FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AnoTH on October 31, 2016, 01:36:52 PM

Title: நான் யார்?
Post by: AnoTH on October 31, 2016, 01:36:52 PM

உனக்குள் ஒருவன் நான்..
உன்னை உயர்த்துபவன் நான்..
பாராட்டுதலை ஏற்படுத்துவது நான்..
உன் மீது நம்பிக்கை கொடுப்பது நான்..

நீ மற்றவர்கள் சொன்னால்
தான் என்னை உணர்ந்துவிடுவாய்.
அதே சமயம் கர்வமும் கொண்டு
விடுவாய்.

நீ அளவோடு என்னை மதித்தால்
நிலைத்து நிற்பாய்.

எல்லை மீறி - நான் என்று நின்றால்
தோற்றுப்போவாய்.

என்னை நீ பயன்படுத்தும்
விதத்தில் பயன்படுத்தினால்
பல இதயங்களை உன்வசப்படுத்துவாய்.

முயற்சித்துக்கொண்டே இரு
என் வளர்ச்சியினால் நீ உயர்வாய்
சரித்திர நாயகனாக.




Title: Re: நான் யார்?
Post by: BlazinG BeautY on October 31, 2016, 04:57:35 PM
ஹாய் தம்பி, அருமையான கவிதை குட்டி,உன்னைப்போல் அழகான வரிகள் ..கவி பயணம் தொடரட்டும் என் அன்பு தம்பி .வாழ்த்துக்கள். 
Title: Re: நான் யார்?
Post by: AnoTH on October 31, 2016, 05:07:58 PM
அன்பு அக்கா உங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி.
என்றும் உங்கள் பாராட்டுதல்களினால் சோம்பல் இழந்து
படைப்புகளை நாட எனது உள்ளம் பயணிக்கிறது.
நன்றி
Title: Re: நான் யார்?
Post by: ரித்திகா on October 31, 2016, 05:30:32 PM
Vanakam anna.....azhagaana kavithai....
Vaazhthukal anna.....
Title: Re: நான் யார்?
Post by: AnoTH on October 31, 2016, 05:43:24 PM
Thankyou my dear sister  :)
Title: Re: நான் யார்?
Post by: இணையத்தமிழன் on November 01, 2016, 11:41:57 AM


நீ அளவோடு என்னை மதித்தால்
நிலைத்து நிற்பாய்.

எல்லை மீறி - நான் என்று நின்றால்
தோற்றுப்போவாய்.




எனதுஅருமை தம்பி அனோத் அருமையான கவிதை ஆழமான வரிகள் தம்பி மேலும் உன் படைப்புக்களை எதிர்நோக்கி காத்திருக்கும் உன் அன்பு அண்ணன்
Title: Re: நான் யார்?
Post by: AnoTH on November 01, 2016, 01:29:06 PM

அண்ணா மிக்க நன்றி.
கவி நடையில் வர்ணனை
அறிவைப்பெற இன்னும்
கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இருப்பினும் ஒரு கருத்தை
முன்வைக்கும் பொழுது
அதனை மற்றோரும்
புரிந்து கொள்வது
மகிழ்ச்சியைத் தருகிறது.

நன்றி பாசத்திற்கும் மரியாதைக்குமுரிய
சகோதரன்
Title: Re: நான் யார்?
Post by: GuruTN on November 02, 2016, 07:02:47 AM
மனிதனின் மனதும் சிந்தையும் கலந்திருக்கும்போது, சிலர் சீரான பாதையில் நடக்க முடியாமல் போய்விடுகின்றது.. தோல்விகள் பல வந்தாலும், துவண்டு போகாதே என்று நம்முள் இருக்கும் தன்னம்பிக்கை நம்மை வழிநடத்தும்போது.. கனவுகள் யாவும் கண்ணெதிரே நடக்க துவங்கும்.. மீண்டும் ஒரு அழகான கவிதையை தந்தமைக்கு நன்றிகள் அனோத்... அன்பு வாழ்த்துக்கள்... இனிதே தொடரட்டும் உங்களது கவிப்பயணம்...

