந்திட வேண்டி என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் !!!!
-
இனிமையான நாட்கள்
ஒரு வார விடுமுறை
இரவு பகலாய்
வலை தளத்துள்
சந்தோசத்துக்கு
அளவில்லாமல்
சங்கடங்கள் மறந்து
அழகாய் முடிந்தன...
நாளை அலுவலகம்,
இன்றே கவலை...
-
இன்று என்னால்
இந்நாளின் பொழுதை
இனிதான நாளாக
இருப்பதாய் உணர
இன்று முடிவதற்குள்
இனிதாய் ஒரு சேதி வரும்
என் ஆவலோடு ஒரு காத்திருப்பு
-
உங்கள் காத்திருப்பு நிறைவேற வாழ்த்துக்கள்
-
நீண்ட நாட்களுக்கு பிறகு
தூசி தட்டி மீண்டும்
என் நாளை தொடர போகிறேன்
அலுவலக அலுப்பில்
அனைத்தும் மறந்து
அசதியோடு செல்கின்ற
நாட்களை கொல்ல
நினைக்கிறன்...
கொஞ்சம் ஆசையாய்
இம்சையாய் என் உறவுகளை
கொல்ல நினைக்கின்றேன் ;) ;) ;) ;)
-
வா வா கொள்ளைக்காரியே !
கொல்ல வந்தாலும் சரி
மனதை, கொள்ளைக்கொள்ள
வந்தாலும் சரியே
உனக்காக இங்கிருக்கும்
மன்ற உறவுகள், அள்ள அள்ள
ஆனாலும் உன் இம்சையை
உள்ளம் குளிர ஏற்று கொள்ளும் .......
மீள் வரவிற்கு வாழ்த்துக்கள் !!!
-
தூக்கம் மறக்கும் விழிகள்
கனவை தேடும் உள்ளம்
கனவில் உன் முகம் காண
துடித்து தூக்கம் வராது
முள்ளாய்குத்தும் மெத்தை
இரவெல்லாம் பகலாய்
பகலெல்லாம் உன் நினைவாய்
நினைவுகளை சுமந்து
வாழ துடிக்க
மௌனத்தை கூட மொழியாக்கி
வார்த்தைகளை மறைத்து
சொல்லாத எண்ணங்களை
சொல்லி சொல்லி உன்னோடு
வாழ ஆசை... ;) ;) ;) ;)
-
Solatha ennangal sollidunga. apo soliya ennamayidum.
Sollanumnu thudikaringa. ana sollala. sikram sollunga.
Avaroda senthu vaazha vaazhthukal
-
Nandrigal Gotham ..
-
எங்கோ மறைந்திருந்த
இத்திரியை தேடி பிடித்துவிட்டேன்....
என் நாள் இன்று
விடுமுறையோடு தொடக்கம்...
உள்ளசோர்வும், உடல் சோர்வும்
சோம்பலை தர
விடுமுறை சொல்லிவிட்டு,
அலுவலகமே சென்று இருக்கலாமோ?
இரட்டை மனநிலை,,,
என்ன செய்ய போகிறேன்?
குழப்பம் காலையிலேயே... ;)
-
Ketavudane leave kudukaravana sollanum.
-
Poraamai :D
-
மூன்று நாள் விடுமுறை,
சந்தோஷமாய் முடிவுற்று
மீண்டும் அலுவலகம்...
அதே புத்தக செதுக்கல்..
கொடுமையோ கொடுமை.. :-\
ஒரு வழியாக கேலியும் கிண்டலும்
ஆரம்பமாகி அலுவலக அல்லலை
மறந்து தோழிகளோடு அரட்டை அடித்து,
இன்றைய அலுவலை முடிக்க நினைத்தாலும்
அடுத்து என்ன சொல்லி
விடுமுறை கேட்பது?? 8) 8)
மனம் ஏனோ இதையே சிந்திக்கிறதே ;)
-
Machal nee kavithaila pen puli athu ennaku theriyum ivala arumaiya eluthura ennaku solli thara matten sollura machal me so sad ;D :D ;D
-
எங்கோ பிறந்து
இணையத்தால் இணைந்து
இதயம் நுழைந்து
கொஞ்சும் தமிழால்
கொஞ்சி பேசி
மனதை கொள்ளைக்கொண்டவள்
நயமாய் பேசி நண்பனாய் நடித்து
பாசத்திற்காக ஏங்கியவளை
பாசம் தந்து மோசம் செய்து
பாதியில் சென்றுவனுக்காக
பழகிய எம்மை எல்லாம் விட்டு விட்டு
மரணத்தை முத்தமிட்ட
தோழியே மீண்டும் கேட்பேனோ :'( :'( :'(
உன் கொஞ்சும் தமிழால்
நீ என்னை அழைப்பதை....
இதயம் வெடித்து
உயிர் வாழ்கிறேன்
உன்னை பிரிந்து துடி துடிக்கிறேன்...
மரணமே உனக்கு மரணம் எப்போது?
-
ஒவ்வொரு முறையும்
உடைத்தெறியப்படும்
நம்பிக்கையில்
ஊனமாகிறது உள்ளம்..
