FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 29, 2011, 06:26:23 PM

Title: உன் மனைவியாய்
Post by: ஸ்ருதி on October 29, 2011, 06:26:23 PM
என் பொய்யான
கோபம் பிடிக்கும்
என்பாய்......

ஆயிரம் வார்த்தைப்
பேசும் உன்னிடம்
என் ஓர்
வார்த்தை
"ம்"
பிடிக்கும்... என்பாய்......

எனக்கு பிடிக்காத
வண்னத்தை
விளையாட்டாய்
பிடிக்கும் என்றால்
அந்த நிறத்தில்
உடை அணிவாய்...
நான் சொன்னதை
செய்ய பிடிக்கும்
என்பாய்...

நான் பார்த்தும்
பாராமல் நடக்கும்
அந்த ஒரு
நொடி கூட
இன்பம்
என்பாய்....

உன் இமை
மூடும்
நேரத்தில்
நான் மறையும்
அந்த ஒரு
நொடி கொடுமை
என்பாய்....

அன்பே இவை
எல்லாம் இப்போதும்
நான் செய்கிறேன்.....
ஆனால்
இன்று மட்டும்
பிடிக்காமல் போனது
எதனால்....

தூரத்தில் இருந்த
உறவு இன்று
உன் சொந்தமாய்
உன் வீட்டில்
உன் மனைவியாய்
இருந்தும் பிடிக்காமல்
போனது எதனால்......
Title: Re: உன் மனைவியாய்
Post by: RemO on October 29, 2011, 07:19:57 PM
// என் ஓர்
வார்த்தை
"ம்"
பிடிக்கும்... என்பாய்......//

mm sonala pidikuma:D
Title: Re: உன் மனைவியாய்
Post by: Global Angel on October 31, 2011, 04:53:12 AM
aasai 60 mogam 30 pottu pola... ;D
Title: Re: உன் மனைவியாய்
Post by: ஸ்ருதி on October 31, 2011, 09:34:41 PM
aasai 60 mogam 30 pottu pola... ;D
// என் ஓர்
வார்த்தை
"ம்"
பிடிக்கும்... என்பாய்......//

mm sonala pidikuma:D


hehe kavithai sonna CID work parkurathe ivaluku velai
Title: Re: உன் மனைவியாய்
Post by: Global Angel on November 01, 2011, 02:42:52 PM
 ;D ;D ;D ;D