சிறிய பதிவு : தங்களின் தீபாவளி சிறப்பு பட்டி மன்ற பேச்சு பலர் மனதை கவர்ந்ததை போல் என்னையும் வெகுவாக கவர்ந்தது.. அருமையான கருத்துகளை மிக நேர்த்தியான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் அனோத்...
Title: Re: நான் யார்?
Post by: BlazinG BeautY on November 02, 2016, 10:25:35 AM
வணக்கம்  குரு ஜி , உண்மைதான் தோழா .. என் அன்பு குட்டி  எப்பொழுதும் வித்தியாசமா யோசிக்கும் விதம் அருமை. நானும் குட்டியை போல சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறன். நான் அனைவரிடம் இருந்தும் கற்று கொள்ள வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டி. தொடரட்டும் உங்கள் கவி பயணம். புதியதாய் ஒரு புதிய கதை , என்னை கவர்த்ததும் என்னை அழ வைத்த கதையும் கூட . இரண்டும் அற்புதம் குட்டி 
Title: Re: நான் யார்?
Post by: AnoTH on November 02, 2016, 03:46:28 PM
கவிதையை படித்தமைக்கும் நேரம் ஒதுக்கி தங்களது கருத்தையும்
வாழ்த்தையும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
தமிழில் எழுதுவதற்கான வாய்ப்புகள் குறைந்த
நிலையில் FTC  மன்றத்தில் இத்தகைய வாய்ப்புகள்
கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நன்றி சகோதரன் GuruTN 
Title: Re: நான் யார்?
Post by: AnoTH on November 02, 2016, 03:51:13 PM
அக்கா உங்களது பாராட்டுதல்கள் மென்மேலும்
என்னை உற்சாகப்படுத்துவது   எனக்கு கிடைத்த பெருமை.
இன்னும் சிறந்த கவிதைகளை படைக்க
கற்றுக்கொண்டிருக்கிறேன்.
என்னை மேம்படுத்தும்
தங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
Title: Re: நான் யார்?
Post by: SweeTie on November 06, 2016, 06:49:38 AM
உன்  முயற்சியினால்   நீ உயர்வாய்
 இங்கு பாவலனாக.     

 வாழ்த்துக்கள்
Title: Re: நான் யார்?
Post by: AnoTH on November 07, 2016, 01:36:07 PM
அன்புச் சகோதரி Sweetie ,

நான் கற்ற மொழியை
என் தாய்மொழியை
இந்தக்களத்தில் இந்த
மன்றத்தில், என்னால்
முடிந்த படைப்புகளை
நான் பதிவு செய்வது
எனக்கு கிடைத்த பொக்கிஷம்
கற்றுக்கொண்டிருக்கிறேன்
மென்மேலும் படைப்புகளை
சிறப்பாக படைக்க
நன்றி அக்கா பாராட்டுதல்
தட்டிக்கொடுக்கிறது அடுத்த பயணத்தை
தொடர.

நன்றி
Title: Re: நான் யார்?
Post by: Maran on November 07, 2016, 07:55:49 PM



நண்பா அனோத் "நான் யார்" என்ற கேள்வி என்பது மனிதவரலாற்றில் மிக மூத்த கேள்வி. மெய்யியல் கேள்வி. இதைப்பற்றி நிறைய விவாதிக்கலாம். ஆனால், நீங்கள் வேறு கோணத்தில் இதை அணுகி நம்பிக்கை ஊட்டியுள்ளீர்கள். அருமை... வாழ்த்துக்கள் நல்ல சிந்தனை.



Title: Re: நான் யார்?
Post by: AnoTH on November 07, 2016, 10:58:04 PM
இனிய சகோதரன் மாறன்
தங்களுடைய பாராட்டுதல்களுக்கு
மிக்க நன்றி.

இந்தக்கவிதையில் நான் சுட்டிக்காட்டிய
விடயம் ஒவ்வொரு மனிதனின் உள்ளும்
இருக்கக்கூடிய தனிப்பட்ட திறமை தான்
அதை பயன்படுத்தும் விதத்திலும்
மதிக்கும் விதத்திலும் ஒரு மனிதன்
உயர்வை அடைகிறான்.

நன்றி உங்கள் பாராட்டுதல்களுக்கு.
Title: Re: நான் யார்?
Post by: SarithaN on December 11, 2016, 06:24:35 PM
தம்பி அன்பின் வணக்கம்,

நான் எனும் உன் கவியில் என்னையும்
கண்டேன்.

நானெனும் எண்ணம் கடவுளையும்
அற்பமாய் எண்ணும்!
நானெனும் மமதை தன்னையே
அழிக்கும்
நானல்ல! என் சிறப்பு, உயர்வு, புகழ்
பெருமை, செல்வம், அழகு, அறிவு
அனைத்தும் நானெனும் எனக்குத்தந்த
பரமனே பெரியவரெனும் உள்ளம்
எப்போது வருமோ?
வரும்போதே நிலைக்கும் மகிழ்ச்சி!.

உனது கவிதை எச்சரிக்கை.

நானும் என்னுள் சிலவற்றை மாற்றவே வேண்டும்.

வாழ்த்துக்கள் தம்பி, நன்றி

வாழ்க வளமுடன்.
Title: Re: நான் யார்?
Post by: AnoTH on December 11, 2016, 08:44:57 PM
இனிய சகோதரன் சரிதன் அண்ணா,

தங்களுடைய பாராட்டுதலுக்கும்  கருத்துக்கும்
மிக்க நன்றி