-
அப்போ அது நம்பிக்கையா? அவ நம்பிக் கையா?/ :-X
-
நம்பிக்கையில் பல விதம் உண்டு, நம் மீது வைக்கப்படும் நம்பிக்கை, பிறர் மீது வைக்கப்படும் நம்பிக்கை
இந்த கவிதை பிறர் மீது வைக்கப்படு தகர்த்தெறியப்பட்ட நம்பிக்கை பற்றி பேசுவதாய் தோன்று
அப்படிப்பட்ட தகர்த்தெறியப்பட்ட நம்பிக்கைகளால் ஊனப்படும் உள்ளம், ஆறாத ரணத்தையும், அடங்காத வலியையும் கொடுத்து செல்வதோடு அல்லாமல் வேறு பிறர் மீது வைக்கபடும் அல்லது வைத்திருக்கும் நம்பிக்கையை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது
கனமான கவிதை ஸ்ருதி
-
அப்போ அது நம்பிக்கையா? அவ நம்பிக் கையா?/ :-X
என்னுடைய நம்பிக்கை அவ(ன்) நம்பி க்கையா மாறல..உடைஞ்சுப் போச்சு.....
-
நன்றிகள் ஆதி...
மனம் கனமானதால் வார்த்தையில் கனத்தை ஏற்ற வேண்டியுள்ளது..
-
அடுத்து என்ன சொல்லி
விடுமுறை கேட்பது?? 8) 8)
மனம் ஏனோ இதையே சிந்திக்கிறதே :D :D :D :D
வான் மகளுக்கு
மேக காதலனோடு
சண்டைபோலும்
ஊடலை கண்ணீராய் சிந்த
என்னக்குள் ஆனந்தம்..
அடடா ....
விடுமுறைக்கு வேளை வந்துவிட்டதே...
காலையில் அழகாய் புறப்பட்டு
சில்லென வீசும் காற்றும்
முள்ளாய் குத்தும் மழையும்
இருள் சூழ்ந்த வீதியில்
கடமை உணர்வோடு
அலுவலக செல்ல ??? ??? ???
இரெண்டே நிறுத்தத்தில்
அலுவலகம் சென்றடையும்
தூரம் இருக்கையில்
இந்த மழையில் அலுவலக செல்ல வேண்டுமா?? :P
எண்ண அலைகள்
குழப்பத்தில் சுழல
அடுத்த நொடியில் வண்டி தானாக
இல்லம் நோக்கி பயணிக்க
இரண்டு மணிநேர
ஊர் சுற்றலுக்குப் பின்
முழுதாய் நனைந்து
புதிதாய் மலர்ந்த பூவாய்
முகம் மலர அடடே
முகம் பளிச்சென்று இருகின்றதே...
கண்ணாடியில் கண் சிமிட்டி சிரித்து..
விடுமுறை கொண்டாட்டத்தில்
குளிர் கூட இதமாய் போனது....
aiiiiiiii joly leave potachu :D :D
-
அலுவலகத்துக்கு சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போட்டுட்டு மழையில நனஞ்சு ஊர் சுத்திட்டு... எழுத்த பாரு..
ஒரு சந்தேகம்..
வான் மகள்
மேக காதலன்..
ஊடல் கொண்டதால் அழுதது யார்..?
வான் மகள் அழாது. மேக காதலன் தான் அழுதிருப்பானோ?? எத்தனை கஷ்டம் இந்த வான்மகளின் காதலென்று..
என்றும் ஆண்கள் நிலை தான் பாவம் போலும்.. 8) 8) 8) 8)
-
எங்க போனாலும் சந்தேகமா ....
ஊரு சுத்துறது பெரிய விஷயம் இல்லை ..மழையில ஊரு சுத்தறது சூப்பர்...
அதுவும் வண்டியில :P :P :P
-
தேடும் கண்ணுள் கவலை
செயும் செயல் எல்லாம் சூனியமாய்
சுற்றியும் ஏமாற்றமாய்
நம்பிக்கை இழந்த நிலையிலும்
அமைதி என்னுள் குடிவர
சிரம் தாழ்ந்தாலும்
தரம் தாழாது
தமிழை நேசிக்க
பழகி கொண்டேன்...
-
நாம் பழகிய நாட்கள்
உனக்கு ஞாபகமிருந்தால்
எல்லையில்லா நேசம் வைத்து
பழகிய என்னை
எப்படி மறப்பாய்..
-
தோழியே தாய் மொழி தமிழை
நேசிக்க சிரம் தாழவேண்டாம்,
தரமும் தாழ வேண்டாம்,
அன்னை அன்பை மட்டும்
நமக்கு ஊட்டவில்லை, அவள்
பேசிய மொழியயும்தான்,
தமிழ் வழி வந்த நாம் என்றும்
தமி(ழச்சி)ழா என்று சொல்வோம்
தலை நிமிர்ந்து நிற்ப்போம்,
செயல் எல்லாம் சூனியமாயினும்
ஏமாற்றங்கள் நம்மை சூழ்ந்தபோதிலும்
நம்பிக்கை இழந்த நிலையிலும்!!!
-
நன்றிகள் ப்ரெண்டு..
-
ஐந்து அறிவு நாய்
நன்றியோடும்
விசுவாசத்தோடும்
அறிவோடு இருக்கையில்
எல்லாம் இருந்தும் நாம்
சிந்தனை இழந்து
மனதை கீறி பார்க்கும்
மிருகமாய் மாறுவது ஏனோ?
அலுவலக அல்லல் ஒரு புறம்
தினம் தினம் அல்லல் மறு புறம்.
வேண்டாம் என்று விலகி சென்றாலும்
விடாது துரத்தும் மிருகங்கள்...
அலுவலகத்தில் பதவி
வெறிபிடித்த மிருகங்கள்..