FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on April 19, 2017, 12:28:15 AM

Title: மணாளனின் மனதிலே
Post by: VipurThi on April 19, 2017, 12:28:15 AM
கெட்டி மேளம் கொட்ட
பூட்டினேன் மங்கள நாணை
இனி அவள் என்றும் என்னவள்
எனும் எண்ணம் கொண்டு

அவள் விழி நீர் கண்டு எண்ணினேன்
ஆனந்த கண்ணீர் என்று
இரவில் அறிந்தேன் அவள்
ஆனந்தத்தை தொலைத்ததால்
கொண்ட நீர் தான் அதுவென்று

முதல் காதலை மனம்
ஏற்கவில்லை உன்னை காணும் வரை
இன்று யாரையும் விரும்பவில்லை
உன்னை கண்ட பின்பு

உன் மகிழ்வு தான் என்
மகிழ்வும் கண்ணே
ஆனால் உன்னை பிரியும் துணிவோ
இல்லை ஒரு துளியும்

படித்த ஆயிரம் கதைகளாய்
என் வாழ்வும் மாறிடும்
உன்னுடன் இனியதாய்
என்று எண்ணியே வாழ்வேன்
என் ஆயுள் வரை

ஆனால் உன் வாழ்வும்
மண்ணாவதை என்
கண்கொண்டு காண
என்னால் முடியவில்லையே

போதுமடிகண்ணே
உன் வாய் சொல் சொல்லிடு
இக்கணமே நான் மண்ணோடு
போகிறேன் இல்லை உன்
மனதோடு வாழ்கிறேன் :'(
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: MyNa on April 19, 2017, 05:37:31 AM
Vanakam vipurthi..
manavaalanin manakumural manasa negizha vaikithu.. oru aan maganoda ennangala arumaiya solirukinga kavithai varigal la ..

உன் வாய் சொல் சொல்லிடு
இக்கணமே நான் மண்ணோடு
போகிறேன் இல்லை உன்
மனதோடு வாழ்கிறேன் ..

rombave kavarnthiruchu sis intha varigal..

ella thirumanamum virupathoda nadakirathu illai.. kattayathula nadanthalum kadaisivarai sernthu iruka pora antha rendu ullangal anusarichu iruthi varai santhosama iruntha ella thirumanamum nalla illarathaku oru thodakama irukum :)
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: VipurThi on April 19, 2017, 10:05:17 AM
Hi myna sis :D nandri sis ;) neenga thodangi vachinga sis nan chuma continue panen avlo than ;D so thanks to u sis :D
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: Maran on April 27, 2017, 11:39:53 PM




அருமை சகோதரி!  :) அழகான காதலிசம் எழுதி இருக்கீங்க. வாழ்வில் வழியைத் தொலைத்த வலிகள் நிறைந்ததாய் ஒரு ஆணின் பார்வையில், வாழ்த்துக்கள்.  :)




Title: Re: மணாளனின் மனதிலே
Post by: SarithaN on April 28, 2017, 04:27:50 AM
வணக்கம்

தெளிவா நாளைக்கு படிக்கின்றேன்
வந்தது தெரியாமல் வந்திருக்குமா
:) :) :)
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: VipurThi on April 29, 2017, 03:58:28 PM




அருமை சகோதரி!  :) அழகான காதலிசம் எழுதி இருக்கீங்க. வாழ்வில் வழியைத் தொலைத்த வலிகள் நிறைந்ததாய் ஒரு ஆணின் பார்வையில், வாழ்த்துக்கள்.  :)

Rmba nandri maran anna :)
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: ரித்திகா on April 29, 2017, 05:21:34 PM
வணக்கம் பூர்த்தி மா ...
 
 அழகான கவிதை ..!!!
 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ....
 திரும்ப திரும்ப படிக்கிறேன் ....
அழகான வரிகள் ...
'' உன் வாய் சொல் சொல்லிடு
இக்கணமே நான் மண்ணோடு
போகிறேன் இல்லை உன்
மனதோடு வாழ்கிறேன்''
இந்த வரிகளில் மனதைத் தொலைத்தேன் ...

வாழ்த்துக்கள் பூர்த்தி இன்னும் நிறைய
அழகான கவிதைகளைப் படைத்திட ...!!
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! 
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: VipurThi on April 30, 2017, 12:22:47 AM
Hi rithi ;D unmaya sollanum na myna sis OU la eluthina kavithai thodarntha epdi irukum nu try pani eluthinen :) so avangaluku intha pugazh serum :) tnx rithi ma :) neeyum ezhuthikite iru nanum read pana waiting ma :)
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: MyNa on April 30, 2017, 07:15:21 AM
Hi rithi ;D unmaya sollanum na myna sis OU la eluthina kavithai thodarntha epdi irukum nu try pani eluthinen :) so avangaluku intha pugazh serum :) tnx rithi ma :) neeyum ezhuthikite iru nanum read pana waiting ma :)

haha vipurthi..
Ithu muluvathumaai unga muyarchiyilum sinthanaiyilum uruvedutha kavithai..ithula en pangalipunu ethuvum illai sis..naan than santhosa padanum en kavithaiya thodarnthu neenga ivalavu azhagaana arumaiyaana oru bathil kavithaiya uruvaakinathuku.. unga kavithigal ah padikirapo oru vishayam unarthen sis.. unga kavithai varigal romba etharthaamana muraila sulabama manasula aazhaama pathiyithu sis.. thodarnthu neraya ezhuthunga.vazhthukal sis  :)
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: VipurThi on April 30, 2017, 09:03:13 AM
Myna sis  :D nandri sis :) unmaya sollanum na sis enaku ethugai monai la kavithai elutha rmba pudikum :) nan eluthurathu ellarukum puriyura mathiri irukunu neenga sollum bothu rmba happya iruku sis :)
Sis nan unmayathan rithi kita sonnen :) nan intha kavithai eluthanum ninaika karanam unga kavithai than sis :)
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: SarithaN on May 01, 2017, 10:19:39 PM
வணக்கம் விபூமா

யாரோ ஒருவரை காதலித்து
அவனை பிரியும் வலியோடு 
மணப் பெண்ணுக்கு எழும் - கண்ணீர்
கணவன் ஆகியவனுக்கு
ஆனந்த கண்ணீராய்

பலர் தங்கள் வீட்டுப் பிணக்குகளை
வீட்டிலே தீர்க்கவோ
மகிழ்ச்சியை காணவோ முடியாமல்
பிறரது வாழ்வில் விளையாடுவது வேதனை

கவிதை பற்றிய எனது பார்வை
புரிந்த கருப்பொருளை கருத்தாக்கினேன்
 
எனது புரிதல் சரியென்றால் இது சமூகத்தில்
உள்ள ஒரு அவலம்தான் 
நேரடியாகவும் அறிந்திருக்கின்றேன்

வாழ்த்துக்கள் கவிதை காதலின் அவலம்
Title: Re: மணாளனின் மனதிலே
Post by: VipurThi on May 01, 2017, 11:44:06 PM
Sari na :D vazhthuku nandri na :)